எரேமியா 37 : 1 (ECTA)
யோசியாவின் மகனும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூதா நாட்டின் அரசனாக ஏற்படுத்தியிருந்தவனுமான செதேக்கியா, யோயாக்கிமின் மகன் கோனியாவுக்குப் பதிலாக ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான்.
எரேமியா 37 : 2 (ECTA)
அவனோ, அவனுடைய பணியாளரோ நாட்டு மக்களோ இறைவாக்கினர் எரேமியா வாயிலாக ஆண்டவர் உரைத்திருந்த சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
எரேமியா 37 : 3 (ECTA)
செலேமியாவின் மகன் எகுக்கலையும், மாசேயாவின் மகனும் குருவுமான செப்பனியாவையும் அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எரேமியாவிடம் அனுப்பிவைத்து, "நம் கடவுளான ஆண்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்" என்று அவரை வேண்டிக்கொண்டான்.
எரேமியா 37 : 4 (ECTA)
அந்நாள்களில் மக்களிடையே எரேமியா தடையின்றி நடமாடிக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை.
எரேமியா 37 : 5 (ECTA)
இதற்கிடையில் பார்வோனின் படை எகிப்தினின்று புறப்பட்டு வந்தது. எருசலேமை ஏற்கெனவே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த கல்தேயர் இச்செய்தியைக் கேள்வியுற்றதும், எருசலேமைவிட்டுப் பின்வாங்கினர்.
எரேமியா 37 : 6 (ECTA)
அப்பொழுது இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது;
எரேமியா 37 : 7 (ECTA)
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் அறிவுரையை நாடி உங்களை என்னிடம் அனுப்பிவைத்த யூதா அரசனிடம் நீங்கள் சொல்லவேண்டியது; இதோ, உனக்குத் துணை புரிய வந்துள்ள பார்வோனின் படை தன் சொந்த நாடான எகிப்துக்கே திரும்பிப் போகும்.
எரேமியா 37 : 8 (ECTA)
கல்தேயர் மீண்டும் வந்து இந்நகரைத் தாக்குவர்; அதனைக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவர்.
எரேமியா 37 : 9 (ECTA)
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; கல்தேயர் நம்மை விட்டுத் திரும்பிப் போவது உறுதி என்று சொல்லி உங்களையே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் அவர்கள் திரும்பிப் போகவேமாட்டார்கள்.
எரேமியா 37 : 10 (ECTA)
உங்களை எதிர்த்துப் போரிட்டு வரும் கல்தேயரின் படை முழுவதையும் நீங்கள் முறியடித்தாலும், அவர்களுள் தாக்குண்ட வீரர் மட்டுமே தம் கூடாரங்களில் எஞ்சியிருந்தாலும், அவர்களே கிளர்ந்தெழுந்து இந்நகரைத் தீக்கிரையாக்குவர்.
எரேமியா 37 : 11 (ECTA)
பார்வோன் படையெடுத்து வரவே, கல்தேயர் படை எருசலேமை விட்டுப் பின்வாங்கியது.
எரேமியா 37 : 12 (ECTA)
அப்பொழுது எரேமியா, மக்கள் முன்னிலையில் பாகப் பிரிவினை செய்து கொள்ள, எருசலேமை விட்டுப் பென்யமின் நாட்டுக்குப் புறப்பட்டார்.
எரேமியா 37 : 13 (ECTA)
அவர் பென்யமின் வாயிலை அடைந்தபொழுது அனனியாவின் பேரனும் செலேமியாவின் மகனுமான இரிய்யா என்னும் மெய்க்காப்பாளர் தலைவன் இறைவாக்கினர் எரேமியாவைத் தடுத்து, "நீ கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயல்கிறாய்" என்று கூறி, அவரைப் பிடித்தான்.
எரேமியா 37 : 14 (ECTA)
அதற்கு எரேமியா, "அது பொய். நான்; கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயலவில்லை" என்றார். அவர் சொன்னதை இரிய்யா கேட்கவில்லை. எனவே அவன் எரேமியாவைப் பிடித்து, தலைவர்களிடம் கொண்டு வந்து நிறுத்தினான்.
எரேமியா 37 : 15 (ECTA)
தலைவர்கள் சினம் கொண்டு எரேமியாவை அடித்து, செயலர் யோனத்தானுடைய வீட்டில் அடைத்துவைத்தார்கள்; ஏனெனில் அவ்வீடு ஒரு சிறைக்கூடமாய் மாற்றப்பட்டிருந்தது.
எரேமியா 37 : 16 (ECTA)
எரேமியா நிலவறைக் கூடத்திற்குள் சென்று அங்கே நெடுநாள் தங்கியிருந்தார்.
எரேமியா 37 : 17 (ECTA)
அப்பொழுது அரசன்; செதேக்கியா ஆளனுப்பி, எரேமியாவைத் தன்னிடம் அழைத்து வரச் செய்தான். தன் மாளிகையில் அவருடன் தனியாகப் பேசி, "ஆண்டவரிடமிருந்து வாக்கு ஏதேனும் உண்டா?" என்று வினவினான். அதற்கு எரேமியா, "ஆம், உண்டு. பாபிலோனிய மன்னனிடம் நீர் கையளிக்கப்படுவீர்" என்றார்.
எரேமியா 37 : 18 (ECTA)
தொடர்ந்து எரேமியா அரசன் செதேக்கியாவிடம் கூறியது; "உமக்கோ உம் பணியாளருக்கோ இம்மக்களுக்கோ நான் செய்த தீங்குதான் என்ன? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்?
எரேமியா 37 : 19 (ECTA)
"உங்கள்மீதோ இந்நாட்டின் மீதோ பாபிலோனிய மன்னன் படையெடுத்து வரமாட்டான் என்று அறிவித்த உங்கள் இறைவாக்கினர் இப்போது எங்கே?
எரேமியா 37 : 20 (ECTA)
என் தலைவரே! என் அரசரே! தயவு செய்து எனக்குச் செவிகொடும்; என் விண்ணப்பத்தைக் கனிவாய் ஏற்றருளும். செயலர் யோனத்தானின் வீட்டுக்கு என்னை மீண்டும் அனுப்பி வைக்காதீர். அனுப்பினால் நான் அங்கேயே மடிந்து போவேன். "
எரேமியா 37 : 21 (ECTA)
பின்னர் அரசன் செதேக்கியா கட்டளையிடவே, எரேமியா காவல் கூடத்திற்கு மாற்றப்பட்டார். நகரின் அப்பம் அனைத்தும் தீரும்வரை அப்பக்காரர் தெருவினின்று ஓர் அப்பம் அவருக்கு நாள்தோறும் கொடுக்கப்பட்டுவந்தது. இவ்வாறு எரேமியா காவல்கூடத்தில் தங்கியிருந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

BG:

Opacity:

Color:


Size:


Font: