யோவான் 10 : 1 (ECTA)
ஆட்டுக் கொட்டில் பற்றிய உவமை “நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர்.
யோவான் 10 : 2 (ECTA)
வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர்.
யோவான் 10 : 3 (ECTA)
அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார்.
யோவான் 10 : 4 (ECTA)
தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில், அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். [* விப 13: 22 ]
யோவான் 10 : 5 (ECTA)
அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில், அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.”
யோவான் 10 : 6 (ECTA)
இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால், அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
யோவான் 10 : 7 (ECTA)
இயேசுவே நல்ல ஆயர் மீண்டும் இயேசு கூறியது: “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே.
யோவான் 10 : 8 (ECTA)
எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை.
யோவான் 10 : 9 (ECTA)
நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். [* திபா 23:1- 3 ]
யோவான் 10 : 10 (ECTA)
திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால், நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். [* யோவா 10: 28 ]
யோவான் 10 : 11 (ECTA)
நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். [* எசே 34:1-32; எபி 13: 20 ]
யோவான் 10 : 12 (ECTA)
“கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில், அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். [* எரே 23:1-3; செக் 11: 17 ]
யோவான் 10 : 13 (ECTA)
கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.
யோவான் 10 : 14 (ECTA)
(14-15) நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.
யோவான் 10 : 15 (ECTA)
[* மத் 11:27; லூக் 10: 22 ]
யோவான் 10 : 16 (ECTA)
இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். [* எசே 37:24; எபே 2:14,15; 4:4, 5 ]
யோவான் 10 : 17 (ECTA)
தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில், நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.
யோவான் 10 : 18 (ECTA)
என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.”
யோவான் 10 : 19 (ECTA)
இவ்வாறு இயேசு சொன்னதால் யூதரிடையே மீண்டும் பிளவு ஏற்பட்டது.
யோவான் 10 : 20 (ECTA)
அவர்களுள் பலர், “அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது; பித்துப்பிடித்து அலைகிறான்; ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்?” என்று பேசிக் கொண்டனர்.
யோவான் 10 : 21 (ECTA)
ஆனால், மற்றவர்கள், “பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும்? பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா?” என்று கேட்டார்கள்.
யோவான் 10 : 22 (ECTA)
6.கோவில் அர்ப்பண விழாயூதர்கள் இயேசுவை ஏற்க மறுத்தல் எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம்.
யோவான் 10 : 23 (ECTA)
கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்து கொண்டிருந்தார்.
யோவான் 10 : 24 (ECTA)
யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள்.
யோவான் 10 : 25 (ECTA)
இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள் தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன.
யோவான் 10 : 26 (ECTA)
ஆனால், நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் என் மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல. [* 1 கொரி 2: 14 ]
யோவான் 10 : 27 (ECTA)
என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
யோவான் 10 : 28 (ECTA)
நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.
யோவான் 10 : 29 (ECTA)
அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.* [* இச 32:39; எசா 43: 13 ; ‘என் தந்தை எனக்களித்தது அனைத்திலும் பெரிது. . அதை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது’ எனவும் இவ்வசனத்தை மொழிபெயர்க்கலாம். ]
யோவான் 10 : 30 (ECTA)
நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார்.
யோவான் 10 : 31 (ECTA)
அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர்.
யோவான் 10 : 32 (ECTA)
இயேசு அவர்களைப் பார்த்து, “தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.
யோவான் 10 : 33 (ECTA)
யூதர்கள் மறுமொழியாக, “நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில், மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்” என்றார்கள். [* லேவி 24: 16 ]
யோவான் 10 : 34 (ECTA)
இயேசு அவர்களைப் பார்த்து, “‘நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்’ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? [* திபா 82: 6 ]
யோவான் 10 : 35 (ECTA)
கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. [* எபி 1: 1 ]
யோவான் 10 : 36 (ECTA)
அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறை மகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?
யோவான் 10 : 37 (ECTA)
நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம்.
யோவான் 10 : 38 (ECTA)
ஆனால், நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” என்றார். [* யோவா 14:11; 17: 21 ]
யோவான் 10 : 39 (ECTA)
இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால், அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார். [* லூக் 4:30; யோவா 8: 39 ]
யோவான் 10 : 40 (ECTA)
யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். [* மத் 19:1; மாற் 10:1; யோவா 1: 28 ]
யோவான் 10 : 41 (ECTA)
பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், “யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால், அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று” எனப் பேசிக்கொண்டனர்.
யோவான் 10 : 42 (ECTA)
அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42