எரேமியா 30 : 1 (ECTA)
ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது;
எரேமியா 30 : 2 (ECTA)
"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை.
எரேமியா 30 : 3 (ECTA)
ஏனெனில் நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது என்னுடைய மக்களான இஸ்ரயேலையும் யூதாவையும் அவர்களது அடிமைத்தனத்தினின்று அழைத்து வருவேன்; அவர்களுடைய மூதாதையர்க்கு நான் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வேன். அவர்களும் அதை உடைமையாக்கிக்கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர். "
எரேமியா 30 : 4 (ECTA)
இஸ்ரயேலையும் யூதாவையும் குறித்து ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே;
எரேமியா 30 : 5 (ECTA)
ஆண்டவர் கூறுகின்றார்; திடுக்கிடச் செய்யும் ஒலியை நான் கேட்கின்றேன்; அது அச்சத்தின் ஒலி; சமாதானத்தின் ஒலி அன்று.
எரேமியா 30 : 6 (ECTA)
'ஆண்மகன் எவனாவது பிள்ளை பெற்றதுண்டா?' என்று கேட்டுப் பாருங்கள். அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும் பேறுகாலப் பெண்ணைப்போலத் தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டிருப்பதை நான் ஏன் காண்கிறேன்? எல்லா முகங்களும் மாறிவிட்டன; அவை வெளிறிப்போய்விட்டன!
எரேமியா 30 : 7 (ECTA)
அந்தோ! அந்த நாள் பெரிய நாள்; மற்றெந்த நாளும் அதைப் போன்றில்லை. யாக்கோபுக்கு அது வேதனையின் காலம்; ஆனால் அதனின்று அவன் விடுவிக்கப்பெறுவான்.
எரேமியா 30 : 8 (ECTA)
படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்நாளில் உன்னுடைய கழுத்திலிருக்கும் அவனது நுகத்தை முறித்துப்போடுவேன்; அவனுடைய விலங்குகளை உடைத்தெறிவேன்.
எரேமியா 30 : 9 (ECTA)
அயல்நாட்டவர் அவனை மீண்டும் அடிமைப்படுத்தமாட்டார். ஆனால் அவர்களின் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவர்களுக்காக நான் எழச்செய்யவிருக்கும் மன்னன் தாவீதுக்கும் அவர்கள் ஊழியம் புரிவார்கள்!
எரேமியா 30 : 10 (ECTA)
என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே! இஸ்ரயேலே, கலங்காதே, என்கிறார் ஆண்டவர். தொலைநாட்டினின்று உன்னை நான் மீட்பேன்; அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன். யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்; அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.
எரேமியா 30 : 11 (ECTA)
நான் உன்னோடு இருக்கின்றேன்; உன்னை மீட்பதற்காக உள்ளேன், என்கிறார் ஆண்டவர். எந்த மக்களினத்தார் இடையே நான் உன்னைச் சிதறடித்தேனோ அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்; உன்னையோ முற்றிலும் அழிக்கமாட்டேன்; உன்னை நீதியான முறையில் தண்டிப்பேன்; உன்னைத் தண்டிக்காமல் விட்டுவிடமாட்டேன்; உன்னை எவ்வகையிலேனும் தண்டியாதுவிடேன்.
எரேமியா 30 : 12 (ECTA)
ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது; உனது புண் புரையோடிப்போனது.
எரேமியா 30 : 13 (ECTA)
உனக்காக வாதிட எவனும் இல்லை; உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை; உன்னைக் குணப்படுத்தவே முடியாது.
எரேமியா 30 : 14 (ECTA)
உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்; உன்னை அவர்கள் தேடுவதே இல்லை; மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்; கொடியோன் தண்டிப்பதுபோல நான் உன்னைத் தண்டித்தேன்; ஏனெனில் உனது குற்றம் பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை.
எரேமியா 30 : 15 (ECTA)
நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்? உனது வேதனையைத் தணிக்கமுடியாது; ஏனெனில் உனது குற்றமோ பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன்.
எரேமியா 30 : 16 (ECTA)
ஆயினும், உன்னை விழுங்குவோர் எல்லாரும் விழுங்கப்படுவர்; உன் பகைவர் எல்லாரும் ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்; உன்னைக் கொள்ளையடிப்போர் அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்; உன்னைச் சூறையாடுவோர் அனைவரும், நான் கையளிக்க, சூறையாடப்படுவர்.
எரேமியா 30 : 17 (ECTA)
நான் உனக்கு நலம் அளிப்பேன்; உன்னுடைய காயங்களை ஆற்றுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், "தள்ளப்பட்டவள்" என்று உன்னை அழைத்தார்கள்; "இந்தச் சீயோனைப் பற்றிக் கவலைப்படுவார் யாருமிலர் ", என்றார்கள்.
எரேமியா 30 : 18 (ECTA)
ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; அடிமைத்தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களை திரும்பக் கொணர்வேன்; அவனுடைய உறைவிடங்கள்மீது நான் இரக்கம் காட்டுவேன்; அவற்றின் இடிபாடுகள்மேலேயே நகர் மீண்டும் எழுப்பப்படும்; அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும்.
எரேமியா 30 : 19 (ECTA)
அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்; மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும். அவர்களை நான் பல்கிப் பெருகச் செய்வேன்; அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள். நான் அவர்களைப் பெருமைப்படுத்துவேன்; இனி அவர்கள் சிறுமையுற மாட்டார்கள்.
எரேமியா 30 : 20 (ECTA)
அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்; அவர்களது கூட்டமைப்பு என் திருமுன் நிலை நாட்டப்படும்; அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும் தண்டிப்பேன்.
எரேமியா 30 : 21 (ECTA)
அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்; அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்; அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்; அவனும் என்னை அணுகிவருவான்; ஏனெனில், என்னை அணுகிவர வேறு யாருக்குத் துணிவு உண்டு?, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 30 : 22 (ECTA)
நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
எரேமியா 30 : 23 (ECTA)
இதோ ஆண்டவரின் புயல்! அவரது சினம் சூறாவளிபோல் சுழன்றெழும். அது தீயோரின் தலையைத் தாக்கிச் சுழன்றடிக்கும்.
எரேமியா 30 : 24 (ECTA)
ஆண்டவர் மனத்தில் கொண்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி நிறைவேற்றாமல் அவரது வெஞ்சினம் திரும்பிவராது; வரவிருக்கும் நாள்களில் அதை நீங்கள் உணர்வீர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

BG:

Opacity:

Color:


Size:


Font: