எரேமியா 15 : 1 (ECTA)
யூதாவின் அழிவு ஆண்டவர் என்னிடம் கூறியது: மோசேயும் சாமுவேலும் என்முன் வந்து நின்றாலும் என் உள்ளம் இந்த மக்கள்பால் திரும்பாது. என் முன்னிலையிலிருந்து அவர்களை விரட்டிவிடு. அவர்கள் அகன்று போகட்டும். [* விப 32:11-14; எண் 14:13-19; 1 சாமு 7:5- 9 ]
எரேமியா 15 : 2 (ECTA)
‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று அவர்கள் கேட்கக்கூடும். அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: “ஆண்டவர் கூறுவது இதுவே: சாவுக்குரியோர் சாவர் வாளுக்குரியோர் வாளால் மாள்வர்; பஞ்சத்துக்குரியோர் பஞ்சத்தால் மடிவர்; நாடு கடத்தலுக்குரியோர் நாடு கடத்தப்படுவர்.” [* திவெ 13: 10 ]
எரேமியா 15 : 3 (ECTA)
ஆண்டவர் கூறுவது: நான்கு வகையான அழிவின் சக்திகளை அவர்களுக்கு எதிராக அனுப்பப் போகிறேன்; கொல்வதற்கு வாளையும் இழுத்துச் செல்வதற்கு நாய்களையும் விழுங்கி அழிப்பதற்கு வானத்துப் பறவைகளையும் நிலத்து விலங்குகளையும் அனுப்பப் போகிறேன்.
எரேமியா 15 : 4 (ECTA)
அவர்களைக் கண்டு உலகின் அரசுகள் யாவும் திகில் அடையும். எசேக்கியா மகனும் யூதா அரசனுமான மனாசே எருசலேமில் செய்தவையே அதற்குக் காரணம். [* 2 அர 21:1-16; 2 குறி 33:1-9.. ]
எரேமியா 15 : 5 (ECTA)
எருசலேமே! யாராவது உனக்கு இரக்கம் காட்டுவார்களா? உன் நிலைபற்றி வருந்துவார்களா? திரும்பிப் பார்த்து நலம் விசாரிப்பார்களா?
எரேமியா 15 : 6 (ECTA)
ஆண்டவர் கூறுவது: “நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்; என்னைக் கைவிட்டு ஓடிவிட்டாய்; எனவே, உன்னை அழிப்பதற்கு என் கையை உனக்கு எதிராய் நீட்டினேன்; இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்.
எரேமியா 15 : 7 (ECTA)
நாட்டின் வாயில்களில் நான் அவர்களை முறத்தால் தூற்றிச் சிதறடித்தேன்; அவர்களைத் தனியாகத் தவிக்க விட்டேன்; என் மக்களை அழித்துவிட்டேன்; ஏனெனில் அவர்கள் தங்கள் தீயவழியிலிருந்து திரும்பவில்லை.
எரேமியா 15 : 8 (ECTA)
கடற்கரை மணலைவிட அவர்களின் கைம்பெண்களின் எண்ணிக்கையை மிகுதியாக்கினேன்; இளைஞர்களின் அன்னையருக்கு எதிராகக் கொலைஞனைப் பட்டப்பகலில் கூட்டி வந்தேன்; திடீரென அவள் துயரும் திகிலும் அடையச் செய்தேன்;
எரேமியா 15 : 9 (ECTA)
எழுவரைப் பெற்றவள் சோர்வுற்றாள்; மூச்சுத் திணறினாள்; அவள் வாழ்வில் கதிரவன் மறைந்து விட்டான்; அவள் வெட்கி நாணமுற்றாள்; எஞ்சியிருப்போரை அவர்களுடைய எதிரிகளின்முன் வாளுக்கு இரையாக்குவேன்,” என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 15 : 10 (ECTA)
எரேமியாவின் அழைப்பு புதுப்பிக்கப்படுதல் நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு; நான் கடன் கொடுக்கவும் இல்லை; கடன் வாங்கியதுமில்லை. எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.
எரேமியா 15 : 11 (ECTA)
ஆண்டவரே, நான் உமக்கு நன்கு பணி செய்யாதிருந்தால், எதிரிகள் இடையூறும் துன்பமும் அடைந்த நேரத்தில் நான் அவர்களுக்காக உம்மிடம் மன்றாடாதிருந்தால், அவர்களின் சாபத்திற்கு நான் ஆளாகட்டும்.
எரேமியா 15 : 12 (ECTA)
வடக்கிலிருந்து வந்த இரும்பையும் வெண்கலத்தையும் யாரால் உடைக்க முடியும்?
எரேமியா 15 : 13 (ECTA)
“நாடெங்கும் செய்யப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் இலவசக் கொள்ளைப் பொருள் ஆக்குவேன்.
எரேமியா 15 : 14 (ECTA)
முன்பின் தெரியாத ஒரு நாட்டில் எதிரிகளுக்கு உங்களை அடிபணியச் செய்வேன்; ஏனெனில், என்னில் கோபக் கனல் மூண்டுள்ளது. அது உங்களுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியும்.”
எரேமியா 15 : 15 (ECTA)
ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும்; நீர் என்னை அறிவீர்; என்னை நினைவுகூரும்; எனக்கு உதவியருளும்; என்னைத் துன்புறுத்துவோரை என் பொருட்டுப் பழிவாங்கும்; நீர் பொறுமையுள்ளவர்; என்னைத் தள்ளிவிடாதேயும்; உம்பொருட்டு நான் வசைமொழிகளுக்கு ஆளாகிறேன் என்பதை நினைவில் கொள்ளும்.
எரேமியா 15 : 16 (ECTA)
நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்; அவற்றை உட்கொண்டேன்; உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன; என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. ஏனெனில், படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.
எரேமியா 15 : 17 (ECTA)
களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை. உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன். சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர்.
எரேமியா 15 : 18 (ECTA)
எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!
எரேமியா 15 : 19 (ECTA)
எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். என்முன் வந்து நிற்பாய்; பயனில நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய். அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்; நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.
எரேமியா 15 : 20 (ECTA)
நான் உன்னை அவர்கள்முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்; அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்; ஆனால், உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்; ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 15 : 21 (ECTA)
தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன்; முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன்.”

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21