எரேமியா 16 : 1 (ECTA)
எரேமியாவின் வாழ்வு ஓர் அடையாளம் ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு. * எரே 7:34; 25:10; திவெ 18:23..
எரேமியா 16 : 2 (ECTA)
“நீ திருமணம் செய்யாதே; இந்த இடத்தில் உனக்குப் புதல்வரோ புதல்வியரோ இருக்கவேண்டாம். * எரே 7:34; 25:10; திவெ 18:23..
எரேமியா 16 : 3 (ECTA)
இந்த இடத்தில் பிறந்துள்ள புதல்வர், புதல்வியரைப் பற்றியும் அவர்களைப் பெற்றெடுத்த தாய், தந்தையரைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே; * எரே 7:34; 25:10; திவெ 18:23..
எரேமியா 16 : 4 (ECTA)
அவர்கள் கொடும் நோய்களால் மடிவார்கள். அவர்களுக்காக யாரும் அழமாட்டார்கள்; அவர்களை அடக்கம் செய்யவும் மாட்டார்கள். அவர்கள் சாணம்போல் தரையில் கிடப்பார்கள். வாளாலும் பஞ்சத்தாலும் அழிந்து போவார்கள். அவர்களின் பிணங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும். * எரே 7:34; 25:10; திவெ 18:23..
எரேமியா 16 : 5 (ECTA)
ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ இழவு வீட்டுக்குப் போக வேண்டாம்; அவர்களுக்காக அழுவதற்கோ துக்கம் கொண்டாடுவதற்கோ நீ செல்ல வேண்டாம்; ஏனெனில் நான் என் அமைதியையும் பேரன்பையும் இரக்கத்தையும் இந்த மக்களிடமிருந்து எடுத்துவிட்டேன். * எரே 7:34; 25:10; திவெ 18:23..
எரேமியா 16 : 6 (ECTA)
இந்நாட்டிலுள்ள பெரியோரும் சிறியோரும் இறந்து போவர். அவர்களை யாரும் அடக்கம் செய்யமாட்டார்கள்; அவர்களுக்காக அழவும் மாட்டார்கள். அவர்களை முன்னிட்டு யாரும் தங்களைக் காயப்படுத்திக்கொள்ளவோ மொட்டையடித்துக் கொள்ளவோ மாட்டார்கள். * எரே 7:34; 25:10; திவெ 18:23..
எரேமியா 16 : 7 (ECTA)
இறந்தோரை எண்ணித் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு ஆறுதல் அளிக்க, அப்பம் தருவார் யாருமிரார். தாய் அல்லது தந்தைக்காகத் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு ஆறுதலின் கிண்ணத்தில் பருகக் கொடுக்கவும் யாருமிரார். * எரே 7:34; 25:10; திவெ 18:23..
எரேமியா 16 : 8 (ECTA)
விருந்து நடக்கும் வீடுகளுக்குச் செல்லாதே; உண்டு குடிப்பதற்காக அங்கு அமராதே,” * எரே 7:34; 25:10; திவெ 18:23..
எரேமியா 16 : 9 (ECTA)
ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இந்த இடத்தில் மகிழ்ச்சி ஒலியும், உவகைக் குரலும், திருமண ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். இவை உங்கள் வாழ்நாளில் உங்கள் கண்முன்னே நிகழும். * எரே 7:34; 25:10; திவெ 18:23..
எரேமியா 16 : 10 (ECTA)
நீ இம்மக்களுக்கு இச்சொற்களை எல்லாம் அறிவிக்கும்போது அவர்கள் உன்னை நோக்கி, “எங்களுக்கு எதிராக இப்பெருந்தீங்கு அனைத்தையும் ஆண்டவர் அறிவிக்கக் காரணம் என்ன? எங்கள் குற்றம் என்ன? எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நாங்கள் செய்த பாவம் என்ன?” என்று கேட்பார்கள்.
