யோவான் 12 : 1 (ECTA)
நறுமணத் தைலம் பூசுதல்
(மத் 26:6-13; மாற் 14:3-9)
பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார்.
யோவான் 12 : 2 (ECTA)
அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார்.
யோவான் 12 : 3 (ECTA)
மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம்* கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது. [* லூக் 7:37, 38 ; ஒரு லித்ரா என்பது கிரேக்க பாடம். ]
யோவான் 12 : 4 (ECTA)
இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து,
யோவான் 12 : 5 (ECTA)
“இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான்.
யோவான் 12 : 6 (ECTA)
ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு.
யோவான் 12 : 7 (ECTA)
அப்போது இயேசு, “மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.
யோவான் 12 : 8 (ECTA)
ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால், நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை” என்றார். [* இச 15: 11 ]
யோவான் 12 : 9 (ECTA)
இலாசரைக் கொலை செய்யத் திட்டம் இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச் செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள்.
யோவான் 12 : 10 (ECTA)
ஆதலால், தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள்.
யோவான் 12 : 11 (ECTA)
ஏனெனில், இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.
யோவான் 12 : 12 (ECTA)
இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல்
(மத் 21:1-11; மாற் 11:1-11; லூக் 19:28-40)
மறுநாள் திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று,
யோவான் 12 : 13 (ECTA)
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், “ஓசன்னா!* ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். [* திபா 118:26; திவெ 7: 9 ; ‘ஓசன்னா’ என்னும் எபிரேயச் சொல்லுக்கு ‘விடுவித்தருளும்’ என்பது பொருள். . ஆனால் எபிரேய வழக்கில் வாழ்த்தைத் தெரிவிக்கும் சொல்லாகவும் அது அமைந்தது. ]
யோவான் 12 : 14 (ECTA)
(14-15) இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார். “மகளே சீயோன், அஞ்சாதே! இதோ! உன் அரசர் வருகிறார்; கழுதைக் குட்டியின்மேல், ஏறி வருகிறார்” என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார்.
யோவான் 12 : 15 (ECTA)
[* செக் 9: 9 ]
யோவான் 12 : 16 (ECTA)
அந்நேரத்தில் அவருடைய சீடர்கள் இச்செயல்களின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. அவரைப்பற்றி மறைநூலில் எழுதப்பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது இயேசு மாட்சி பெற்ற பிறகே அவர்கள் நினைவுக்கு வந்தது.
யோவான் 12 : 17 (ECTA)
இறந்து கல்லறையில் வைக்கப்பட்டிருந்த இலாசாரை இயேசு கூப்பிட்டு உயிர்த்தெழச் செய்தபோது அவரோடு இருந்த மக்கள் நடந்ததைக் குறித்துச் சான்று பகர்ந்தனர்.
யோவான் 12 : 18 (ECTA)
இயேசு இந்த அரும் அடையாளத்தைச் செய்தார் என்று கேள்வியுற்றதால் மக்கள் திரளாய் அவரை எதிர்கொண்டு சென்றார்கள்.
யோவான் 12 : 19 (ECTA)
இதைக் கண்ட பரிசேயர், “பார்த்தீர்களா! நம் திட்டம் எதுவும் பயனளிக்கவில்லை. உலகமே அவன் பின்னே போய்விட்டது” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். [* யோவா 11:47, 48 ]
யோவான் 12 : 20 (ECTA)
கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புதல் வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.
யோவான் 12 : 21 (ECTA)
இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கேட்டுக் கொண்டார்கள்.
யோவான் 12 : 22 (ECTA)
பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.
யோவான் 12 : 23 (ECTA)
இயேசு அவர்களைப் பார்த்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
யோவான் 12 : 24 (ECTA)
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். [* 1 கொரி 15: 36 ]
யோவான் 12 : 25 (ECTA)
தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். [* மத் 10:39; 16:25; மாற் 8:35; லூக் 9:24; 17: 33 ]
யோவான் 12 : 26 (ECTA)
எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்றார்.
யோவான் 12 : 27 (ECTA)
மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும் மேலும் இயேசு, “இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ‘தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்’ என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன். [* மத் 26:37; லூக் 22:40-46; யோவா 6:38; 11:33; 13:21; 18:4; எபி 5:7, 8 ]
யோவான் 12 : 28 (ECTA)
தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்” என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், “மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்” என்று ஒலித்தது.
யோவான் 12 : 29 (ECTA)
அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, “அது இடிமுழக்கம்” என்றனர். வேறு சிலர், “அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு” என்றனர்.
யோவான் 12 : 30 (ECTA)
இயேசு அவர்களைப் பார்த்து, “இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.
யோவான் 12 : 31 (ECTA)
இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். [* லூக் 10:18; திவெ 12:9; 20:1- 6 ]
யோவான் 12 : 32 (ECTA)
நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்” என்றார்.
யோவான் 12 : 33 (ECTA)
தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
யோவான் 12 : 34 (ECTA)
மக்கள் கூட்டத்தினர் அவரைப் பார்த்து, “மெசியா என்றும் நிலைத்திருப்பார் எனத் திருச்சட்ட நூலில் கூறியுள்ளதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அப்படியிருக்க, மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும் என நீர் எப்படிச் சொல்லலாம்? யார் இந்த மானிடமகன்?” என்று கேட்டனர். [* திபா 110:4; எசா 9:7; எசே 37:25; தானி 7: 14 ]
யோவான் 12 : 35 (ECTA)
இயேசு அவர்களிடம், “இன்னும் சிறிது காலமே ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்கள்மேல் வெற்றி கொள்ளாதவாறு ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்து செல்லுங்கள். இருளில் நடப்பவர் எங்கே செல்கிறார் என்பது அவருக்குத் தெரியாது.
யோவான் 12 : 36 (ECTA)
ஒளி உங்களோடு இருக்கும்போதே ஒளியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது ஒளியைச் சார்ந்தவர்கள் ஆவீர்கள்” என்றார். இப்படிச் சொன்னபின் இயேசு அவர்களிடமிருந்து மறைவாகப் போய்விட்டார்.
யோவான் 12 : 37 (ECTA)
அவர்கள் முன் இயேசு இத்தனை அரும் அடையாளங்களைச் செய்திருந்தும் அவர்கள் அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
யோவான் 12 : 38 (ECTA)
“ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?” என்ற இறைவாக்கினர் எசாயாவின் கூற்று இவ்வாறு நிறைவேறியது. [* எசா 53: 1 ]
யோவான் 12 : 39 (ECTA)
(39-40) “அவர்கள் கண்ணால் காணாமலும் உள்ளத்தால் உணராமலும், மனம்மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி அவர்களுடைய கண்ணை மூடச்செய்தார். உள்ளத்தை மழுங்கச் செய்தார்” என்பது அவர்களால் நம்பமுடியாத காரணத்தை விளக்கும் எசாயாவின் இன்னொரு கூற்று.
யோவான் 12 : 40 (ECTA)
[* எசா 6:9, 10 ]
யோவான் 12 : 41 (ECTA)
எசாயா மெசியாவின் மாட்சியைக் கண்டதால்தான் அவரைப்பற்றி இவ்வாறு கூறினார்.
யோவான் 12 : 42 (ECTA)
எனினும் தலைவர்களில்கூடப் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். ஆனால், பரிசேயருக்கு அஞ்சி அவர்கள் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி ஒப்புகொண்டால் அவர்கள் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள்.
யோவான் 12 : 43 (ECTA)
அவர்கள் கடவுள் அளிக்கும் பெருமையைவிட மனிதர் அளிக்கும் பெருமையையே விரும்பினார்கள்.
யோவான் 12 : 44 (ECTA)
தீர்ப்பு அளிப்பது இயேசுவின் வார்த்தை இயேசு உரத்த குரலில் கூறியது: “என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்.
யோவான் 12 : 45 (ECTA)
என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்.
யோவான் 12 : 46 (ECTA)
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.
யோவான் 12 : 47 (ECTA)
நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில், நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.
யோவான் 12 : 48 (ECTA)
என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும்.
யோவான் 12 : 49 (ECTA)
ஏனெனில், நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும், என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். [* இச 18:18, 19 ]
யோவான் 12 : 50 (ECTA)
அவருடைய கட்டளை நிலை வாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே, நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்” .

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50