எரேமியா 48 : 1 (ECTA)
மோவாபுக்கு எதிராக மோவாபைக் குறித்து, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நெபோவுக்கு ஐயோ கேடு! அது பாழடைந்து கிடக்கிறது. கிரியத்தாயிம் அவமானத்துக்கு உள்ளாகிக் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் கோட்டை இழிவுபடுத்தப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 2 (ECTA)
போவாபின் புகழ் மங்கிவிட்டது; எஸ்போனில் அதற்குத் தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது: ‘வாருங்கள்; அதனை ஒரு நாடாய் இல்லாதவாறு சிதைப்போம்’. மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்; வாள் உன்னைத் துரத்தி வரும். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 3 (ECTA)
ஓரொனாயிமினின்று கூக்குரல் ஒலிக்கிறது. ‘கொடுமை, பேரழிவு’ எனக் கேட்கிறது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 4 (ECTA)
மோவாபு அழிக்கப்பட்டுவிட்டது; அதன் குழந்தைகளின் அழுகுரல் கேட்கின்றது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 5 (ECTA)
லூகித்துக்கு ஏறிச்செல்லும் வழியில் அவர்கள் அழுதுகொண்டே போகிறார்கள்; ஓரொனாயிமுக்கு இறங்கிச் செல்லும் வழியில் அழிவின் புலம்பல்* கேட்கிறது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ; ‘புலம்பலின் துயரம்’ என்பது எபிரேய பாடம். ]
எரேமியா 48 : 6 (ECTA)
தப்பியோடுங்கள், உங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்; பாலை நிலத்துக் காட்டுக்கழுதைபோல் மாறுங்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 7 (ECTA)
உன் கோட்டைகளையும்* கருவூலங்களையும் நம்பியிருந்தாய்; நீயும் கைப்பற்றப்படுவாய். கெமோசு தெய்வம் நாடுகடத்தப்படும்; அதன் அர்ச்சகர்களும் தலைவர்களும் அதனோடு செல்வார்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ; ‘செயல்கள்’ என்பது எபிரேய பாடம்.. ]
எரேமியா 48 : 8 (ECTA)
‘அழிப்போன்’ ஒவ்வொரு நகருக்கும் வருவான். எந்த நகரும் தப்பாது. ஆண்டவர் சொல்லியிருப்பது போல் பள்ளத்தாக்குகள் பாழாகும்; சமவெளிகள் அழிக்கப்படும். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 9 (ECTA)
மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்; அது பறந்தோடட்டும்; அதன் நகர்கள் பாழாக்கப்படும்; அவை குடியிருப்போர் அற்றுப் போகும். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 10 (ECTA)
ஆண்டவர்தம் அலுவலை அக்கறையின்றிச் செய்பவன் சபிக்கப்பட்டவன்; குருதி சிந்தாமல் தன் வாளை வைத்திருப்பவனும் சபிக்கப்பட்டவனே. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 11 (ECTA)
மோவாபு இளமைமுதல் அமைதியில் வாழ்ந்துவருகிறது; மண்டியை அடியில் கொண்ட பழந் திராட்சை இரசம் அது . அது கலத்தினின்று கலத்திற்கு மாற்றப்படாதது; நாடுகடத்தப்படாதது; அதன் சுவை குன்றவில்லை; அதன் நறுமணம் மாறவில்லை. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 12 (ECTA)
எனவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது நான் ‘கவிழ்ப்போரை’ அனுப்புவேன். அவர்கள் அதைக் கவிழ்ப்பார்கள்; அதன் கலங்களை வெறுமையாக்குவார்கள்; அதன் சாடிகளை நொறுக்குவார்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 13 (ECTA)
இஸ்ரயேல் வீட்டார் தாம் நம்பிக்கை வைத்திருந்த பெத்தேலைக் குறித்து இகழ்ச்சியுற்றது போல, மோவாபு கெமோசைக் குறித்து இகழ்ச்சியுறும். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 14 (ECTA)
‘நாங்கள் படைவீரர்கள்; போரில் வல்லவர்கள்’ என்று நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்? [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 15 (ECTA)
“மோவாபையும் அதன் நகர்களையும் அழிப்பவன் வந்துவிட்டான்; அதன் சிறந்த இளைஞர்கள் கொலைக் களத்திற்குப் போய் விட்டார்கள்,” என்கிறார் படைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 16 (ECTA)
மோவாபின் அழிவு அண்மையில் உள்ளது; தீங்கு அதை நோக்கி விரைந்து வருகிறது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 17 (ECTA)
அதைச் சுற்றியிருப்போரே, நீங்கள் அனைவரும் அதற்காகத் துக்கம் கொண்டாடுங்கள். அதன் புகழை அறிந்திருப்போரே, நீங்கள் அனைவரும் ‘வலிமைமிக்க செங்கோல் முறிந்தது எங்ஙனம்? மேன்மைமிக்க கோல் உடைந்தது எவ்வாறு?’ என்று கேளுங்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 18 (ECTA)
மகள் தீபோனின் குடிமகனே, உன் மேன்மையை விட்டு இறங்கி வா; வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள்.