எரேமியா 16 : 11 (ECTA)
நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது; ஆண்டவர் கூறுவது; உங்கள் மூதாதையர் என்னைப் புறக்கணித்தனர். வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினர். அவற்றுக்கு ஊழியம் செய்து அவற்றையே வழிபட்டனர். என்னையோ புறக்கணித்தனர். என் சட்டத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.
எரேமியா 16 : 12 (ECTA)
நீங்களோ உங்கள் மூதாதையரைவிடப் பெருந்தீமைகள் செய்தீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் தீய இதயத்தின் பிடிவாதத்தின்படி நடக்கின்றீர்கள்; என் சொல்லுக்கோ செவிகொடுப்பதில்லை.
எரேமியா 16 : 13 (ECTA)
ஆகையால் இந்த நாட்டிலிருந்து, உங்களுக்கோ உங்கள் மூதாதையருக்கோ முன்பின் தெரியாத ஒரு நாட்டுக்கு, உங்களைத் தூக்கி எறிவேன். அங்கு நீங்கள் அல்லும் பகலும் வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்வீர்கள்; அங்கு என் ஆதரவு உங்களுக்கு இராது.
எரேமியா 16 : 14 (ECTA)
அடிமைத்தனத்தினின்று திரும்புதல் ஆதலால் ஆண்டவர் கூறுவது; இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது ‘எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை’ என்று யாரும் சொல்லமாட்டார்கள்.
எரேமியா 16 : 15 (ECTA)
மாறாக, ‘வடக்கு நாட்டிலிருந்தும், அவர்கள் விரட்டப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை’ என்று கூறுவார்கள். ஏனெனில் நான் அவர்களின் மூதாதையருக்குக் கொடுத்திருந்த நாட்டிற்கே அவர்களை மீண்டும் அழைத்து வருவேன்.
எரேமியா 16 : 16 (ECTA)
வரவிருக்கும் தண்டனை ஆண்டவர் கூறுவது: இதோ, மீனவர் பலரை அனுப்புகிறேன். அவர்கள் அவர்களைப் பிடிப்பர். அதன்பின் வேடர் பலரையும் அனுப்புவேன். அவர்கள் அனைத்து மலைகளிலும் குன்றுகளிலும் பாறையிடுக்குகளிலும் உள்ளோரை வேட்டையாடுவர்.
எரேமியா 16 : 17 (ECTA)
அவர்கள் வழிகளெல்லாம் என் கண்முன்னே உள்ளன. அவை எனக்கு மறைவாய் இருப்பதில்லை. அவர்களின் குற்றங்கள் என் பார்வைக்குத் தப்புவதில்லை.
எரேமியா 16 : 18 (ECTA)
முதற்கண், அவர்களின் குற்றத்திற்காகவும், பாவத்திற்காகவும் அவர்களுக்கு இரட்டிப்பான தண்டனை கொடுப்பேன். ஏனெனில், பிணம் ஒத்த சிலைகளால் அவர்கள் என் நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள்; அருவருப்பானவற்றால் என் உரிமைச் சொத்தை நிரப்பினார்கள்.
எரேமியா 16 : 19 (ECTA)
எரேமியாவின் நம்பிக்கை ஆண்டவரே! என் வலிமையே! என் அரணே! துன்பக் காலத்தில் என் புகலிடமே! உலகின் எல்லைகளிலிருந்து வேற்றினத்தார் உம்மிடம் வந்து, “எங்கள் மூதாதையர் பொய்ம்மையை மரபுரிமையாகப் பெற்றனர்; எதற்கும் பயனற்ற சிலைகளையே பெற்றனர்;
எரேமியா 16 : 20 (ECTA)
மனிதர் தமக்குத் தாமே தெய்வங்களைச் செய்ய முடியுமா? அவை தெய்வங்கள் அல்லவே!” என்று கூறுவார்கள்.
எரேமியா 16 : 21 (ECTA)
“எனவே, இதோ அவர்கள் அறியும்படி செய்வேன்; என் ஆற்றலையும் என் வலிமையையும் அறியும்படி செய்வேன். என் பெயர் ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21