யோவான் 7 : 1 (ECTA)
5.கூடார விழாஇயேசு திருவிழாவுக்குச் செல்லுதல் இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.
யோவான் 7 : 2 (ECTA)
யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. [* லேவி 23:34; இச 16: 13 ]
யோவான் 7 : 3 (ECTA)
இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, “நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.
யோவான் 7 : 4 (ECTA)
ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!” என்றனர்.
யோவான் 7 : 5 (ECTA)
ஏனெனில், அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
யோவான் 7 : 6 (ECTA)
இயேசு அவர்களிடம், “எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை; உங்களுக்கு எந்த நேரமும் ஏற்ற நேரம்தான்.
யோவான் 7 : 7 (ECTA)
உலகு உங்களை வெறுக்க இயலாது; ஆனால், என்னை வெறுக்கிறது. ஏனெனில், உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன்.
யோவான் 7 : 8 (ECTA)
நீங்கள் திருவிழாவுக்குப் போங்கள்; நான் வரவில்லை. ஏனெனில், எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.
யோவான் 7 : 9 (ECTA)
அவ்வாறு சொன்ன அவர் கலிலேயாவிலேயே தங்கிவிட்டார்.
யோவான் 7 : 10 (ECTA)
தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் ,அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.
யோவான் 7 : 11 (ECTA)
திருவிழாவின்போது, “அவர் எங்கே?” என்று யூதர்கள் இயேசுவைத் தேடினார்கள்.
யோவான் 7 : 12 (ECTA)
மக்கள் கூடியிருந்த இடங்களிலெல்லாம் இயேசுவைப்பற்றிக் காதோடு காதாய்ப் பலவாறு பேசிக் கொண்டனர். சிலர், “அவர் நல்லவர்” என்றனர். வேறு சிலர், “இல்லை, அவர் மக்கள் கூட்டத்தை ஏமாற்றுகிறார்” என்றனர்.
யோவான் 7 : 13 (ECTA)
ஆனால், யூதர்களுக்கு அஞ்சியதால் எவரும் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.
யோவான் 7 : 14 (ECTA)
பாதித் திருவிழா நேரத்தில் இயேசு கோவிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார்.
யோவான் 7 : 15 (ECTA)
“படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?” என்று யூதர்கள் வியப்புற்றார்கள்.
யோவான் 7 : 16 (ECTA)
இயேசு மறுமொழியாக, “நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல; அது என்னை அனுப்பியவருடையது.
யோவான் 7 : 17 (ECTA)
அவருடைய திருவுளத்தின்படி நடக்க விரும்புவோர் இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா? அல்லது அதனை நானாகக் கொடுக்கிறேனா என்பதை அறிந்து கொள்வர்.
யோவான் 7 : 18 (ECTA)
தாமாகப் பேசுபவர் தமக்கே பெருமை தேடிக்கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர்; அவரிடத்தில் பொய்ம்மை இல்லை.
யோவான் 7 : 19 (ECTA)
“மோசே உங்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்தார் அல்லவா? எனினும் உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. இப்போது என்னையும் கொல்லப்பார்க்கிறீர்களே!” என்றார்.
யோவான் 7 : 20 (ECTA)
மக்கள் மறுமொழியாக, “யார் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்? உனக்குப் பேய் பிடித்திருக்கிறது” என்றனர்.
யோவான் 7 : 21 (ECTA)
இயேசு அவர்களைப் பார்த்து, “ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலைப் பற்றி நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள்.
யோவான் 7 : 22 (ECTA)
மோசே கொடுத்த விருத்தசேதனச் சட்டப்படி, நீங்களே ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்கிறீர்கள்! — உண்மையில் விருத்தசேதனம் மோசேயிடமிருந்து வந்தது அல்ல; அது நம் மூதாதையர் காலத்திலிருந்தே உள்ளது — [* லேவி 12:3; தொநூ 17:10; திப 7: 8 ]
யோவான் 7 : 23 (ECTA)
ஒருவர் ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்தாலும் ஓய்வு நாள் சட்டம் மீறப்படுவதில்லையானால், அதே ஓய்வுநாளில் நான் முழு மனிதனையும் நலமாக்கியதற்காக நீங்கள் சினம் கொள்வதேன்? [* மத் 12:1-5,11,12; லூக் 14: 5 ]
யோவான் 7 : 24 (ECTA)
வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்” என்றார்.இயேசுதான் மெசியாவோ? [* செக் 7: 9 ]
யோவான் 7 : 25 (ECTA)
எருசலேம் நகரத்தவர் சிலர், “இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்?
யோவான் 7 : 26 (ECTA)
இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ?
யோவான் 7 : 27 (ECTA)
ஆனால், மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே” என்று பேசிக் கொண்டனர். [* எபி 7: 3 ]
யோவான் 7 : 28 (ECTA)
ஆகவே, கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும், நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது.
யோவான் 7 : 29 (ECTA)
எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே” என்றார்.
யோவான் 7 : 30 (ECTA)
இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும், அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.
யோவான் 7 : 31 (ECTA)
கூட்டத்திலிருந்த பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அவர்கள், “மெசியா வரும்போது இவர் செய்வதைவிடவா மிகுதியான அரும் அடையாளங்களைச் செய்யப் போகிறார்?” என்று பேசிக்கொண்டார்கள்.
யோவான் 7 : 32 (ECTA)
இயேசுவைப் பிடிக்க ஆள் அனுப்புதல் இயேசுவைப்பற்றி மக்கள் இவ்வாறெல்லாம் காதோடு காதாய்ப் பேசுவதைப் பரிசேயர் கேள்விப்பட்டனர். எனவே, அவர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடித்து வரும்படி காவலர்களை அனுப்பினார்கள்.
யோவான் 7 : 33 (ECTA)
எனவே இயேசு, “இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்; பின்னர் என்னை அனுப்பியவரிடம் செல்வேன்.
யோவான் 7 : 34 (ECTA)
நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனால், காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது” என்றார். [* இச 4:29; நீமொ 1:28; எசா 55:6; ஓசே 5: 6 ]
யோவான் 7 : 35 (ECTA)
இதை கேட்ட யூதர்கள், “நாம் காணமுடியாதவாறு இவர் எங்கே செல்லப்போகிறார்? ஒரு வேளை கிரேக்கரிடையே சிதறி வாழ்வோரிடம் சென்று கிரேக்கருக்கு கற்றுக்கொடுக்கப் போகிறாரோ?
யோவான் 7 : 36 (ECTA)
‘நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனால், காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது’ என்றாரே! இதன் பொருள் என்ன?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
யோவான் 7 : 37 (ECTA)
ஆவியாரே வாழ்வு தரும் தண்ணீர் திருவிழாவின் இறுதியான பெருநாளில் இயேசு எழுந்து நின்று உரத்த குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்.
யோவான் 7 : 38 (ECTA)
மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என்றார். [* நீமொ 18:4; எசா 55:1, 3 ]
யோவான் 7 : 39 (ECTA)
தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக்குறித்தே அவர் இவ்வாறு சொன்னார். தூய ஆவி இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில், இயேசு மாட்சிப்படுத்தப்படவில்லை.
யோவான் 7 : 40 (ECTA)
இயேசுவை முன்னிட்டு மக்களிடையே பிளவு ஏற்படுதல் கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றனர்.
யோவான் 7 : 41 (ECTA)
வேறு சிலர், “மெசியா இவரே” என்றனர். மற்றும் சிலர், “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?
யோவான் 7 : 42 (ECTA)
தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்றனர். [* மீக் 5: 2 ]
யோவான் 7 : 43 (ECTA)
இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.
யோவான் 7 : 44 (ECTA)
சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால், யாரும் அவரைத் தொடவில்லை.
யோவான் 7 : 45 (ECTA)
தலைவர்கள் நம்பாமை தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள்.
யோவான் 7 : 46 (ECTA)
காவலர் மறுமொழியாக, “அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர்.
யோவான் 7 : 47 (ECTA)
பரிசேயர் அவர்களைப் பார்த்து, “நீங்களும் ஏமாந்து போனீர்களோ?
யோவான் 7 : 48 (ECTA)
தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா?
யோவான் 7 : 49 (ECTA)
இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர்.
யோவான் 7 : 50 (ECTA)
அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், [* யோவா 3:1; 19: 39 ]
யோவான் 7 : 51 (ECTA)
“ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார். [* இச 17: 4 ]
யோவான் 7 : 52 (ECTA)
அவர்கள் மறுமொழியாக, “நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்” என்றார்கள்.
யோவான் 7 : 53 (ECTA)
**அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள். * அடைப்புக் குறிக்குள் உள்ள இவ்வசனங்கள் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53