மோவாபை அழிப்பவன் உனக்கு எதிராக எழுந்துவிட்டான்; உன் கோட்டைகளை அவன் தகர்த்து விட்டான். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 19 (ECTA)
அரோயேரின் குடிமகனே! நீ சாலை ஓரமாய் நின்று கவனி; ஓட்டம்பிடிக்கிறவனையும் தப்பி ஓடுகிறவளையும் நோக்கி, ‘என்ன நடந்தது?’ என்று கேள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 20 (ECTA)
மோவாபு அழிக்கப்பட்டுச் சிறுமைக்குள்ளானது; அழுது புலம்புங்கள்; கூக்குரலிடுங்கள்; மோவாபு பாழடைந்துவிட்டது என அர்னோனில் அறிவியுங்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 21 (ECTA)
சமவெளி நாடுகள்மீது தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டது; ஓலோன், யாகுசா, மேப்பாத்து, [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 22 (ECTA)
தீபோன், நெபோ, பெத்திப்லத்தாயிம், [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 23 (ECTA)
கிர்யத்தாயிம், பெத்-காமூல், பெத்-மெகோன், [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 24 (ECTA)
கெரியோத்து, போஸ்ரா மீதும் அருகிலும் தொலைவிலும் உள்ள மோவாபு நாட்டு நகர்கள் மீதும் வந்து விட்டது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 25 (ECTA)
மோவாபின் கொம்பு முறிந்து விட்டது; அதன் கையும் ஒடிந்து போயிற்று, என்கிறார் ஆண்டவர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 26 (ECTA)
மோவாபுக்குப் போதை வெறி ஏற்றுங்கள்; ஏனெனில் அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமையடித்துக் கொண்டது. அது, தான் வாந்தி எடுத்ததில் கிடந்து புரளும்; ஏளனத்துக்கு ஆளாகும். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 27 (ECTA)
இஸ்ரயேல் உன் நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றி நீ பேசும்போதெல்லாம் உன் தலையை ஆட்டிப் பழித்தாயே? அவன் என்ன, திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவனா? [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 28 (ECTA)
மோவாபின் குடிமக்களே, நகர்களை விட்டு வெளியேறுங்கள்; பாறைப் பகுதியில் குடியேறுங்கள். பாறையின் இடுக்குகளில் கூடுகட்டி வாழும் புறாவைப் போல் இருங்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 29 (ECTA)
மோவாபின் செருக்கைப் பற்றி நாங்கள் கேள்வியுற்றோம்; பெரிதே அதன் இறுமாப்பு! அதன் ஆணவம், செருக்கு, அகங்காரம், அகந்தை பற்றி எல்லாம் கேள்வியுற்றோம். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 30 (ECTA)
அதன் திமிரை நான் அறிவேன், என்கிறார் ஆண்டவர். அதன் தற்புகழ்ச்சி எல்லாம் பொய்; அதன் செயல்கள் யாவும் பொய். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 31 (ECTA)
மோவாபை முன்னிட்டு நான் ஓலமிடுவேன்; மோவாபு முழுவதையும் குறித்து அலறியழுவேன்; கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப் புலம்புவேன். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 32 (ECTA)
சிப்மாவின் திராட்சைக் கொடியே, யாசேருக்காக அழுவதைவிட அதிகமாய் உனக்காக அழுவேன். உன் கொடிகள் கடல் வரை படர்ந்துள்ளன; யாசேர் கடலை எட்டியுள்ளன. கோடைப் பழங்கள்மீதும் திராட்சைப் பழங்கள்மீதும் ‘அழிப்போன்’ பாய்ந்து வந்தான். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 33 (ECTA)
செழிப்பான மோவாபு நாட்டினின்று மகிழ்ச்சியும், அக்களிப்பும் அகற்றப்பட்டுவிட்டன; திராட்சை ஆலைகளில் இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்; மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன் எவனும் இலலை; மகிழ்ச்சியின் ஆரவாரம் அங்கு எழுவதில்லை. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 34 (ECTA)
