எரேமியா 51 : 1 (ECTA)
எருசலேமின் வீழ்ச்சி ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனுக்கும் கல்தேயாவின் குடிகளுக்கும் எதிராக அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 2 (ECTA)
புடைப்போரைப் பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்; அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்; தண்டனை நாளில் அவர்கள் எப்பக்கத்தினின்றும் அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்; அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 3 (ECTA)
வில்வீரன் வில்லை நாணேற்ற விடாதீர்கள்! தன் கவசத்தை அணிந்து நிற்க விடாதீர்கள்! அதன் இளைஞர்கள் யாரையும் விட்டுவைக்காதீர்கள் அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 4 (ECTA)
கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில் வீழ்ந்து கிடப்பர். காயமடைந்தோர் அதன் தெருக்களில் கிடப்பர். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 5 (ECTA)
தங்கள் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இஸ்ரயேலையும் யூதாவையும் கைவிட்டுவிடவில்லை. இஸ்ரயேலின் தூயவருக்கு எதிராகக் கல்தேயரின் நாடு குற்றங்களால் நிறைந்துள்ளது. [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 6 (ECTA)
பாபிலோன் நடுவினின்று தப்பியோடுங்கள்; ஒவ்வொருவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளட்டும்; அதன் குற்றங்களுக்காக நீங்கள் அழிந்து போகாதீர்கள்; இது ஆண்டவர் பழிவாங்கும் காலம், அவரே அதற்குத் தகுந்த தண்டனை வழங்குவார்; [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 7 (ECTA)
பாபிலோன் ஆண்டவரின் கையில் பொற்கிண்ணம்போல் இருந்தது; அது மண்ணுலகு முழுவதற்கும் போதை ஊட்டியது; மக்களினங்கள் அதன் திராட்சை இரசத்தைப் பருகின; நாடுகள் வெறிகொண்டன. [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ; திவெ 17:2-4; 18: 3. ]
எரேமியா 51 : 8 (ECTA)
பாபிலோன் திடீரென்று விழுந்து நொறுங்கிற்று; அதற்காகப் புலம்பியழுங்கள்; அதன் காயத்துக்கு மருந்து கொண்டு வாருங்கள்; ஒருவேளை அது நலம் பெறலாம்! [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 9 (ECTA)
நாங்கள் பாபிலோனைக் குணப்படுத்த முயன்றோம்; அதுவோ நலம் அடைவதாயில்லை! அதைக் கைவிட்டுவிடுங்கள்; நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த நாட்டுக்குப் போவோம்; பாபிலோனுக்குரிய தண்டனைத் தீர்ப்பு விண்ணுலகை எட்டியுள்ளது; அது வானத்தைச் சென்றடைந்துள்ளது. [* :64 எசா 13:1; 14:23; 47:1- 1 5 ; திவெ 18: 5 ]
எரேமியா 51 : 10 (ECTA)
ஆண்டவர் நமக்கு நீதி வழங்கியுள்ளார்; வாருங்கள்! நம் கடவுளான ஆண்டவரின் செயலைச் சீயோனில் பறைசாற்றுவோம். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 11 (ECTA)
அம்புகளைக் கூர்மையாக்குங்கள்; கேடயங்களைக் கையிலெடுங்கள்; ஆண்டவர் மேதிய அரசர்களைக் கிளர்ந்தெழச் செய்துள்ளார்; பாபிலோனை அழிப்பதே அவரது திட்டம்; இவ்வாறு தம் கோவிலை முன்னிட்டு ஆண்டவர் பழிவாங்குவார். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 12 (ECTA)
பாபிலோன் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள்; காவலை வலுப்படுத்துங்கள்; இரவுக் காவலாளரை நிறுத்துங்கள்; கண்ணிகளைத் தயார் செய்யுங்கள்; பாபிலோனின் குடிகளுக்கு எதிராக ஆண்டவர் உரைத்திருந்ததைத் தமது திட்டப்படியே நிறைவேற்றுவார். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 13 (ECTA)
நீர்வளம் கொண்டவனே! செல்வம் மிகுந்தவனே! உனக்கு முடிவு வந்துவிட்டது; உன் வாழ்நாளின் இழை துண்டிக்கப்பட்டுவிட்டது. [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ; திவெ 17: 1. ]
எரேமியா 51 : 14 (ECTA)
வெட்டுக்கிளிகளைப் போன்று எண்ணற்ற மனிதரால் உன்னைத் திண்ணமாய் நிரப்புவேன்; அவர்கள் உனக்கு எதிராக வெற்றி முழக்கம் செய்வார்கள், என்று படைகளின் ஆண்டவர் தம்மேல் ஆணையிட்டுக் கூறியுள்ளார். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 15 (ECTA)
அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார் ; தம் ஞானத்தால் பூவுலகை நிலைநாட்டினார்; தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 16 (ECTA)
அவர் குரல் கொடுக்க, வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகின்றது; மண்ணுலகின் எல்லையினின்று முகில்கள் எழச் செய்கின்றார்; மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்; தம் கிடங்குகளினின்று காற்று வீசச்செய்கிறார். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 17 (ECTA)
மனிதர் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்; கொல்லர் எல்லாரும் தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்; அவர்களின் வார்ப்புப் படிமங்கள் பொய்யானவை; அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை. [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 18 (ECTA)
அவை பயனற்றவை, ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்; தம் தண்டனையின் காலத்தில் அவை அழிந்துவிடும். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 19 (ECTA)
