யோசுவா 11 : 1 (ECTA)
யாபினையும் பிற மன்னர்களையும் தோற்கடித்தல் ஆட்சோர் மன்னன் யாபின் இதைக் கேள்வியுற்று மாதோன் மன்னன் யோபாபுக்கும், சிம்ரோன் மன்னனுக்கும், அக்சாபு மன்னனுக்கும் ஆளனுப்பினான்.
யோசுவா 11 : 2 (ECTA)
மலைப்பகுதியின் வடபுறத்திலும், கினரேத்திற்குத் தெற்கில் அராபாவிலும், சமவெளிப்பகுதிகளிலும் மேற்கே நாபோத்தோரில் இருந்த மன்னர்களுக்கும்
யோசுவா 11 : 3 (ECTA)
கிழக்கிலும் மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், மலைவாழ் எபூசியர், மிஸ்பா நாட்டில் எர்மோனின் அடிவாரத்தில் இருந்த இவ்வியர் ஆகியோருக்கும் ஆளனுப்பினான்.
யோசுவா 11 : 4 (ECTA)
அவர்களும் அவர்களுடைய படைகளும் கடற்கரையில் உள்ள மணலைப் போல் எண்ணிறந்த மக்களும் குதிரைகளும் தேர்களும் சென்றனர்.
யோசுவா 11 : 5 (ECTA)
அந்த மன்னர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக மேரோம் நீரோடைக் கரையில் இஸ்ரயேலருடன் போரிடப் பாளையம் இறங்கினார்கள்.
யோசுவா 11 : 6 (ECTA)
ஆண்டவர் யோசுவாவிடம், “அவர்கள் முன் அஞ்சாதே, ஏனெனில், நாளை இந்நேரம் நான் அவர்கள் அனைவரையும் கொலையுண்டவர்களாய் இஸ்ரயேல்முன் ஒப்படைப்பேன். அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை நீ வெட்டுவாய். அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்குவாய்" என்றார்.
யோசுவா 11 : 7 (ECTA)
யோசுவாவும் அவருடன் இருந்த எல்லாப் போர்வீரர்களும் திடீரென அவர்களுக்கெதிராக மேரோம் நீரோடைக்கருகில் வந்து அவர்களைத் தாக்கினர்.
யோசுவா 11 : 8 (ECTA)
ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்தார். அவர்களை இஸ்ரயேலர் கொன்றனர். அவர்களைப் புகழ்மிக்க சீதோன் வரையிலும், மிஸ்ரபோத்துமயிம் வரையிலும், கிழக்கே மிஸ்பே பள்ளத்தாக்கு வரையிலும் எவரும் தப்பி விடாதவாறு தாக்கினர்.
யோசுவா 11 : 9 (ECTA)
ஆண்டவர் சொன்னபடியே யோசுவா அவர்களுக்குச் செய்தார். குதிரைகளின் குதிகால் நரம்புகளை வெட்டினார். அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்கினார்.
யோசுவா 11 : 10 (ECTA)
இச்சமயம் யோசுவா திரும்பி வந்து ஆட்சோரைக் கைப்பற்றினார். அதன் மன்னனை வாளால் தாக்கினார். ஏனெனில், ஆட்சோர் அந்த அரசுகள் அனைத்திற்கும் தலைமை தாங்கி வந்தது.
யோசுவா 11 : 11 (ECTA)
இஸ்ரயேலர் அந்நகரில் இருந்த உயிர்கள் அனைத்தையும் வாள் முனையில் கொன்று அடியோடு அழித்தனர்; ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை; ஆட்சோரைத் தீக்கிரையாக்கினர்.
யோசுவா 11 : 12 (ECTA)
யோசுவா, அந்த எல்லா நகர்களையும் அவற்றின் மன்னர்களையும் கைப்பற்றினார். ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டிருந்தபடி அவர்களை வாள்முனையில் கொன்று அடியோடு அழித்தார்.
