எரேமியா 9 : 1 (ECTA)
[PS] [QS][SS] என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும்[SE][SS] என் கண்கள் கண்ணீரின்[SE][SS] ஊற்றுமாயும் இருக்கக் கூடாதா?[SE][SS] அப்படியானால், என் மகளாம்[SE][SS] மக்களுள் கொலையுண்டோருக்காக[SE][SS] இரவும் பகலும் நான் அழுதிருப்பேனே![SE][PE][QE]
எரேமியா 9 : 2 (ECTA)
{யூதாவின் தீய வாழ்வு} [PS] [QS][SS] பாலை நிலத்தில் பயணியர் விடுதி ஒன்று[SE][SS] எனக்கு இருக்கக் கூடாதா?[SE][SS] நான் மக்களைப் புறக்கணித்து[SE][SS] அவர்களிடமிருந்து சென்று விடலாமே![SE][SS] ஏனெனில், அவர்கள் யாவரும்[SE][SS] விபசாரிகள்,[SE][SS] நம்பிக்கைத் துரோகிகளின் கூட்டம்.[SE][QE]
எரேமியா 9 : 3 (ECTA)
[QS][SS] பொய்பேசத் தங்கள் நாவை[SE][SS] வில்லைப்போல்[SE][SS] அவர்கள் வளைக்கின்றனர்;[SE][SS] உண்மைக்காக நாட்டில்[SE][SS] யாரும் நிமிர்ந்து நிற்பதில்லை;[SE][SS] அவர்கள் தீமையிலிருந்து தீமைக்கே[SE][SS] சென்று கொண்டிருக்கிறார்கள்;[SE][SS] என்னையோ அவர்கள்[SE][SS] அறிந்து கொள்ளவில்லை,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
எரேமியா 9 : 4 (ECTA)
[QS][SS] ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைப்[SE][SS] பொறுத்தவரை[SE][SS] எச்சரிக்கையாய் இருக்கட்டும்.[SE][SS] எந்த உறவினரையும் நம்பவேண்டாம்.[SE][SS] ஏனெனில், எல்லா உறவினரும்[SE][SS] ஏமாற்றுவர் என்பது உறுதி;[SE][SS] அடுத்திருப்பவர் அனைவரும்[SE][SS] புறணி பேசுகின்றனர்;[SE][QE]
எரேமியா 9 : 5 (ECTA)
[QS][SS] எல்லாரும் அடுத்திருப்பவரை[SE][SS] ஏமாற்றுகின்றனர்;[SE][SS] யாருமே உண்மை பேசுவதில்லை;[SE][SS] பொய் பேசத் தங்கள் நாவைப்[SE][SS] பழக்கியுள்ளார்கள்;[SE][SS] குற்றம் புரிந்தே சோர்ந்து போனார்கள்.[SE][QE]
எரேமியா 9 : 6 (ECTA)
[QS][SS] நீயோ வஞ்சனை செய்வார் நடுவில்[SE][SS] வாழ்கின்றாய்;[SE][SS] தங்கள் வஞ்சனையின் காரணமாக[SE][SS] என்னை அவர்கள்[SE][SS] அறிந்து கொள்ள மறுக்கின்றார்கள்,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
எரேமியா 9 : 7 (ECTA)
[QS][SS] எனவே, படைகளின் ஆண்டவர்[SE][SS] இவ்வாறு கூறுகின்றார்;[SE][SS] நான் அவர்களைப் புடமிடுவேன்;[SE][SS] பரிசோதிப்பேன்;[SE][SS] என் மகளாகிய மக்களுக்கு நான்[SE][SS] வேறு என்னதான் செய்யமுடியும்?[SE][QE]
எரேமியா 9 : 8 (ECTA)
[QS][SS] அவர்கள் நாக்கு கொல்லும் அம்பு;[SE][SS] அது பேசுவது வஞ்சனை;[SE][SS] எல்லாரும் தம் வாயால்[SE][SS] அடுத்திருப்பவர்களோடு[SE][SS] சமாதானமாய்ப் பேசுகின்றனர்;[SE][SS] உள்ளத்திலோ அவர்களுக்குக்[SE][SS] குழி பறிக்கின்றனர்.[SE][QE]
எரேமியா 9 : 9 (ECTA)
[QS][SS] இவற்றின் பொருட்டு[SE][SS] நான் அவர்களைத்[SE][SS] தண்டியாமல் விடுவேனோ?[SE][SS] இப்படிப்பட்ட ஒரு மக்களினத்தாரை[SE][SS] நான் பழிவாங்காமல் இருப்பேனோ?[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][PE][QE]
எரேமியா 9 : 10 (ECTA)
{சீயோனில் புலம்பல்} [PS] [QS][SS] மலைகளைக் குறித்து[SE][SS] அழுது புலம்புவோம்;[SE][SS] பாழ்வெளி மேய்ச்சல்[SE][SS] நிலத்தின் பொருட்டு[SE][SS] ஒப்பாரி வைப்போம்;[SE][SS] ஏனெனில் அனைத்தும்[SE][SS] தீய்ந்து போயின;[SE][SS] அவை வழியாய்ச் செல்வோர்[SE][SS] யாருமில்லை;[SE][SS] கால்நடைகளின் ஒலியும் கேட்கவில்லை;[SE][SS] வானத்துப் பறவைகள் முதல்[SE][SS] விலங்குகள் வரை அனைத்துமே[SE][SS] ஓடி மறைந்து விட்டன.[SE][QE]
எரேமியா 9 : 11 (ECTA)
[QS][SS] எருசலேமை அழித்துக்[SE][SS] கற்குவியலாக்குவேன்;[SE][SS] அதனைக் குள்ளநரிகளின்[SE][SS] வளையாக்குவேன்;[SE][SS] யூதா நகர்களை யாரும் வாழாப்[SE][SS] பாழ்வெளியாக்குவேன்.[SE][PE][QE]
எரேமியா 9 : 12 (ECTA)
[PS] இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர் எவர்? இதை அறிவிக்குமாறு எவருக்கு ஆண்டவர் வாய்மொழியாகக் கூறியுள்ளார்? நாடு அழிந்து ஆள் நடமாட்டம் இல்லாத பாலை நிலம் போல் தீய்ந்துவிட்டது ஏன்?