யாக்கோபின் பங்காய் இருப்பவரோ இவற்றைப் போன்றவர் அல்லர்; அவரே அனைத்தையும் உருவாக்கியவர்; தம் உரிமைச் சொத்தாகிய இனத்தை உருவாக்கியவரும் அவரே; படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயராகும். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 20 (ECTA)
நீ என் சம்மட்டியும் படைக்கருவியும் ஆவாய்; நான் உன்னைக்கொண்டு மக்களினங்களை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அரசுகளை அழித்தொழிப்பேன். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 21 (ECTA)
உன்னைக்கொண்டு குதிரையையும் குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு தேரையும் தேரோட்டியையும் நொறுக்குவேன். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 22 (ECTA)
உன்னைக்கொண்டு ஆணையும் பெண்ணையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு முதியோனையும் சிறுவனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இளைஞனையும் இளம்பெண்ணையும் நொறுக்குவேன்; [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 23 (ECTA)
உன்னைக்கொண்டு ஆயனையும் அவனது மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவன் காளைகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ஆளுநர்களையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்; [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 24 (ECTA)
பாபிலோனும் கல்தேயாவின் குடிகள் எல்லாரும் சீயோனில் செய்த தீச்செயல் அனைத்தின் பொருட்டு, உங்கள் கண்முன்னால் அவர்களைப் பழிவாங்குவேன், என்கிறார் ஆண்டவர். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 25 (ECTA)
அழிவைக் கொணரும் மலையே, மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே, நான் உனக்கு எதிராய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர். நான் உனக்கு எதிராய் என் கையை நீட்டுவேன்; உன்னைப் பாறை முகடுகளினின்று உருட்டிவிடுவேன்; உன்னை எரிந்துபோன மலை ஆக்குவேன். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 26 (ECTA)
மூலைக்கல் என்றோ, அடிக்கல் என்றோ, உன்னிடமிருந்து கல் எடுக்கப்படாது; நீ என்றும் பாழடைந்தே கிடப்பாய், என்கிறார் ஆண்டவர். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 27 (ECTA)
மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்; மக்களினங்கள் நடுவில் எக்காளம் ஊதுங்கள்; அதனை எதிர்த்துப் போரிட மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்; அதனை எதிர்க்குமாறு அரராத்து, மின்னி, அஸ்கனாசு ஆகிய அரசுகளுக்கு அழைப்பு விடுங்கள்; அதற்கு எதிராய்த் தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள். வெட்டுக்கிளிக் கூட்டம்போல் குதிரைகளைக் கொணருங்கள். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 28 (ECTA)
அதனை எதிர்த்துப் போரிட மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்; மேதிய மன்னர்கள், ஆளுநர்கள், அதிகாரிகளையும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 29 (ECTA)
மண்ணுலகு நடுநடுங்கி, வேதனையால் பதைபதைக்கிறது; பாபிலோன் நாட்டை மக்கள் குடியிருப்பில்லாத பாழ்நிலம் ஆக்கும் பொருட்டு அதற்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டங்கள் நிலைக்கும். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 30 (ECTA)
பாபிலோனின் படைவீரர்கள் போரிடுவதைக் கைவிட்டார்கள்; அவர்கள் தங்கள் கோட்டைகளுக்குள்ளேயே தங்கியிருக்கிறார்கள்; அவர்களின் வலிமை குன்றிப்போயிற்று. அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள். அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின; அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின. [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 31 (ECTA)
(31-32) ஓர் அஞ்சற்காரன் அடுத்த அஞ்சற்காரனைச் சந்திக்க ஓடுகின்றான்; ஒரு தூதன் அடுத்த தூதனைச் சந்திக்க ஓடுகின்றான்; “நகர் எல்லாப் பக்கங்களிலும் கைப்பற்றப்பட்டது; கடவுத் துறைகள் பிடிப்பட்டன; கோட்டை, கொத்தளங்கள் தீக்கிரையாயின; படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்”, எனப் பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்க அவர்கள் ஓடுகிறார்கள். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 32 (ECTA)
[* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 33 (ECTA)
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; புணையடிக்கும் காலக் களத்துக்கு மகள் பாபிலோன் ஒப்பாவாள்; இன்றும் சிறிது காலத்தில் அதன் அறுவடைக் காலம் வரும். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 34 (ECTA)
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் என்னை விழுங்கிவிட்டான்; அவன் என்னைக் கசக்கிப் பிழிந்து விட்டான்; வெறுமையான பாத்திரம்போல் என்னை ஆக்கிவிட்டான்; அரக்கன் போன்று என்னை விழுங்கிவிட்டான்; என் அருஞ்சுவை உணவுகளால் தன் வயிற்றை நிரப்பிக்கொண்டான். என்னைக் கொப்பளித்துத் துப்பிவிட்டான். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 35 (ECTA)
“எனக்கும் என் உறவினர்க்கும் இழைக்கப்பட்ட கொடுமை பாபிலோன் மேல் வரட்டும்” என்று சீயோன் குடிகள் கூறட்டும்; “என் இரத்தப் பழி கல்தேயக் குடிகள்மீது வந்துவிழட்டும்,” என்று எருசலேம் சொல்லட்டும். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 36 (ECTA)
எனவே, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே உனக்காக வழக்காடுவேன்; உன் பொருட்டுப் பழிவாங்குவேன்; அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்; அதன் நீரூற்றுகள் காய்ந்துபோகச் செய்வேன். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 37 (ECTA)
பாபிலோன் பாழ்மேடு ஆகும்; குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும். அது குடியிருப்பாரற்றுப் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் உள்ளாகும். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 38 (ECTA)
அவர்கள் சிங்கங்களைப்போல் சேர்ந்து கர்ச்சிப்பார்கள்; சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 39 (ECTA)
அவர்கள் கொதித்தெழுந்தபொழுது நான் அவர்களுக்கு விருந்து அளிப்பேன்; அவர்கள் மயங்கி மகிழுமாறு போதையுறும்வரை குடிக்கச் செய்வேன்; அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்; துயில் எழவே மாட்டார்கள், என்கிறார் ஆண்டவர். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 40 (ECTA)
செம்மறிக்குட்டிகள், ஆட்டுக்கிடாய்கள், வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று, நான் அவர்களைக் கொலைக் களத்திற்குக் கொண்டுபோவேன். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 41 (ECTA)
சேசாக்கு இப்படிப் பிடிபட்டுப் போயிற்றே! மண்ணுலகு முழுவதன் சிறப்பிடம் இப்படிக் கைப்பற்றப் பட்டுவிட்டதே! மக்களினங்கள் நடுவே பாபிலோன் பாழடைந்துபோனது எவ்வாறு? [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 42 (ECTA)
கடலானது பாபிலோன்மீது கொந்தளித்து வந்துள்ளது; ஆர்ப்பரிக்கும் அலைகளால் அது மூடப்பட்டுவிட்டது. [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 43 (ECTA)
அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன; அது வறண்ட பாலைநிலமாய் மாறிவிட்டது; அந்நாட்டில் குடியிருப்பார் யாரும் இல்லை; எவரும் அதனைக் கடந்து செல்லமாட்டார். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 44 (ECTA)
நான் பாபிலோனில் பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதன் வாயினின்று கக்கச்செய்வேன்; மக்களினங்கள் இனி ஒருபோதும் அங்குக் செல்லமாட்டா; பாபிலோன் மதிலும் தரைமட்டமாக்கப்படும். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 45 (ECTA)
என் மக்களே, அதனின்று வெளியேறுங்கள்; ஆண்டவரின் வெஞ்சினத்தினின்று ஒவ்வொருவனும் தன் உயிரைக் காத்துக்கொள்ளட்டும். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 46 (ECTA)
உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்; நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக் கலங்காதீர்கள்; ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்; மறு ஆண்டில் மற்றொரு வதந்தி உருவெடுக்கும்; நாட்டில் வன்முறை மலியும்; ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய் எழுவான். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 47 (ECTA)
எனவே நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன். அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்; கொலையுண்டோர் அனைவரும் அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 48 (ECTA)
விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அனைத்தும் பாபிலோனைக் குறித்து மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்; வடக்கினின்று “அழிப்போர்” அதை எதிர்த்து வருவர், என்கிறார் ஆண்டவர். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ; திவெ 18: 20. ]
எரேமியா 51 : 49 (ECTA)
பாபிலோனை முன்னிட்டு மண்ணுலகு எங்கும் மக்கள் கொலையுண்டு வீழ்ந்தனர்; இஸ்ரயேலில் கொலையுண்டோரை முன்னிட்டு இப்போது பாபிலோன் வீழ்ச்சியுற வேண்டும். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ; எரே 51:10-11; திபா 137:8; திவெ 8:5- 6. ]
எரேமியா 51 : 50 (ECTA)
வாளுக்குத் தப்பியவர்களே, போய்விடுங்கள், நிற்காதீர்கள்; தொலையிலிருந்து ஆண்டவரை நினைவுகூருங்கள்; உங்கள் இதயத்தில் எருசலேம் இடம்பெறட்டும். [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 51 (ECTA)
பழிமொழி கேட்டதால் நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்; ஆண்டவரது இல்லத்தின் திரு இடங்களுக்குள் அன்னியர் நுழைந்துவிட்டதால், மானக்கேடு எங்கள் முகங்களை மூடிக்கொண்டது. [* :64 எசா 13:1; 14:23; 47:1- 15 ]
எரேமியா 51 : 52 (ECTA)
ஆகவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். நான் அதன் சிலைகளைத் தண்டிப்பேன்; அந்நாடு எங்கணும் காயம்பட்டோர் குமுறியழுவர்.
