எரேமியா 9 : 1 (ECTA)
என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும் என் கண்கள் கண்ணீரின் ஊற்றுமாயும் இருக்கக் கூடாதா? அப்படியானால், என் மகளாம் மக்களுள் கொலையுண்டோருக்காக இரவும் பகலும் நான் அழுதிருப்பேனே!
எரேமியா 9 : 2 (ECTA)
யூதாவின் தீய வாழ்வு பாலை நிலத்தில் பயணியர் விடுதி ஒன்று எனக்கு இருக்கக் கூடாதா? நான் மக்களைப் புறக்கணித்து அவர்களிடமிருந்து சென்று விடலாமே! ஏனெனில், அவர்கள் யாவரும் விபசாரிகள், நம்பிக்கைத் துரோகிகளின் கூட்டம்.
எரேமியா 9 : 3 (ECTA)
பொய்பேசத் தங்கள் நாவை வில்லைப்போல் அவர்கள் வளைக்கின்றனர்; உண்மைக்காக நாட்டில் யாரும் நிமிர்ந்து நிற்பதில்லை; அவர்கள் தீமையிலிருந்து தீமைக்கே சென்று கொண்டிருக்கிறார்கள்; என்னையோ அவர்கள் அறிந்து கொள்ளவில்லை, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 9 : 4 (ECTA)
ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைப் பொறுத்தவரை எச்சரிக்கையாய் இருக்கட்டும். எந்த உறவினரையும் நம்பவேண்டாம். ஏனெனில், எல்லா உறவினரும் ஏமாற்றுவர் என்பது உறுதி; அடுத்திருப்பவர் அனைவரும் புறணி பேசுகின்றனர்;
எரேமியா 9 : 5 (ECTA)
எல்லாரும் அடுத்திருப்பவரை ஏமாற்றுகின்றனர்; யாருமே உண்மை பேசுவதில்லை; பொய் பேசத் தங்கள் நாவைப் பழக்கியுள்ளார்கள்; குற்றம் புரிந்தே சோர்ந்து போனார்கள்.
எரேமியா 9 : 6 (ECTA)
நீயோ வஞ்சனை செய்வார் நடுவில் வாழ்கின்றாய்; தங்கள் வஞ்சனையின் காரணமாக என்னை அவர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றார்கள், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 9 : 7 (ECTA)
எனவே, படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; நான் அவர்களைப் புடமிடுவேன்; பரிசோதிப்பேன்; என் மகளாகிய மக்களுக்கு நான் வேறு என்னதான் செய்யமுடியும்?
எரேமியா 9 : 8 (ECTA)
அவர்கள் நாக்கு கொல்லும் அம்பு; அது பேசுவது வஞ்சனை; எல்லாரும் தம் வாயால் அடுத்திருப்பவர்களோடு சமாதானமாய்ப் பேசுகின்றனர்; உள்ளத்திலோ அவர்களுக்குக் குழி பறிக்கின்றனர்.
எரேமியா 9 : 9 (ECTA)
இவற்றின் பொருட்டு நான் அவர்களைத் தண்டியாமல் விடுவேனோ? இப்படிப்பட்ட ஒரு மக்களினத்தாரை நான் பழிவாங்காமல் இருப்பேனோ? என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 9 : 10 (ECTA)
சீயோனில் புலம்பல் மலைகளைக் குறித்து அழுது புலம்புவோம்; பாழ்வெளி மேய்ச்சல் நிலத்தின் பொருட்டு ஒப்பாரி வைப்போம்; ஏனெனில் அனைத்தும் தீய்ந்து போயின; அவை வழியாய்ச் செல்வோர் யாருமில்லை; கால்நடைகளின் ஒலியும் கேட்கவில்லை; வானத்துப் பறவைகள் முதல் விலங்குகள் வரை அனைத்துமே ஓடி மறைந்து விட்டன.
எரேமியா 9 : 11 (ECTA)
எருசலேமை அழித்துக் கற்குவியலாக்குவேன்; அதனைக் குள்ளநரிகளின் வளையாக்குவேன்; யூதா நகர்களை யாரும் வாழாப் பாழ்வெளியாக்குவேன்.
எரேமியா 9 : 12 (ECTA)
இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர் எவர்? இதை அறிவிக்குமாறு எவருக்கு ஆண்டவர் வாய்மொழியாகக் கூறியுள்ளார்? நாடு அழிந்து ஆள் நடமாட்டம் இல்லாத பாலை நிலம் போல் தீய்ந்துவிட்டது ஏன்?
எரேமியா 9 : 13 (ECTA)
ஆண்டவர் கூறுவது; நான் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தைப் புறக்கணித்தார்கள். என் சொல்லுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை; அதன்படி நடக்கவும் இல்லை.
எரேமியா 9 : 14 (ECTA)
மாறாகத் தங்கள் பிடிவாதத்தின்படி நடந்தார்கள்; தங்கள் மூதாதையர் கற்றுக்கொடுத்தபடி பாகாலைப் பின்பற்றினார்கள்.
எரேமியா 9 : 15 (ECTA)
ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இம்மக்கள் எட்டிக்காய் உண்ணச் செய்வேன். நஞ்சு கலந்த நீர் குடிக்கச் செய்வேன்.
எரேமியா 9 : 16 (ECTA)
அவர்களோ அவர்தம் மூதாதையரோ அறிந்திராத மக்களினங்கள் நடுவில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முற்றிலும் அழிக்கும் வரை அவர்களுக்குப் பின் வாளை அனுப்புவேன். போர் எழச் செய்வேன்.
எரேமியா 9 : 17 (ECTA)
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ! கேளுங்கள். ஒப்பாரி வைக்கும் பெண்களை வரச்சொல்லுங்கள்; அவர்களுள் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சொல்லியனுப்புங்கள்.
எரேமியா 9 : 18 (ECTA)
அவர்கள் விரைந்து வந்து நம்மைக் குறித்துப் புலம்பட்டும்; நம் கண்கள் நீர் பொழியட்டும்; நம் இமைகள் நீர் சொரியட்டும்.
எரேமியா 9 : 19 (ECTA)
ஏனெனில், சீயோனிலிருந்து புலம்பல் கேட்கின்றது; “நாம் இப்படிப் பாழடைந்து விட்டோமே; நம் மானமெல்லாம் போயிற்றே; நாட்டைவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்றே. நம் குடியிருப்புகள் தகர்க்கப்பட்டனவே.”
எரேமியா 9 : 20 (ECTA)
பெண்டிரே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; உங்கள் செவிகள் அவர்தம் வாய்மொழியை ஏற்கட்டும்; உங்கள் புதல்வியருக்குப் புலம்பக் கற்றுக்கொடுங்கள். ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும்.
எரேமியா 9 : 21 (ECTA)
ஏனெனில், சாவு பலகணிகள் வழியாய் வந்துவிட்டது; நம் அரண்களுக்குள்ளும் நுழைந்து விட்டது; தெருக்களில் சிறுவர்களையும் பொதுவிடங்களில் இளைஞர்களையும் வீழ்த்திவிட்டது.
எரேமியா 9 : 22 (ECTA)
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார் எனச் சொல்; மனிதரின் பிணங்கள் சாணம்போல் வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்; அறுவடை செய்வோனுக்குப் பின்னால் விடப்பட்ட அரிகளைப் போலக் கிடக்கும்.
எரேமியா 9 : 23 (ECTA)
ஆண்டவரை அறிதலே பெருமை ஆண்டவர் கூறுவது இதுவே: ஞானி தம் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம்.
எரேமியா 9 : 24 (ECTA)
பெருமை பாராட்ட விரும்புபவர், “நானே ஆண்டவர்” என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக! ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்கிறார் ஆண்டவர். * 1 கொரி 1:31; 2 கொரி 10:17..
எரேமியா 9 : 25 (ECTA)
இதோ! நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்போது நான் உடலில் மட்டும் விருத்தசேதனம் செய்திருப்போர் அனைவரையும் தண்டிப்பேன்.
எரேமியா 9 : 26 (ECTA)
எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளையும் முன்தலையை மழித்துக் கொள்ளும் பாலை நிலத்தாரையும் தண்டிப்பேன்; ஏனெனில் வேற்றினத்தார் யாவரும் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்கள்; இஸ்ரயேல் வீட்டார் யாவரும் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26