எரேமியா 9 : 13 (ECTA)
ஆண்டவர் கூறுவது; நான் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தைப் புறக்கணித்தார்கள். என் சொல்லுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை; அதன்படி நடக்கவும் இல்லை.
எரேமியா 9 : 14 (ECTA)
மாறாகத் தங்கள் பிடிவாதத்தின்படி நடந்தார்கள்; தங்கள் மூதாதையர் கற்றுக்கொடுத்தபடி பாகாலைப் பின்பற்றினார்கள்.
எரேமியா 9 : 15 (ECTA)
ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இம்மக்கள் எட்டிக்காய் உண்ணச் செய்வேன். நஞ்சு கலந்த நீர் குடிக்கச் செய்வேன்.
எரேமியா 9 : 16 (ECTA)
அவர்களோ அவர்தம் மூதாதையரோ அறிந்திராத மக்களினங்கள் நடுவில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முற்றிலும் அழிக்கும் வரை அவர்களுக்குப் பின் வாளை அனுப்புவேன். போர் எழச் செய்வேன்.[PE]
எரேமியா 9 : 17 (ECTA)
[PS] [QS][SS] படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே;[SE][SS] இதோ! கேளுங்கள்.[SE][SS] ஒப்பாரி வைக்கும் பெண்களை[SE][SS] வரச்சொல்லுங்கள்;[SE][SS] அவர்களுள் தேர்ச்சி பெற்றவர்களுக்குச்[SE][SS] சொல்லியனுப்புங்கள்.[SE][QE]
எரேமியா 9 : 18 (ECTA)
[QS][SS] அவர்கள் விரைந்து வந்து[SE][SS] நம்மைக் குறித்துப் புலம்பட்டும்;[SE][SS] நம் கண்கள் நீர் பொழியட்டும்;[SE][SS] நம் இமைகள் நீர் சொரியட்டும்.[SE][QE]
எரேமியா 9 : 19 (ECTA)
[QS][SS] ஏனெனில், சீயோனிலிருந்து[SE][SS] புலம்பல் கேட்கின்றது;[SE][SS] “நாம் இப்படிப் பாழடைந்து விட்டோமே;[SE][SS] நம் மானமெல்லாம் போயிற்றே;[SE][SS] நாட்டைவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்றே.[SE][SS] நம் குடியிருப்புகள்[SE][SS] தகர்க்கப்பட்டனவே.”[SE][QE]
எரேமியா 9 : 20 (ECTA)
[QS][SS] பெண்டிரே![SE][SS] ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;[SE][SS] உங்கள் செவிகள் அவர்தம்[SE][SS] வாய்மொழியை ஏற்கட்டும்;[SE][SS] உங்கள் புதல்வியருக்குப்[SE][SS] புலம்பக் கற்றுக்கொடுங்கள்.[SE][SS] ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு[SE][SS] ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும்.[SE][QE]
எரேமியா 9 : 21 (ECTA)
[QS][SS] ஏனெனில், சாவு பலகணிகள் வழியாய்[SE][SS] வந்துவிட்டது;[SE][SS] நம் அரண்களுக்குள்ளும்[SE][SS] நுழைந்து விட்டது;[SE][SS] தெருக்களில் சிறுவர்களையும்[SE][SS] பொதுவிடங்களில் இளைஞர்களையும்[SE][SS] வீழ்த்திவிட்டது.[SE][QE]
எரேமியா 9 : 22 (ECTA)
[QS][SS] ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்[SE][SS] எனச் சொல்;[SE][SS] மனிதரின் பிணங்கள் சாணம்போல்[SE][SS] வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்;[SE][SS] அறுவடை செய்வோனுக்குப் பின்னால்[SE][SS] விடப்பட்ட அரிகளைப் போலக் கிடக்கும்.[SE][PE][QE]
எரேமியா 9 : 23 (ECTA)
{ஆண்டவரை அறிதலே பெருமை} [PS] ஆண்டவர் கூறுவது இதுவே: ஞானி தம் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம்.
எரேமியா 9 : 24 (ECTA)
பெருமை பாராட்ட விரும்புபவர், “நானே ஆண்டவர்” என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக! ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 9 : 25 (ECTA)
இதோ! நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்போது நான் உடலில் மட்டும் விருத்தசேதனம் செய்திருப்போர் அனைவரையும் தண்டிப்பேன். [* 1 கொரி 1:31; 2 கொரி 10:17. ]
எரேமியா 9 : 26 (ECTA)
எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளையும் முன்தலையை மழித்துக் கொள்ளும் பாலை நிலத்தாரையும் தண்டிப்பேன்; ஏனெனில் வேற்றினத்தார் யாவரும் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்கள்; இஸ்ரயேல் வீட்டார் யாவரும் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள்.[PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26

BG:

Opacity:

Color:


Size:


Font: