எரேமியா 49 : 1 (ECTA)
அம்மோனுக்கு எதிராக அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா? அதற்கு வழிமரபே கிடையாதா? மில்க்கோம்* காத்தைக் கைப்பற்றியது ஏன்? அவன் மக்கள் அதன் நகர்களில் குடியிருப்பது ஏன்? [* எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8- 11 ; * ‘அவர்களின் அரசன்’ என்பது எபிரேய பாடம். ]
எரேமியா 49 : 2 (ECTA)
இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அம்மோனியரின் இராபாவுக்கு எதிராகப் போர்முரசு ஒலிக்கச் செய்வேன். அது பாழடைந்த குவியல் ஆகும்; அதன் ஊர்கள்* தீக்கிரையாகும்; தன்னைக் கைப்பற்றியோரை இஸ்ரயேல் கைப்பற்றிக் கொள்ளும், என்கிறார் ஆண்டவர். [* எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8- 11 ; * ‘புதல்வியர்’ என்பது எபிரேய பாடம்.. ]
எரேமியா 49 : 3 (ECTA)
எஸ்போனே, புலம்பியழு; ஆயி பாழடைந்துவிட்டது. இராபாவின் புதல்வியரே ஓலமிடுங்கள்; சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள்; ஒப்பாரி வையுங்கள்; மதில்களுக்கிடையே அங்குமிங்கும் ஓடுங்கள்; மில்கோம் நாடுகடத்தப்படுவான். அவன் அர்ச்சகர்களும் தலைவர்களும் அவனோடு செல்வார்கள். [* எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8- 11 ]
எரேமியா 49 : 4 (ECTA)
பற்றுறுதியற்ற மகளே, உன் பள்ளத்தாக்குகள் பற்றி, உன் செழிப்பான பள்ளத்தாக்குகள் பற்றி, பெருமையடிப்பானேன்? உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்கிறாய்; ‘எனக்கு எதிராய் எவன் வருவான்?’ எனச் சொல்லிக்கொள்கின்றாய். [* எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8- 11 ]
எரேமியா 49 : 5 (ECTA)
உன்னைச் சுற்றியிருப்போர் அனைவரிடமிருந்தும் உனக்குத் திகில் வருவிப்பேன், என்கிறார் படைகளின் ஆண்டவராகிய தலைவர். நீங்கள் எல்லாரும் தலை தெறிக்க ஓடுமாறு விரட்டியடிக்கப்படுவீர்கள்; தப்பியோடுவோரை ஒன்று சேர்க்க எவரும் இரார். [* எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8- 11 ]
எரேமியா 49 : 6 (ECTA)
பின்னர், அம்மோனியரின் சொத்து, செல்வங்களைத் திரும்பக் கொடுப்பேன், என்கிறார் ஆண்டவர். [* எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8- 11 ]
எரேமியா 49 : 7 (ECTA)
ஏதோமுக்கு எதிராக ஏதோமைக் குறித்து, படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; தேமானில் ஞானம் அற்றுப்போயிற்றா? மதி நுட்பமுடையோரிடமிருந்து அறிவுரை ஒழிந்துபோயிற்றா? அவர்களின் ஞானம் மறைந்து போயிற்றா? [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 8 (ECTA)
தெதோன் குடிமக்களே, திரும்புங்கள், தப்பியோடுங்கள்; பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்; நான் ஏசாவைத் தண்டிக்கும் அவனது காலத்தில் அழிவை அவன்மீது கொண்டுவருவேன். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 9 (ECTA)
திராட்சைப் பழம் பறிப்போர் உன்னிடம் வந்தால், விடுபட்ட பழங்கள் எஞ்சியிராவோ? இரவில் திருடர் வருவாராயின், தேவைக்குமேல் திருடமாட்டார் அன்றோ? [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 10 (ECTA)
நானோ ஏசாவை வெறுமையாக்கிவிட்டேன்; அவனுடைய பதுங்கிடங்களை வெளிப்படுத்திவிட்டேன். இனி அவனால் மறைந்திருக்க முடியாது. அவன் வழிமரபினர், சகோதரர், அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்; அவன் முற்றிலும் அழிந்து போவான். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 11 (ECTA)
அனாதைகளைப்பற்றிக் கவலை கொள்ளாதே. நான் அவர்களை வாழவைப்பேன். உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 12 (ECTA)
ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நியாயப்படி துன்பக்கலத்தில் குடிக்கத் தேவையில்லாதவர்களே குடிக்கவேண்டியிருந்தது என்றால், நீ எவ்வாறு தண்டனைக்குத் தப்பமுடியும்? இல்லை, நீ தண்டனை பெறாது போகமாட்டாய்; நீ துன்பக்கலத்தில் குடித்தே தீருவாய். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 13 (ECTA)
ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: என்மேல் ஆணை! பேரச்சம், கண்டனம், அழிவு, பழிப்பு ஆகியவற்றுக்குப் போஸ்ரா ஆளாகும்; அதன் நகர்கள் அனைத்தும் என்றென்றும் பாழாய்க் கிடக்கும். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 14 (ECTA)
நான் ஆண்டவரிடமிருந்து ஒரு செய்தி கேட்டேன். ‘ஒன்றுகூடுங்கள், அதனை எதிர்க்க வாருங்கள், போருக்குப் புறப்படுங்கள்’ என்று சொல்லுமாறு, மக்களினத்தார்க்கு ஒரு தூதன் அனுப்பப்பட்டுள்ளான். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 15 (ECTA)
பார்! மக்களினத்தாருள் உன்னைச் சிறியதாய் ஆக்குவேன்; மாந்தர்தம் இகழ்ச்சிக்கு நீ ஆளாவாய். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 16 (ECTA)
பாறை இடுக்குகளில் வாழ்பவனே, குன்றின் உச்சியைப் பிடித்திருப்பவனே, நீ விளைவித்த அச்சமும் உன் உள்ளத்தின் இறுமாப்பும் உன்னை ஏமாற்றிவிட்டன; நீ கழுகைப் போல் உன் கூட்டை உயரத்தில் கட்டினாலும், நான் உன்னை அங்கிருந்து கீழே தள்ளிவிடுவேன், என்கிறார் ஆண்டவர். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 17 (ECTA)
ஏதோம் பேரச்சம் தரக்கூடியதாய் மாறும். அதன் வழியே போகிறவன் எவனும் அதிர்ச்சியடைவான்; அதன் அழிவு கண்டு ஏளனம் செய்வான். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 18 (ECTA)
சோதோம், கொமோராவும் அவற்றின் அண்டை நகர்களும் வீழ்த்தப்பட்டபொழுது நிகழ்ந்ததுபோல், ஏதோமில் ஒருவனும் குடியிருக்கமாட்டான்; எவனும் தங்கமாட்டான், என்கிறார் ஆண்டவர். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ; தொநூ 19:24-2 5 ]
எரேமியா 49 : 19 (ECTA)
யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவது போல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென விரட்டியடிப்பேன்; நான் தேர்ந்துகொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக் கேட்பவன் யார்? எந்தத் தலைவன் என்னை எதிர்த்து நிற்பான்? [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 20 (ECTA)
எனவே ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், தேமானின் குடிகளுக்கு எதிராக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்; மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்; ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 21 (ECTA)
அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்; அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 22 (ECTA)
இதோ! கழுகைப் போல் ஒருவன் வானளாவப் பறந்து, கீழ்நோக்கிப் பாய்வான்; போஸ்ரா மேல் தன் இறக்கைகளை விரிப்பான். அந்நாளில் ஏதோமின் படைவீர்களுடைய இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும். [* எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
எரேமியா 49 : 23 (ECTA)
தமஸ்குவுக்கு எதிராக தமஸ்கு குறித்து: ஆமாத்தும் அர்ப்பாத்தும் கலக்கம் அடைந்துள்ளன; கெட்ட செய்தியை அவை கேள்வியுற்றன; அவை அச்சத்தால் நடுங்குகின்றன; கடலைப்போல் தத்தளிக்கின்றன; அவற்றுக்கு அமைதியே கிடையாது. [* எசா 17:1-3; ஆமோ 1:3-5; செக் 9: 1 ]
எரேமியா 49 : 24 (ECTA)
தமஸ்கு தளர்ந்துவிட்டது; தப்பியோடப் பார்க்கின்றது; அதனைக் கிலி பிடித்துக்கொண்டது; வேதனை, துயரத்தின் பிடியில் பேறுகாலப் பெண் தவிப்பதுபோல் அதுவும் தவிக்கின்றது. [* எசா 17:1-3; ஆமோ 1:3-5; செக் 9: 1 ]
எரேமியா 49 : 25 (ECTA)
புகழ் பெற்ற நகர் — மகிழ்ச்சி பொங்கும் நகர் — இப்படிக் கைவிடப்பட்டுக் கிடக்கிறதே! [* எசா 17:1-3; ஆமோ 1:3-5; செக் 9: 1 ]
எரேமியா 49 : 26 (ECTA)
அதன் இளைஞர்கள் தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள். அதன் படைவீரர்கள் அனைவரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள், என்கிறார் படைகளின் ஆண்டவர். [* எசா 17:1-3; ஆமோ 1:3-5; செக் 9: 1 ]
எரேமியா 49 : 27 (ECTA)
தமஸ்குவின் மதில்களில் தீவைப்பேன்; பென்அதாதின் கோட்டைகளை அது சுட்டெரிக்கும். [* எசா 17:1-3; ஆமோ 1:3-5; செக் 9: 1 ]
எரேமியா 49 : 28 (ECTA)
கேதார், ஆட்சோர் அரசுகளுக்கு எதிராக பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் வீழ்த்திய கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி, ஆண்டவர் கூறுவது இதுவே; புறப்படுங்கள், கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்; கீழ்த்திசை மக்களை அழித்தொழியுங்கள்.
எரேமியா 49 : 29 (ECTA)
அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் பிடிபடும்; கூடாரத் துணிகளும் மற்ற எல்லாப் பொருள்களும் கைப்பற்றப்படும்; அவர்களின் ஒட்டகங்களை அவர்களிடமிருந்து ஓட்டிச்செல்வர்; “எப்பக்கமும் ஒரே திகில்” என மனிதர் ஓலமிடுவர்.
எரேமியா 49 : 30 (ECTA)
ஆட்சோரின் குடிமக்களே! தப்பியோடுங்கள், தூரமாகச் சென்று பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் உங்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியுள்ளான்; உங்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்துள்ளான்.
எரேமியா 49 : 31 (ECTA)
புறப்படுங்கள்; கதவுகளோ தாழ்ப்பாள்களோ இன்றி அமைதியோடும் பாதுகாப்போடும் வாழும் மக்களினத்தார்க்கு எதிராக — தனித்து வாழும் மக்களினத்தார்க்கு எதிராக முன்னேறிச் செல்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 49 : 32 (ECTA)
அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையடிக்கப்படும்; அவர்களின் எண்ணற்ற மந்தைகள் பறிமுதலாகும்; முன்தலையை மழித்துக்கொள்ளும் மக்களைக் காற்றில் பறக்கவிடுவேன்; எப்பக்கமுமிருந்தும் அவர்கள்மேல் அழிவைக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 49 : 33 (ECTA)
ஆட்சோர், குள்ளநரிகளின் உறைவிடம் ஆகும்; என்றும் பாழடைந்து கிடக்கும்; அங்கு எவரும் குடியிருக்கமாட்டார்; எவரும் அதில் தங்கவும் மாட்டார்.
எரேமியா 49 : 34 (ECTA)
ஏலாமுக்கு எதிராக யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஏலாமைக் குறித்து இறைவாக்கினர் ஏரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:
எரேமியா 49 : 35 (ECTA)
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஏலாமின் வலிமைக்கு ஆதாரமான வில்லை முறித்துப்போடுவேன்.
எரேமியா 49 : 36 (ECTA)
வானத்தின் நான்கு திசைகளினின்று நால்வகைக் காற்றுகளை ஏலாம்மீது வரவழைப்பேன்; இந்த எல்லாக் காற்றுகளினாலும் அவர்களைச் சிதறடிப்பேன். ஏலாமினின்று விரட்டியடிக்கப்பட்டோர் சென்றடையாத நாடே இராது.
எரேமியா 49 : 37 (ECTA)
ஏலாமின் எதிரிகள் முன்னும், அதன் உயிரைப் பறிக்கத் தேடுவோர் முன்னும் நான் அதை நடுங்கச்செய்வேன்; அவர்கள்மேல் தண்டனை வருவிப்பேன். என் சினம் அவர்கள் மேல் மூண்டெழும், என்கிறார் ஆண்டவர். அவர்களை முற்றிலும் அழித்துத் தீர்க்கும்வரை, அவர்களைப் பின்தொடருமாறு வாளை அனுப்பி வைப்பேன்.
எரேமியா 49 : 38 (ECTA)
ஏலாமில் என் அரியணையை அமைப்பேன்; அவர்களின் அரசரையும் தலைவர்களையும் அழிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 49 : 39 (ECTA)
ஆயினும் ,இறுதி நாள்களில் நான் ஏலாமின் சொத்து, செல்வங்களைத் திரும்பக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39