எரேமியா 33 : 1 (ECTA)
{மற்றொரு வாக்குறுதி} [PS] காவல்கூடத்தில் எரேமியா இன்னும் அடைபட்டிருக்கையில், ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை அவருக்கு அருளப்பட்டது:
எரேமியா 33 : 2 (ECTA)
உலகைப் படைத்தவரும் அதை உருவாக்கி நிலைநாட்டியவருமான ஆண்டவர் — ‘ஆண்டவர்’ என்பது அவர் பெயராகும் — இவ்வாறு கூறுகிறார்:
எரேமியா 33 : 3 (ECTA)
என்னிடம் மன்றாடு; உனக்கு நான் செவிசாய்ப்பேன்; நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்.
எரேமியா 33 : 4 (ECTA)
முற்றுகைத் தளங்கள், வாள் முதலியவற்றால் தகர்க்கப்பட்டுக் கிடக்கும் இந்நகரின் வீடுகளைக் குறித்தும், யூதா அரசர்களின் அரண்மனைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே;
எரேமியா 33 : 5 (ECTA)
எதிர்த்துப் போரிடவும், சினம்கொண்டு, சீற்றமுற்று நான் வெட்டி வீழத்திய மனிதர்களின் பிணங்களால் வீடுகளை நிரப்பவும், இதோ கல்தேயர் வந்துகொண்டிருக்கின்றனர். ஏனெனில் இந்நகரின் தீச்செயல் அனைத்தையும் முன்னிட்டு அதனின்று நான் என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.
எரேமியா 33 : 6 (ECTA)
ஆயினும், நான் அந்நகரின் காயங்களை ஆற்றிக் குணப்படுத்துவேன்; அம்மக்களுக்கு நலன் அளித்து நிலையான நிறைவாழ்வை வழங்குவேன்.
எரேமியா 33 : 7 (ECTA)
யூதாவை அதன் அடிமைத்தனத்தினின்றும் இஸ்ரயேலை அதன் அடிமைத்தனத்தினின்றும் நான் அழைத்துவருவேன்; முன்பு இருந்தது போன்று அவற்றைக் கட்டி எழுப்புவேன்.[PE]
எரேமியா 33 : 8 (ECTA)
[PS] எனக்கு எதிராக அவர்கள் செய்துள்ள பாவங்களினின்று அவர்களை நான் தூய்மைப்படுத்துவேன்; அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்துள்ள குற்றங்கள், கிளர்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையும் நான் மன்னிப்பேன்.
எரேமியா 33 : 9 (ECTA)
நான் எருசலேமுக்குச் செய்துவரும் எல்லா நன்மைகளையும் பற்றிக் கேள்வியுறும் உலகின் மக்களினத்தார் அனைவரின் முன்னிலையில் அது எனக்கு மகிழ்ச்சி, புகழ்ச்சி, மாட்சி தரும் நகராய் விளங்கும். நான் அதற்கு வழங்கும் அனைத்து நலத்தையும் வளத்தையும் கண்டு அவர்கள் அஞ்சி நடுங்குவார்கள்.[PE]
எரேமியா 33 : 10 (ECTA)
[PS] ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘ஆளரவமற்ற பாழ்நிலம்’ என நீங்கள் அழைக்கும் இவ்விடத்தில் — மனிதனோ, குடிமகனோ, விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் —
எரேமியா 33 : 11 (ECTA)
மகிழ்ச்சியின் ஒலியும் அக்களிப்பின் ஆரவாரமும், மணமகன் மணமகள் குரலொலியும் மீண்டும் கேட்கும். ‘படைகளின் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றுமுள்ளது’ எனப் பாடியவாறு ஆண்டவர் இல்லத்திற்கு நன்றிப் பலிகளைக் கொண்டுசெல்வோரின் பேரொலியும் கேட்கும்; ஏனெனில், நாட்டை நான் அடிமைத்தனத்தினின்று விடுவித்து முன்னைய நன்னிலைக்கு உயர்த்துவேன், என்கிறார் ஆண்டவர்.[PE]
எரேமியா 33 : 12 (ECTA)
[PS] படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; மனிதனோ விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் இவ்விடத்திலும், இதை அடுத்த எல்லா நகர்களிலும் இடையர் தம் மந்தைகளை இளைப்பாற்றும் குடியிருப்புகள் மீண்டும் தோன்றும்.
எரேமியா 33 : 13 (ECTA)
மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும், பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும் ஆடுகளை எண்ணிச் சரிபார்ப்பவனின் கண்காணிப்பில் அவை மீண்டும் கடந்து செல்லும், என்கிறார் ஆண்டவர்.[PE]
எரேமியா 33 : 14 (ECTA)
[PS] இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
எரேமியா 33 : 15 (ECTA)
அந்நாள்களில் — அக்காலத்தில் — நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். [* எரே 23:5-6 ]
எரேமியா 33 : 16 (ECTA)
அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். “யாவே சித்கேனூ”* என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும். [* எரே 23:5-6 ] [PE]
எரேமியா 33 : 17 (ECTA)
[PS] ஏனெனில், ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டின் அரியணையில் வீற்றிருக்கத்தக்க ஒருவர் தாவீதுக்கு இராமல் போகார். [* எரே 23:5-6 ]
எரேமியா 33 : 18 (ECTA)
என் திருமுன் எரிபலிகள் செலுத்தவும், தானியப் படையல்கள் ஒப்புக்கொடுக்கவும், என்றென்றும் பலிகள் நிறைவேற்றவும் தக்க ஒருவர் லேவி குலத்துக் குருக்களிடையே இராமல் போகார். [* 2 சாமு 7:12-16; 1 அர 2:4; 1 குறி 17:11-14 ] [PE]
எரேமியா 33 : 19 (ECTA)
[PS] ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: [* எண் 3:5-10 ]
எரேமியா 33 : 20 (ECTA)
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பகலும் இரவும் முறைப்படி வராதவாறு அவற்றோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை உங்களால் உடைத்தெறியப்படுமாயின்,
எரேமியா 33 : 21 (ECTA)
என் ஊழியன் தாவீதோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் உடைத்தெறியப்படும், தாவீதின் அரியணையேறி ஆட்சிசெய்யும் மைந்தன் அவனுக்கு இருக்கமாட்டான்; என் பணியாளர்களான லேவி குலத்துக் குருக்களுக்கும் இவ்வாறே நிகழும்.[PE]
எரேமியா 33 : 22 (ECTA)
[PS] எண்ணமுடியாத விண்மீன்களையும் அளக்க முடியாத கடல் மணலையும் போல, என் ஊழியன் தாவீதின் வழி மரபினரையும் என் பணியாளரான லேவியரையும் நான் பெருகச் செய்வேன்.[PE]
எரேமியா 33 : 23 (ECTA)
[PS] ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:
எரேமியா 33 : 24 (ECTA)
ஆண்டவர் தேர்ந்துகொண்ட இரண்டு குடும்பங்களையும் அவர் தள்ளிவிட்டார் என்று இம்மக்கள் பேசிக்கொள்வதை நீ கவனித்ததில்லையா? என் மக்கள் ஓர் இனமாகத் திகழாத அளவுக்கு, என் மக்களை அவர்கள் இழிவாக நடத்துகிறார்கள்; அவர்களை ஓர் இனமாகக் கூடக் கருதுவதில்லை.
எரேமியா 33 : 25 (ECTA)
ஆண்டவர் கூறுவது இதுவே; நான் பகலோடும் இரவோடும் உடன்படிக்கை செய்திராவிடில், விண்ணுக்கும் மண்ணுக்கும் உரிய ஒழுங்கு முறைகளை நிறுவியிராவிடில்,
எரேமியா 33 : 26 (ECTA)
யாக்கோபின் வழிமரபினரையும், என் ஊழியன் தாவீதின் வழிமரபினரையும் உண்மையாகவே தள்ளிவிடுவேன். ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு ஆகியோரின் வழிமரபினரை ஆள்வதற்குத் தாவீதின் வழிமரபினரிலிருந்து யாரையும் தேர்ந்துகொள்ளமாட்டேன். ஆனால் இப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்பேன்; அவர்கள்மீது இரக்கம் காட்டுவேன்.[PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26

BG:

Opacity:

Color:


Size:


Font: