எரேமியா 6 : 1 (ECTA)
{எருசலேமைச் சுற்றிலும் எதிரிகள்} [PS] [QS][SS] பென்யமின் மக்களே! எருசலேமிலிருந்து[SE][SS] தப்பியோடுங்கள்;[SE][SS] தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்;[SE][SS] பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்;[SE][SS] ஏனெனில் வடக்கிலிருந்து[SE][SS] தீமையும், பேரழிவும் வருகின்றன.[SE][QE]
எரேமியா 6 : 2 (ECTA)
[QS][SS] *மகள் சீயோனை[SE][SS] வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன்*.[SE][QE]
எரேமியா 6 : 3 (ECTA)
[QS][SS] ஆயர்கள் தங்கள் மந்தையோடு[SE][SS] அவளிடம் வருவார்கள்;[SE][SS] அவளைச் சுற்றிலும்[SE][SS] கூடாரங்கள் அடிப்பார்கள்;[SE][SS] அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள்.[SE][QE]
எரேமியா 6 : 4 (ECTA)
[QS][SS] “அவளுக்கு எதிராய்ப்[SE][SS] போருக்குத் தயாராகுங்கள்;[SE][SS] எழுந்திருங்கள்;[SE][SS] நண்பகலில் எதிர்த்துச் செல்வோம்;[SE][SS] ஐயோ! பொழுது சாய்கின்றதே![SE][SS] மாலை நேரத்து நிழல்கள்[SE][SS] நீள்கின்றனவே![SE][QE]
எரேமியா 6 : 5 (ECTA)
[QS][SS] எழுந்திருங்கள்;[SE][SS] இரவில் அவளை எதிர்த்துச் செல்வோம்;[SE][SS] அவள் அரண்மனைகளை[SE][SS] அழிப்போம்” என்பார்கள்.[SE][QE]
எரேமியா 6 : 6 (ECTA)
[QS][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] இவ்வாறு கூறுகிறார்;[SE][SS] அவளுடைய மரங்களை வெட்டுங்கள்;[SE][SS] எருசலேமுக்கு எதிராக[SE][SS] முற்றுகைத் தளம் எழுப்புங்கள்;[SE][SS] அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்;[SE][SS] அவளிடம் காணப்படுவது அனைத்தும்[SE][SS] கொடுமையே.[SE][QE]
எரேமியா 6 : 7 (ECTA)
[QS][SS] கேணியில் நீர்[SE][SS] சுரந்து கொண்டிருப்பது போல்[SE][SS] அவள் தீமைகளைச்[SE][SS] சுரந்து கொண்டிருக்கின்றாள்.[SE][SS] வன்முறை, அழிவு என்பதே[SE][SS] அவளிடம் எழும் குரல்;[SE][SS] நோயும் காயமுமே[SE][SS] என்றும் என் கண்முன் உள்ளன.[SE][QE]
எரேமியா 6 : 8 (ECTA)
[QS][SS] எருசலேமே, எச்சரிக்கையாய் இரு;[SE][SS] இல்லையேல், நான் உன்னைவிட்டு[SE][SS] அகன்று போவேன்;[SE][SS] உன்னை மனிதர் வாழாப்[SE][SS] பாழ்நிலம் ஆக்குவேன்.[SE][QE]
எரேமியா 6 : 9 (ECTA)
[QS][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] கூறுவது இதுவே;[SE][SS] திராட்சைக் கொடிகளில்[SE][SS] தப்பும் பழங்களை ஒன்றும் விடாது[SE][SS] பறித்துச் சேர்ப்பது போல,[SE][SS] இஸ்ரயேலில் எஞ்சியிருப்பதைக்[SE][SS] கூட்டிச்சேர்.[SE][SS] திராட்சைத் தோட்டக்காரரைப்போல்[SE][SS] கிளைகளிடையே[SE][SS] உன் கையை விட்டுப் பார்.[SE][QE]
எரேமியா 6 : 10 (ECTA)
[QS][SS] நான் யாரிடம் பேசுவேன்?[SE][SS] யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன்?[SE][SS] யார் செவி கொடுப்பார்?[SE][SS] அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை;[SE][SS] அவர்களால் செவிகொடுக்க முடியாது;[SE][SS] ஆண்டவரின் வாக்கு[SE][SS] அவர்களுக்குப் பழிச்சொல் ஆயிற்று;[SE][SS] அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை.[SE][QE]
எரேமியா 6 : 11 (ECTA)
