யோசுவா 12 : 1 (ECTA)
யோர்தானுக்கு அப்பால் கதிரவன் உதிக்கும் பக்கம் அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரை கிழக்குப் பகுதியில் அராபா முழுவதிலும் இஸ்ரயேலர் கைப்பற்றிய நாடுகளின் அரசர்கள் இவர்களே;
யோசுவா 12 : 2 (ECTA)
எமோரிய மன்னன் சீகோன் எஸ்போனில் வாழ்ந்தான். அவன் அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையிருக்கும் அராயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் கிலயாதின் பகுதிவரையிலும் அம்மோனியரின் எல்லையான யப்போக்குப் பள்ளத்தாக்குவரையிலும்
யோசுவா 12 : 3 (ECTA)
அராபாவிலிருந்து கிழக்கே கினரோத்துக் கடல்வரையிலும் உப்புக்கடலான அராபா கடல்வரையிலும், கிழக்கு நோக்கி பெத்தசிமோத்து வரையிலும், தெற்கில் பிஸ்கா மலைச்சரிவு வரையிலும் அரசாண்டான்.
யோசுவா 12 : 4 (ECTA)
இரபாயியருள் எஞ்சி இருந்தவனும் பாசானின் மன்னனுமான ஓகின் எல்லை இதுவே; அவன் அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வாழ்ந்தான்.
யோசுவா 12 : 5 (ECTA)
எர்மோன்மலை, சல்காமலை, கெசூரியர், மாக்காத்தியரின் எல்லைவரையிலும் எஸ்போன் மன்னன் சீகோனின் எல்லையான கிலயாதின் பாதிவரையிலும் ஆண்டான்.
யோசுவா 12 : 6 (ECTA)
ஆண்டவரின் ஊழியரான மோசேயும் இஸ்ரயேலரும் அவர்களைத் தோற்கடித்தனர். ஆண்டவரின் ஊழியரான மோசே அதை ரூபனுக்கும் காத்துக்கும் மனாசேயின் பாதிக் குலத்திற்கும் உரிமையாகக் கொடுத்தார்.
யோசுவா 12 : 7 (ECTA)
யோசுவாவும் இஸ்ரயேலரும் கைப்பற்றிய நாடுகளின் மன்னர்கள் இவர்களே. யோர்தானுக்கு மேற்கே பாகால்காதில் லெபனோன் பள்ளத்தாக்கிலிருந்து சேயிர்பக்கம் செல்லும் ஆலாக்கு மலைவரை இருந்த மன்னர்களின் நாட்டை யோசுவா இஸ்ரயேலருக்கு அவர்களின் குலப்பிரிவின்படி உடைமையாக அளித்தார்.
யோசுவா 12 : 8 (ECTA)
மலைச்சரிவு, பள்ளத்தாக்கு, அராபா மலைச்சரிவு, பாலைநிலம், நெகேபு, இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரின் நாடுகள்.
யோசுவா 12 : 9 (ECTA)
எரிகோ மன்னன் ஒருவன்; பெத்தேலுக்கு அருகில் இருந்த ஆயி மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 10 (ECTA)
எருசலேம் மன்னன் ஒருவன்; எபிரோன் மன்னன் ஒருவன்,
யோசுவா 12 : 11 (ECTA)
யார்முத்து மன்னன் ஒருவன்; இலாக்கிசு மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 12 (ECTA)
எக்லோன் மன்னன் ஒருவன்; கெசேர் மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 13 (ECTA)
தெபீர் மன்னன் ஒருவன்; கெதேர் மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 14 (ECTA)
ஒர்மா மன்னன் ஒருவன்; அராது மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 15 (ECTA)
லிப்னா மன்னன் ஒருவன்; அதுல்லாம் மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 16 (ECTA)
மக்கேதா மன்னன் ஒருவன்; பெத்தேல் மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 17 (ECTA)
தப்புவாகு மன்னன் ஒருவன்; ஏபேர் மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 18 (ECTA)
அப்பேக்கு மன்னன் ஒருவன்; இலாசரோன் மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 19 (ECTA)
மாதோன் மன்னன் ஒருவன்; ஆட்சோர் மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 20 (ECTA)
சிம்ரோன் மெரோன் மன்னன் ஒருவன்; அக்சாபு மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 21 (ECTA)
தானாக்கு மன்னன் ஒருவன்; மெகிதோ மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 22 (ECTA)
கெதேசு மன்னன் ஒருவன்; யோக்னயாம் கர்மேல் மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 23 (ECTA)
நாபோத்தோரில் இருந்த தோர் மன்னன் ஒருவன்; கில்காலில் ஒருந்தகோயிம் மன்னன் ஒருவன்.
யோசுவா 12 : 24 (ECTA)
திர்சா மன்னன் ஒருவன்; ஆக மொத்தம் முப்பத்தொரு மன்னர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

BG:

Opacity:

Color:


Size:


Font: