எரேமியா 18 : 1 (ECTA)
குயவர் வீட்டில் எரேமியா எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:
எரேமியா 18 : 2 (ECTA)
“நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்.”
எரேமியா 18 : 3 (ECTA)
எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல்வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.
எரேமியா 18 : 4 (ECTA)
குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாத போதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார்.
எரேமியா 18 : 5 (ECTA)
அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு:
எரேமியா 18 : 6 (ECTA)
“இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வதுபோல் நானும் உனக்குச் செய்யமுடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.
எரேமியா 18 : 7 (ECTA)
ஒரு நாட்டையோ அரசையோ பிடுங்கித் தகர்த்து அழிக்கப்போவதாக நான் எப்போதாவது கூறலாம்.
எரேமியா 18 : 8 (ECTA)
எனினும், குறிப்பிட்ட அந்த நாடு தன் தீய வழியிலிருந்து திரும்புமாயின், நான் அதற்கு வருவிக்கவிருந்த தீங்கை எண்ணி வருந்துவேன். [* திபா 1: 3 ]
எரேமியா 18 : 9 (ECTA)
அதுபோல ஒரு நாட்டையோ அரசையோ கட்டியெழுப்பவும் நட்டு வளர்க்கவும் போவதாக நான் எப்போதாவது கூறலாம்.
எரேமியா 18 : 10 (ECTA)
மாறாக, அது என் சொல்லுக்குச் செவிகொடுக்காமல், என் கண்முன் தீமை செய்தால், நான் அதற்குச் செய்யப்போதாகக் கூறியிருந்த நன்மையை எண்ணி வருந்துவேன். [* திபா 62:12; திவெ 2: 23 ]
எரேமியா 18 : 11 (ECTA)
ஆகையால் இப்போது நீ யூதா நாட்டினரையும் எருசலேம் வாழ் மக்களையும் நோக்கிக் கூற வேண்டியது: “ஆண்டவர் கூறுவது இதுவே; உங்களுக்கு எதிராய் வரப்போகும் தீமைக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு எதிராய் ஒரு திட்டம் தீட்டுகிறேன்; ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீய வழியிலிருந்து திரும்புங்கள்; உங்கள் வழிகளையும் செயல்களையும் திருத்திக்கொள்ளுங்கள்.”
எரேமியா 18 : 12 (ECTA)
அவர்களோ, ‘இதெல்லாம் சொல்லிப் பயனில்லை. எங்கள் திட்டப்படியே நாங்கள் நடப்போம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தீய இதயத்தின் பிடிவாதப்படியே செயல்படுவோம்’ என்பார்கள்.
எரேமியா 18 : 13 (ECTA)
இஸ்ரயேல் ஆண்டவரை மறத்தல் எனவே ஆண்டவர் கூறுவது இதுவே:“இதுபோன்ற செயலைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? என்று நாடுகளிடையே கேட்டுப்பார். கன்னி இஸ்ரயேல் பெரும் கோரச் செயல் ஒன்று செய்துள்ளாள்.
எரேமியா 18 : 14 (ECTA)
லெபனோன் மலையின் உறைபனி அதன் பாறை உச்சிகளிலிருந்து அகல்வதுண்டோ? அதலிருந்து வழிந்தோடும் தண்ணீரால் நீரோடைகள் வற்றிப்போவதுண்டோ?
எரேமியா 18 : 15 (ECTA)
என் மக்களோ என்னை மறந்து விட்டார்கள்; இல்லாத ஒன்றிற்குத் தூபம் காட்டுகின்றார்கள்; தங்கள் வழிகளிலே தொன்மையான பாதைகளிலே தடுமாறுகின்றார்கள்; நெடுஞ்சாலையை விட்டுவிட்டு ஒதுக்கு வழிகளிலே நடக்கின்றார்கள்.
எரேமியா 18 : 16 (ECTA)
அவர்கள் நாடு கொடூரமாய்க் காட்சியளிக்கும்; காலமெல்லாம் ஏளனத்துக்கு உள்ளாகும்; அவ்வழியே செல்லும் ஒவ்வொருவனும் திகிலடைவான்; தலையை ஆட்டிக்கொண்டே செல்வான்.
எரேமியா 18 : 17 (ECTA)
கீழைக் காற்றைப்போல் அவர்கள் எதிரிகளுக்குமுன் அவர்களைச் சிதறடிப்பேன்; அவர்களின் துன்பக் காலத்தில் என் முகத்தையல்ல, முதுகையே அவர்களுக்குக் காண்பிப்பேன்.”
எரேமியா 18 : 18 (ECTA)
எரேமியாவுக்கு எதிரான சூழ்ச்சி அப்போது அவர்கள் “வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே, அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம்” என்றனர்.
எரேமியா 18 : 19 (ECTA)
ஆண்டவரே, என்னைக் கவனியும்; என் எதிரிகள் சொல்வதைக் கேளும்.
எரேமியா 18 : 20 (ECTA)
நன்மைக்குக் கைம்மாறு தீமையா? என் உயிரைப் போக்கக் குழிபறித்திருக்கின்றார்கள்; அவர்கள்மேல் உமக்கிருந்த சினத்தைப் போக்குவதற்காக அவர்களைக் குறித்து நல்லதை எடுத்துச் சொல்வதற்கு நான் உம்முன் வந்து நின்றதை நினைவுகூரும்.
எரேமியா 18 : 21 (ECTA)
ஆகவே அவர்களுடைய பிள்ளைகள் பஞ்சத்தால் மடியட்டும்; அவர்கள் வாளுக்கு இரையாகட்டும்; அவர்தம் மனைவியர் விதவையராய்த் தனியராகட்டும்; கணவர்கள் கொல்லப்படட்டும்; இளைஞர்கள் போரில் வாளால் மடியட்டும். [* நெகே 13:15- 22 ]
எரேமியா 18 : 22 (ECTA)
திடீரெனக் கொள்ளைக் கூட்டத்தினர் அவர்களிடையே வரட்டும். அவர்கள் வீடுகளிலிருந்து அழுகுரல் கேட்கட்டும்; ஏனெனில், அவர்கள் என்னைப் பிடிக்கக் குழி பறித்தார்கள்; என் கால்களுக்குக் கண்ணி வைத்தார்கள். * விப 20:8-10; இச 5:12-14..
எரேமியா 18 : 23 (ECTA)
ஆண்டவரே! என்னைக் கொல்வதற்காக அவர்கள் செய்த சதித் திட்டங்களை எல்லாம் நீர் அறிவீர்; அவர்கள் குற்றத்தை மன்னியாதேயும்; அவர்கள் பாவத்தை உம் முன்னிலையிலிருந்து அகற்றிவிடாதேயும்; அவர்கள் உம்முன் வீழ்ச்சியுறட்டும்; உம் சினத்தின் நாளில் அவர்களின் செயல்களுக்கு ஏற்றபடி அவர்களை நடத்தும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23