யோவான் 1 : 1 (ECTA)
1.முன்னுரைப் பாடல்வாக்கு மனிதராதல் தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.* [* 1 யோவா , 2 ; ‘அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது’ என்னும் சொற்றொடரை ‘அவ்வாக்கு கடவுள் தன்மை கொண்டிருந்தது’ எனவும் மொழிபெயர்க்கலாம். ]
யோவான் 1 : 2 (ECTA)
வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.
யோவான் 1 : 3 (ECTA)
அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. [* திபா 33:9; கொலோ 1:15-20; எபி 1:1-3; திப 3: 14 ]
யோவான் 1 : 4 (ECTA)
அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.
யோவான் 1 : 5 (ECTA)
அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.* [* யோவா 8:12; 1 யோவா 2: 8 ; ‘இருள் அதன் மேல் வெற்றி கொள்ளவில்லை’ என்பதை ‘இருள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை’ என்றும் மொழிபெயர்க்கலாம். ]
யோவான் 1 : 6 (ECTA)
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். [* மத் 3:1; மாற் 1:4; லூக் 3:1- 2 ]
யோவான் 1 : 7 (ECTA)
அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார்.
யோவான் 1 : 8 (ECTA)
அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.
யோவான் 1 : 9 (ECTA)
அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.
யோவான் 1 : 10 (ECTA)
ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. [* 1 யோவா 2: 13 ]
யோவான் 1 : 11 (ECTA)
அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்.* அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. * ‘அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்’ என்னும் சொற்றொடரை ‘அவர் தமக்குரிய இடத்திற்கு வந்தார்’ எனவும் மொழிபெயர்க்கலாம்.
யோவான் 1 : 12 (ECTA)
அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். [* 1 யோவா 3: 2 ]
யோவான் 1 : 13 (ECTA)
அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்லர்; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.
யோவான் 1 : 14 (ECTA)
வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். [* விப 25:8,9; லேவி 26:11,12; 1 அர 8: 27 ]
யோவான் 1 : 15 (ECTA)
யோவான் அவரைக் குறித்து, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்” என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.
யோவான் 1 : 16 (ECTA)
இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். [* கொலோ 2:9, 10 ]
யோவான் 1 : 17 (ECTA)
திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. [* விப 34:10, 32 ]
யோவான் 1 : 18 (ECTA)
கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார். [* விப 33:20; 1 யோவா 4:12; கொலோ 1: 15 ]
யோவான் 1 : 19 (ECTA)
2.முதல் பாஸ்கா விழாதிருமுழுக்கு யோவான் சான்று பகர்தல்
(மத் 3:1-12; மாற் 1:7-8; லூக் 3:15-17)
எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார்.
யோவான் 1 : 20 (ECTA)
இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.
யோவான் 1 : 21 (ECTA)
அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார் “நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார். [* திப 13: 25 ]
யோவான் 1 : 22 (ECTA)
அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள்.
யோவான் 1 : 23 (ECTA)
அதற்கு அவர், “‘ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே” என்றார். [* எசா 40: 3 ]
யோவான் 1 : 24 (ECTA)
பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்
யோவான் 1 : 25 (ECTA)
அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
யோவான் 1 : 26 (ECTA)
யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;
யோவான் 1 : 27 (ECTA)
அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார்.
யோவான் 1 : 28 (ECTA)
இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
யோவான் 1 : 29 (ECTA)
மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். [* எசா 53:7, 12 ]
யோவான் 1 : 30 (ECTA)
எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.
யோவான் 1 : 31 (ECTA)
இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால், இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார்.
யோவான் 1 : 32 (ECTA)
தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். [* எசா 11:2; 61: 1 ]
யோவான் 1 : 33 (ECTA)
இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால், தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார்.
யோவான் 1 : 34 (ECTA)
நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.” [* எசா 42:1; லூக் 9:15; 23: 35 ]
யோவான் 1 : 35 (ECTA)
முதல் சீடர்களை அழைத்தல் மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.
யோவான் 1 : 36 (ECTA)
இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்றார்.
யோவான் 1 : 37 (ECTA)
அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
யோவான் 1 : 38 (ECTA)
இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி*, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். * ‘ரபி’ என்னும் எபிரேயச் சொல்லுக்குப் ‘போதகர்’ என்பது பொருள்.
யோவான் 1 : 39 (ECTA)
அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.
யோவான் 1 : 40 (ECTA)
யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.
யோவான் 1 : 41 (ECTA)
அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். ‘மெசியா’ என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.
யோவான் 1 : 42 (ECTA)
பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்” என்றார். ‘கேபா’ என்றால் ‘பாறை’* என்பது பொருள். * ‘பாறை’ என்பதன் கிரேக்கச் சொல் ‘பேதுரு’ ஆகும்..
யோவான் 1 : 43 (ECTA)
பிலிப்பு, நத்தனியேல் ஆகியோரை அழைத்தல் மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, “என்னைப் பின்தொடர்ந்து வா” எனக் கூறினார்.
யோவான் 1 : 44 (ECTA)
பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.
யோவான் 1 : 45 (ECTA)
பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார். [* இச 18:18; திப 26: 22 ]
யோவான் 1 : 46 (ECTA)
அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்.
யோவான் 1 : 47 (ECTA)
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார்.
யோவான் 1 : 48 (ECTA)
நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார்.
யோவான் 1 : 49 (ECTA)
நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.
யோவான் 1 : 50 (ECTA)
அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார்.
யோவான் 1 : 51 (ECTA)
மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார். [* தொநூ 28: 12 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51