யோவேல் 1 : 1 (ECTA)
பெத்துவேலின் மகனான யோவேலுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே:
யோவேல் 1 : 2 (ECTA)
வயல்வெளிகள் பாழடைந்ததைக் கண்ட மக்களின் அழுகுரல் முதியோரே, இதைக் கேளுங்கள்; நாட்டிலிலுள்ள குடிமக்களே, நீங்கள் அனைவரும் செவி கொடுங்கள்; உங்கள் நாள்களிலாவது, உங்கள் தந்தையரின் நாள்களிலாவது இதுபோன்று நடந்ததுண்டோ?
யோவேல் 1 : 3 (ECTA)
இதைக் குறித்து உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்; உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்குக் கூறட்டும்; அவர்களின் பிள்ளைகள் அடுத்த தலைமுறைக்குக் கூறட்டும்.
யோவேல் 1 : 4 (ECTA)
வெட்டுப் புழு தின்று எஞ்சியதை இளம் வெட்டுக்கிளி தின்றது; இளம் வெட்டுக்கிளி தின்று எஞ்சியதைத் துள்ளும் வெட்டுக் கிளி தின்றது; துள்ளும் வெட்டுக் கிளி தின்று எஞ்சியதை வளர்ந்த வெட்டுக்கிளி தின்றழித்தது.
யோவேல் 1 : 5 (ECTA)
குடிவெறியர்களே, விழித்தெழுந்து அழுங்கள்; திராட்சை இரசம் குடிக்கிறவர்களே, நீங்கள் அனைவரும் அந்த இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்; ஏனெனில், அது உங்கள் வாய்க்கு எட்டாமற் போயிற்று. [* எசா 13: 6 ]
யோவேல் 1 : 6 (ECTA)
ஆற்றல்மிக்க, எண்ணிக்கையில் அடங்காத வேற்றினம் ஒன்று என் நாட்டிற்கு எதிராய் எழும்பி இருக்கின்றது; அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்; பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்கள் அதற்கு உண்டு. [* திவெ 9:8.. ]
யோவேல் 1 : 7 (ECTA)
என்னுடைய திராட்சைக் கொடிகளை அது பாழாக்கிற்று; அத்தி மரங்களை முறித்துப் போட்டது; அவற்றின் பட்டைகளை முற்றிலும் உரித்துக் கீழே எறிந்தது; அவற்றின் கிளைகள் வெளிறிப் போயின.
யோவேல் 1 : 8 (ECTA)
கணவனாக வரவிருந்தவனை இழந்ததால் சாக்கு உடை உடுத்திக் கொள்ளும் கன்னிப் பெண்ணைப்போல் கதறி அழுங்கள்.
யோவேல் 1 : 9 (ECTA)
ஆண்டவரது இல்லத்தில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமல் ஒழிந்தன. ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் குருக்கள் புலம்பி அழுகின்றார்கள்.
யோவேல் 1 : 10 (ECTA)
வயல்வெளிகள் பாழாயின; நிலமும் புலம்புகின்றது; ஏனெனில், தானிய விளைச்சல் அழிவுற்றது; இரசம் தரும் திராட்சைக் கொடிகள் காய்ந்துபோயின; எண்ணெய் தரும் ஒலிவ மரங்கள் பட்டுப் போயின.
யோவேல் 1 : 11 (ECTA)
உழவுத் தொழில் செய்வோரே, கலங்கி நில்லுங்கள்; திராட்சைத் தோட்டக்காரர்களே, அழுங்கள். ஏனெனில், கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற் போயின; வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று.
யோவேல் 1 : 12 (ECTA)
திராட்சைக் கொடி வாடிப் போகின்றது; அத்தி மரம் உலர்ந்துபோகின்றது; மாதுளை, பேரீந்து, பேரிலந்தை போன்ற வயல்வெளி மரங்கள் யாவும் வதங்குகின்றன; மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு மறைந்து போகின்றது.
யோவேல் 1 : 13 (ECTA)
குருக்களே, சாக்கு உடை உடுத்திக்கொண்டு
தேம்பி அழுங்கள்; பலிபீடத்தில் பணிபுரிவோரே! அலறிப் புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, சாக்கு உடை அணிந்தவர்களாய்
இரவைக் கழியுங்கள்; ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும்
இல்லாமற் போயின.
யோவேல் 1 : 14 (ECTA)
உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்; ஊர்ப் பெரியோரையும் நாட்டில் குடியிருப்போர் அனைவரையும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்; ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள்.
யோவேல் 1 : 15 (ECTA)
மிகக் கொடிய நாள் அந்த நாள்! ஆண்டவரின் நாள்
அண்மையில் உள்ளது; எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும்;
யோவேல் 1 : 16 (ECTA)
உணவுப் பொருளெல்லாம் பாழாய்ப் போனதை நம் கண்கள் காணவில்லையா? நம் கடவுளின் இல்லத்திலிருந்து மகிழ்ச்சியும் அக்களிப்பும் இல்லாமற்போனதை
நாம் பார்க்கவில்லையா?
யோவேல் 1 : 17 (ECTA)
விதைகள் மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயின; பண்டசாலைகள் பாழடைந்துவிட்டன; களஞ்சியங்கள் இடிந்து விழுந்தன; கோதுமை விளைச்சல் இல்லாமற் போயிற்று.
யோவேல் 1 : 18 (ECTA)
காட்டு விலங்கினங்கள் என்னவாய்த் தவிக்கின்றன! மேய்ச்சல் காணா மாட்டு மந்தைகள் திகைத்து நிற்கின்றன; ஆட்டு மந்தைகளும் இன்னலுற்றுத் தவிக்கின்றன!
யோவேல் 1 : 19 (ECTA)
ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; பாலைநிலத்தின் மேய்ச்சல் இடங்கள் தீக்கிரையாயின; வயல்வெளியிலிருந்த மரங்கள் அனைத்தையும் நெருப்பு சுட்டெரித்துவிட்டது.
யோவேல் 1 : 20 (ECTA)
நீரோடைகள் வற்றிப்போனதால் காட்டு விலங்குகள் கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன; பாலைநிலத்திலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு விழுங்கிவிட்டது.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20