எரேமியா 51 : 53 (ECTA)
பாபிலோன் வானம்வரை தன்னை உயர்த்திக் கொண்டாலும், தன் உயர்ந்த கோட்டை கொத்தளங்களை வலுப்படுத்திக் கொண்டாலும், அழிப்போரை நான் அதன் மீது அனுப்புவேன், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 51 : 54 (ECTA)
பாபிலோனிலிருந்து கூக்குரல் கேட்கிறது; கல்தேயரின் நாட்டிலிருந்து பேரழிவின் இரைச்சல் கேட்கிறது.
எரேமியா 51 : 55 (ECTA)
ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்; அதன் பெரும் ஆரவாரத்தை அடக்குகிறார்; அவர்களின் அலைகள் பெரும் வெள்ளம்போல் முழங்கும். அவர்கள் உரத்த குரலில் ஆரவாரம் செய்வர்.
எரேமியா 51 : 56 (ECTA)
“அழிப்போன்” பாபிலோன் மீதே வந்துவிட்டான். அதன் படைவீரர்கள் பிடிபட்டார்கள். அவர்கள் அம்புகள் முறித்தெறியப்பட்டன. ஆண்டவர் பழிவாங்கும் கடவுள்; அவர் திண்ணமாய் பதிலடி கொடுப்பார்.
எரேமியா 51 : 57 (ECTA)
அதன் தலைவர்கள், ஞானிகள், ஆளுநர்கள், படைத்தலைவர்கள், படைவீரர்கள் ஆகிய எல்லாரையும் நான் குடிவெறி கொள்ளச்செய்வேன். அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்; துயில் எழவே மாட்டார்கள், என்கிறார் “படைகளின் ஆண்டவர்” என்னும் பெயர் கொண்ட மன்னர்.
எரேமியா 51 : 58 (ECTA)
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; பாபிலோனின் அகன்ற மதில்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்; அதன் உயர்ந்த வாயில்கள் தீக்கிரையாகும்; மக்களின் உழைப்பு வீணாகும்; மக்களினங்களின் முயற்சிகள் தீயோடு தீயாகும்.
எரேமியா 51 : 59 (ECTA)
யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனும் அரசப் பயணவிடுதிப் பொறுப்பாளருமான செராயா செதேக்கியாவோடு பாபிலோனுக்குச் சென்றபொழுது, இறைவாக்கினர் எரேமியா அவருக்குக் கொடுத்த கட்டளை;
எரேமியா 51 : 60 (ECTA)
பாபிலோன் மேல் வரவிருந்த தண்டனைகள் அனைத்தையும், அதாவது பாபிலோன் மேல் குறித்து மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் எரேமியா ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைத்தார்.
எரேமியா 51 : 61 (ECTA)
எரேமியா செராயாவிடம் கூறியது: நீ பாபிலோனை அடைந்தபின், இச்சொற்களை எல்லாம் கண்டிப்பாக வாசி.
எரேமியா 51 : 62 (ECTA)
‘ஆண்டவரே, மனிதரோ விலங்கோ எதுவும் வாழாதபடி என்றும் பாழடைந்து கிடக்கும் அளவுக்கு நீர் அந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்’ எனச் சொல்.
எரேமியா 51 : 63 (ECTA)
இச்சுருளை வாசித்து முடித்த பின்னர், அதை ஒரு கல்லில் கட்டி, யூப்பிரத்தீசு நடுவே எறிந்துவிடு. * திவெ 18:21..
எரேமியா 51 : 64 (ECTA)
“நான் பாபிலோனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைக்குப் பின்னர், அது மீண்டும் தலைதூக்க முடியாமல், இவ்வாறே மூழ்கிப்போகும்” என்று சொல். எரேமியாவின் சொற்கள் இத்துடன் முற்றும். * திவெ 18:21..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64