[QS][SS] ஆண்டவரின் சீற்றம்[SE][SS] என்னில் நிறைந்துள்ளது;[SE][SS] அதனை அடக்கிச் சோர்ந்து போனேன்;[SE][SS] ஆண்டவர் கூறுவது;[SE][SS] தெருவில் இருக்கும் சிறுவர்கள்மேலும்[SE][SS] ஒன்றாய்க் கூடியுள்ள இளைஞர்கள் மேலும்[SE][SS] சினத்தைக் கொட்டு.[SE][SS] கணவனும் மனைவியும்,[SE][SS] முதியோரும் வயது நிறைந்தோரும் பிடிபடுவர்.[SE][QE]
எரேமியா 6 : 12 (ECTA)
[QS][SS] அவர்களுடைய வீடுகளையும்[SE][SS] நிலங்களையும் மனைவியரையும்[SE][SS] பிறர் கைப்பற்றுவர்;[SE][SS] ஏனெனில், நாட்டில்[SE][SS] குடியிருப்போருக்கு எதிராய்[SE][SS] என் கையை நீட்டப்போகிறேன்.[SE][QE]
எரேமியா 6 : 13 (ECTA)
[QS][SS] ஏனெனில், சிறியோர் முதல்[SE][SS] பெரியோர் வரை அனைவரும்[SE][SS] கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்;[SE][SS] இறைவாக்கினர் முதல்[SE][SS] குருக்கள்வரை அனைவரும்[SE][SS] ஏமாற்றுவதையே[SE][SS] தொழிலாகக் கொண்டுள்ளார்கள். [* எரே 8:10-12 ] [SE][QE]
எரேமியா 6 : 14 (ECTA)
[QS][SS] அமைதியே இல்லாதபொழுது,[SE][SS] ‘அமைதி, அமைதி’ என்று கூறி[SE][SS] என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை[SE][SS] மேலோட்டமாகவே குணப்படுத்தினர். [* எரே 8:10-12 ] [SE][QE]
எரேமியா 6 : 15 (ECTA)
[QS][SS] அருவருப்பானதைச் செய்தபோது[SE][SS] அவர்கள் வெட்கமடைந்தார்களா?[SE][SS] அப்போதுகூட அவர்கள்[SE][SS] வெட்கமடையவில்லை;[SE][SS] நாணம் என்பதே என்னவென்று[SE][SS] அவர்களுக்குத் தெரியாது;[SE][SS] எனவே, மடிந்து வீழ்ந்தவர்களோடு[SE][SS] அவர்களும் வீழ்வர்;[SE][SS] நான் அவர்களைத் தண்டிக்கும்போது[SE][SS] அவர்கள் வீழ்த்தப்படுவர்[SE][SS] என்கிறார் ஆண்டவர். [* எரே 8:10-12; எசே 13:10 ] [SE][QE]
எரேமியா 6 : 16 (ECTA)
[QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்;[SE][SS] தொன்மையான பாதைகள் எவை?[SE][SS] நல்ல வழி எது? என்று கேளுங்கள்;[SE][SS] அதில் செல்லுங்கள்.[SE][SS] அப்போது உங்களுக்கு[SE][SS] அமைதி கிடைக்கும்.[SE][SS] அவர்களோ, “அவ்வழியே[SE][SS] செல்ல மாட்டோம்” என்றார்கள். [* எரே 8:10-12 ] [SE][QE]
எரேமியா 6 : 17 (ECTA)
[QS][SS] நான் உங்களுக்குக்[SE][SS] காவலரை நியமித்தேன்.[SE][SS] “எக்காளக் குரலுக்குச்[SE][SS] செவி கொடுங்கள்” என்றேன்.[SE][SS] அவர்களோ, “செவிசொடுக்க[SE][SS] மாட்டோம்” என்றார்கள். [* மத் 11:29 ] [SE][QE]
எரேமியா 6 : 18 (ECTA)
[QS][SS] எனவே, நாடுகளே கேளுங்கள்;[SE][SS] மக்கள் கூட்டத்தாரே,[SE][SS] அவர்களுக்கு என்ன நேரப்போகிறது[SE][SS] என்று பாருங்கள்.[SE][QE]
எரேமியா 6 : 19 (ECTA)
[QS][SS] நிலமே, நீயும் கேள்;[SE][SS] இதோ! இம்மக்கள்மேல் தீமை வரச்செய்வேன்.[SE][SS] அவர்களின் தீய எண்ணங்களின்[SE][SS] விளைவே இத்தீமை.[SE][SS] ஏனெனில், அவர்கள்[SE][SS] என் சொற்களுக்குச் செவிசாய்க்கவில்லை;[SE][SS] என் சட்டத்தைப் புறக்கணித்தார்கள்.[SE][QE]
எரேமியா 6 : 20 (ECTA)
[QS][SS] சேபா நாட்டுத் தூபமும்[SE][SS] தூரத்து நாட்டு நறுமண நாணலும்[SE][SS] எனக்கு எதற்கு?[SE][SS] உங்கள் எரிபலிகள்[SE][SS] எனக்கு ஏற்புடையவை அல்ல.[SE][SS] உங்களின் மற்றைய பலிகளும்[SE][SS] எனக்கு உவகை தருவதில்லை.[SE][QE]
எரேமியா 6 : 21 (ECTA)
[QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே;[SE][SS] இதோ இம் மக்களுக்கு எதிராகத்[SE][SS] தடைக்கற்களை வைக்கப்போகிறேன்.[SE][SS] தந்தையரும் தனயரும்[SE][SS] ஒன்றாகத் தடுக்கி விழுவர்;[SE][SS] அடுத்திருப்பாரும் நண்பரும்[SE][SS] அழிந்து போவர்.[SE][QE]
எரேமியா 6 : 22 (ECTA)
[QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே;[SE][SS] இதோ! வடக்கு நாட்டினின்று[SE][SS] ஓர் இனம் வருகின்றது;[SE][SS] மண்ணுலகின் கடை எல்லைகளினின்று[SE][SS] பெரிய நாடு ஒன்று[SE][SS] கிளர்ந்து எழுகின்றது.[SE][QE]
எரேமியா 6 : 23 (ECTA)
[QS][SS] அவர்கள் வில்லும் ஈட்டியும்[SE][SS] ஏந்தியுள்ளார்கள்;[SE][SS] அவர்கள் கொடியவர்; இரக்கமற்றவர்;[SE][SS] அவர்களின் ஆரவாரம்[SE][SS] கடலின் இரைச்சலைப் போன்றது;[SE][SS] மகளே சீயோன்![SE][SS] அவர்கள் போருக்கு அணிவகுத்து[SE][SS] குதிரைகள் மீது வருகின்றார்கள்;[SE][SS] சவாரி செய்துகொண்டு[SE][SS] உனக்கெதிராய் வருகின்றார்கள்;[SE][QE]
எரேமியா 6 : 24 (ECTA)
[QS][SS] “அவர்களைப் பற்றிய செய்தியை[SE][SS] நாம் கேள்வியுற்றபோது[SE][SS] நம் கைகள் தளர்ந்து போயின;[SE][SS] கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது;[SE][SS] பேறுகாலப் பெண்ணைப் போல்[SE][SS] நாம் தவிக்கின்றோம்.[SE][QE]
எரேமியா 6 : 25 (ECTA)
[QS][SS] வயல்வெளிக்குப்[SE][SS] போகவேண்டாம்;[SE][SS] சாலைகளில் செல்ல வேண்டாம்;[SE][SS] ஏனெனில், எதிரியின் வாள்[SE][SS] எங்கும் உள்ளது;[SE][SS] சுற்றிலும் ஒரே திகில்.[SE][QE]
எரேமியா 6 : 26 (ECTA)
[QS][SS] மகளாகிய என் மக்களே![SE][SS] சாக்கு உடை உடுத்துங்கள்;[SE][SS] சாம்பலில் புரளுங்கள்;[SE][SS] இறந்த ஒரே பிள்ளைக்காகத்[SE][SS] துயருற்று அழுவது போல்,[SE][SS] மனமுடைந்து அழுது புலம்புங்கள்.[SE][SS] ஏனெனில், அழிப்பவன் திடீரென[SE][SS] நமக்கெதிராய் வருவான்.”[SE][QE]
எரேமியா 6 : 27 (ECTA)
[QS][SS] நான் உன்னை என் மக்களுக்குள்[SE][SS] மதிப்பீடு செய்பவனாகவும்,[SE][SS] ஆய்வாளனாகவும் ஏற்படுத்தினேன்;[SE][SS] நீ அவர்களின் வழிகளை அறிந்து[SE][SS] மதிப்பீடு செய்வாய்.[SE][QE]
எரேமியா 6 : 28 (ECTA)
[QS][SS] அவர்கள் எல்லாரும்[SE][SS] அடங்காத கலகக்காரர்கள்;[SE][SS] பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்;[SE][SS] அவர்கள் யாவரும் வெண்கலத்தையும்[SE][SS] இரும்பையும் போன்றவர்கள்;[SE][SS] அவர்களின் செயல்கள் கறைபட்டவை.[SE][QE]
எரேமியா 6 : 29 (ECTA)
[QS][SS] துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன;[SE][SS] காரீயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது.[SE][SS] தூய்மைப்படுத்தும் வேலை[SE][SS] தொடர்ந்து நடப்பதில் பயனில்லை;[SE][SS] ஏனெனில், தீயவர்கள் இன்னும்[SE][SS] நீக்கப்படவில்லை.[SE][QE]
எரேமியா 6 : 30 (ECTA)
[QS][SS] அவர்கள் ‘தள்ளுபடியான வெள்ளி’[SE][SS] என்று அழைக்கப்படுவார்கள்.[SE][SS] ஏனெனில், ஆண்டவர் அவர்களைப்[SE][SS] புறக்கணித்துள்ளார்.[SE][PE]
❮
❯