எஸ்போனும் எலயாலேயும் கூக்குரலிடுகின்றன. யாகாசு வரை அவற்றின் அழுகுரல் கேட்கிறது; சோவாரிலிருந்து ஒரோனாயிம், எக்லாத்து செலிசியாவரை அது ஒலிக்கிறது. ஏனெனில், நிம்ரிம் தண்ணீரும் வற்றிப்போனது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 35 (ECTA)
மோவாபின் தொழுகைமேடுகளில் தன் தெய்வங்களுக்குப் பலி செலுத்தித் தூபம் காட்டுபவனை நான் அழித்து விடுவேன், என்கிறார் ஆண்டவர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 36 (ECTA)
எனவே, என் இதயம் புல்லாங்குழல் போன்று மோவாபுக்காகப் புலம்புகிறது; என் இதயம் புல்லாங்குழல் போன்று கீர்கெரேசின் மனிதருக்காகச் சோகப் பண் இசைக்கிறது. ஏனெனில் அவர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் அழிந்து விட்டன. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 37 (ECTA)
அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டுள்ளன; தாடிகள் அகற்றப்பட்டுள்ளன. எல்லாக் கைகளிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. இடைகளில் சாக்கு உடை காணப்படுகிறது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 38 (ECTA)
மோவாபின் வீட்டு மேல்தளங்கள் எல்லாவற்றிலும், அதன் தெருக்களிலும் ஒரே புலம்பல்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போன்று மோவாபை நான் உடைத்தெறிந்தேன், என்கிறார் ஆண்டவர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 39 (ECTA)
இப்படி அது நொறுக்கப்பட்டுக் கிடக்கின்றதே! இப்படி அவர்கள் புலம்புகின்றார்களே! இப்படி மோவாபு வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றதே! மோவாபு தன்னைச் சுற்றியிருப்போர் எல்லார் முன்னும் ஏளனத்துக்கும் பேரச்சத்திற்கும் உள்ளாயிற்று. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 40 (ECTA)
ஆண்டவர் கூறுவது இதுவே; ஒருவன் கழுகைப்போல் பாய்ந்து வருவான்; மோவாபின்மீது தன் இறக்கைகளை விரிப்பான். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 41 (ECTA)
நகர்கள் பிடிபடும்; கோட்டைகள் கைப்பற்றப்படும். அந்நாளில் மோவாபிய படைவீரர்களின் இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 42 (ECTA)
மோவாபு அழிக்கப்படும்; இனி அது ஒரு மக்களினமாய் இராது. அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமை அடித்துக் கொண்டது. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 43 (ECTA)
மோவாபின் மகனே, திகிலும் படுகுழியும் கண்ணியுமே உன்முன் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 44 (ECTA)
திகிலுக்கு அஞ்சி ஓடுபவன் படுகுழியில் விழுவான்; படுகுழியினின்று வெளியே வருபவன் கண்ணியில் மாட்டிக்கொள்வான். அவர்களுடைய தண்டனைக் காலத்தில் இவற்றை மோவாபின்மீது வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 45 (ECTA)
தப்பியோடுவோர் எஸ்போனின் நிழலில் வலுவிழந்து நிற்கின்றனர்; எஸ்போனிலிருந்து நெருப்பு கிளம்பிற்று; சீகோனிலிருந்து தீப்பிழம்பு புறப்பட்டது; மோவாபின் நெற்றியை அது விழுங்கிற்று; கலக்காரரின் உச்சந்தலையை அது பொசுக்கிற்று. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 46 (ECTA)
மோவாபே, உனக்கு ஐயோ கேடு! கெமோசின் மக்கள் அழிந்துபோயினர்; உன் புதல்வர் நாடு கடத்தப்பட்டனர்; உன் புதல்வியரும் நாடுகடத்தப்பட்டனர். [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
எரேமியா 48 : 47 (ECTA)
ஆயினும், இறுதி நாள்களில் அடிமைத்தனத்தினின்று மோவாபை நான் திரும்பக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர். மோவாபின் மீதான தண்டனைத் தீர்ப்பு இத்துடன் முற்றிற்று. [* எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8- 11 ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47