எரேமியா 39 : 1 (ECTA)
எருசலேமின் வீழ்ச்சி யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதத்தில், பாபிலோனிய மன்னன் நெபுகதனேசர் அவனுடைய எல்லாப் படைகளோடும் எருசலேமுக்கு எதிராக வந்து அதை முற்றுகையிட்டான்.
எரேமியா 39 : 2 (ECTA)
செதேக்கியாவின் பதினொன்றாம் ஆண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது.
எரேமியா 39 : 3 (ECTA)
நேர்கல் சரேட்சர், சம்கூர் நெபோ, சர்செக்கிம் ரப்சாரிம், நேர்கல் சரேட்சர் ரப்மாகு உள்படப் பாபிலோனிய மன்னனின் தலைவர்கள் அனைவரும் உள்ளே புகுந்து, நடுவாயிலில் அமர்ந்தார்கள்.
எரேமியா 39 : 4 (ECTA)
யூதாவின் அரசன் செதேக்கியாவும் போர் வீரர் அனைவரும் அவர்களைக் கண்டவுடன் அரச பூங்காவின் இரு மதில்களுக்கிடையே அமைந்த வாயில் வழியாக இரவோடு இரவாய் நகரைவிட்டு வெளியேறி, அராபாவை நோக்கித் தப்பியோடினர்.
எரேமியா 39 : 5 (ECTA)
ஆனால் கல்தேயப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோ சமவெளியில் செதேக்கியாவைப் பிடித்து, ஆமாத்து நாட்டின் ரிப்லாவில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.
எரேமியா 39 : 6 (ECTA)
பாபிலோனிய மன்னன் ரிப்லாவில் செதேக்கியாவின் புதல்வர்களை அவன் கண்முன்னே கொன்றான். மேலும் யூதாவின் தலைவர்கள் அனைவரையும் கொன்றான்.
எரேமியா 39 : 7 (ECTA)
அவன் செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச்சென்றான்.
எரேமியா 39 : 8 (ECTA)
அரச மாளிகையையும் மக்களின் வீடுகளையும் கல்தேயர் தீக்கிரையாக்கினர்; எருசலேம் மதில்களையும் தகர்த்தெறிந்தனர்.
எரேமியா 39 : 9 (ECTA)
மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான், நகரில் எஞ்சியிருந்த மக்களையும் தம்மிடம் சரணடைந்திருந்தவர்களையும் பாபிலோனுக்கு நாடுகடத்தினார்.
எரேமியா 39 : 10 (ECTA)
ஆனால் யாதுமற்ற ஏழைகளை மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் யூதா நாட்டில் விட்டுவைத்ததோடு திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் அவர்களுக்கு வழங்கினார். <b> /b> "முப்பது" என்பது எபிரேய பாடம்..
எரேமியா 39 : 11 (ECTA)
எரேமியாவின் விடுதலை பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் எரேமியாவைக் குறித்து மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதானுக்குக் கொடுத்த கட்டளை:
எரேமியா 39 : 12 (ECTA)
“இவரைக் கூட்டிக்கொண்டு போய் நன்கு கவனித்துக் கொள்; தீங்கு எதுவும் அவருக்குச் செய்யாதே; அவர் விருப்பப்படியே அவரை நடத்து.”
எரேமியா 39 : 13 (ECTA)
மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான், அரசவையோர் தலைவன் நெபுசஸ்பான் ரப்சாரிம், நேர்கல் சரேட்சர் ரப்மாகு உள்படப் பாபிலோனிய மன்னனின் தலைவர்கள் அனைவரும் ஆளனுப்பி,
எரேமியா 39 : 14 (ECTA)
காவல் கூடத்தினின்று எரேமியாவைக் கூட்டி வந்தனர். வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்லும்படி சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவிடம் அவரை ஒப்படைத்தனர். எனவே அவர் மக்களிடையே வாழ்ந்துவந்தார்.
எரேமியா 39 : 15 (ECTA)
எபேதுமெலேக்கு எரேமியா காவல்கூடத்தில் இன்னும் அடைபட்டிருக்கையில், ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது;
எரேமியா 39 : 16 (ECTA)
நீ போய், எத்தியோப்பியரான எபேதுமெலேக்கிடம் சொல்; இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இந்நகருக்கு எதிராக நான் கூறியிருந்தவற்றை நிறைவேற்றுவேன்; நன்மையை அல்ல, தீமையையே வருவிப்பேன். அந்நாளில் இவை உன் கண் முன்பாகவே நிகழும்.
எரேமியா 39 : 17 (ECTA)
ஆயினும், அந்நாளில் நான் உன்னை விடுவிப்பேன், என்கிறார் ஆண்டவர். நீ யாரைக் குறித்து அஞ்சுகிறாயோ அம்மனிதர்களிடம் நீ கையளிக்கப்பட மாட்டாய்.
எரேமியா 39 : 18 (ECTA)
நான் உறுதியாக உன்னை உயிரோடு காப்பாற்றுவேன். நீ வாளால் மடிய மாட்டாய். உன் உயிரே உனது கொள்ளைப்பொருளாய் அமையும்; ஏனெனில், நீ என்னில் நம்பிக்கை வைத்துள்ளாய், என்கிறார் ஆண்டவர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18