யோசுவா 11 : 13 (ECTA)
மேட்டுப் பகுதியில் நிறுவப்பட்ட நகர்களை இஸ்ரயேல் மக்கள் எரிக்கவில்லை. யோசுவா ஆட்சோரை மட்டும் எரித்தார்.
யோசுவா 11 : 14 (ECTA)
அந்நகர்களில் கைப்பற்றிய பொருள்களையும் கால்நடைகளையும் இஸ்ரயேலர் கொள்ளைப் பொருளாகக் கொண்டனர். மனிதர்களை மட்டும், எவரும் தப்பாமல் அடியோடு அழியும்வரை, வாள்முனையில் கொன்றனர்; ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை.
யோசுவா 11 : 15 (ECTA)
தம் ஊழியர் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி, மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தார். யோசுவா அதன்படியே செய்தார். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவை அனைத்திலும் யோசுவா ஒன்றையும் விட்டுவிடவில்லை.
யோசுவா 11 : 16 (ECTA)
யோசுவா கைப்பற்றிய நிலப்பகுதிகள் யோசுவா இந்த எல்லா நாடுகளையும், மலைகளையும், நெகேபு அனைத்தையும், கோசேன் நாடு முழுவதையும், சமவெளிப் பகுதிகளையும், அராபாவையும், இஸ்ரயேல் மலைகளையும் அதன் சமவெளிப் பகுதிகளையும் கைப்பற்றினார்.
யோசுவா 11 : 17 (ECTA)
ஆலாக்கு மலையிலிருந்து சேயிர் வரை உயர்ந்து செல்லும் எர்மோன் மலைக்குக்கீழ் லெபனோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகால்காது வரை இருந்த பகுதிகளைக் கைப்பற்றி, அவற்றின் அரசர்களைப் பிடித்து, வெட்டிக் கொன்றார்.
யோசுவா 11 : 18 (ECTA)
யோசுவா அந்த அரசர்களுடன் நீண்டநாள் போர் புரிந்தார்.
யோசுவா 11 : 19 (ECTA)
கிபயோன் குடிமக்களான இவ்வியரைத்தவிர வேறெந்த நகரினரும் இஸ்ரயேலருடன் நல்லுறவு கொள்ளவில்லை. எல்லோரையும் போரில் இஸ்ரயேலர் தோற்கடித்தனர்.
யோசுவா 11 : 20 (ECTA)
இஸ்ரயேலருடன் போர் புரியுமாறு அவர்கள் இதயங்களை ஆண்டவர் கடினப்படுத்தினார். அதனால் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டதுபோல் அவர்கள் இரக்கமின்றி அழிக்கப்பட்டனர். * இச 7:16..
யோசுவா 11 : 21 (ECTA)
இச்சமயம் யோசுவா சென்று, மலைநாடு, எபிரோன், தெபீர், அனாபு, யூதாவின் அனைத்து மலைப்பகுதிகள், இஸ்ரயேலின் அனைத்து மலைப்பகுதிகள் ஆகியவற்றிலிருந்த அனாக்கியரை அழித்தார். அவர்களை அவர்களின் நகர்களுடன் யோசுவா முற்றிலும் அழித்தார்.
யோசுவா 11 : 22 (ECTA)
இஸ்ரயேல் நாட்டில் அனாக்கியர் பெருமளவில் எஞ்சி இருக்கவில்லை. காசா, காத்து, அஸ்தோது ஆகிய இடங்களில் மட்டும் எஞ்சி இருந்தனர்.
யோசுவா 11 : 23 (ECTA)
ஆண்டவர் மோசேக்குக் கூறிய அனைத்தின்படி, யோசுவா எல்லா நிலத்தையும் கைப்பற்றினார். யோசுவா அதை அவர்கள் குலப் பிரிவுகளின்படி இஸ்ரயேலுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். நாடு முழுவதும் போரின்றி அமைதிகண்டது.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23