எரேமியா 13 : 1 (ECTA)
நார்ப்பட்டுக் கச்சையின் அடையாளம் ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “நீ உனக்காக நார்ப்பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக் கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.”
எரேமியா 13 : 2 (ECTA)
ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன்.
எரேமியா 13 : 3 (ECTA)
எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது:
எரேமியா 13 : 4 (ECTA)
“நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக் கொள்; எழுந்து பேராத்து* ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்துவை.” * ‘யூப்பிரத்தீசு’ என்பது மறுபெயர்.
எரேமியா 13 : 5 (ECTA)
ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்துவைத்தேன்.
எரேமியா 13 : 6 (ECTA)
பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: “எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.”
எரேமியா 13 : 7 (ECTA)
அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்துவைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.
எரேமியா 13 : 8 (ECTA)
அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எரேமியா 13 : 9 (ECTA)
“ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன்.
எரேமியா 13 : 10 (ECTA)
என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.
எரேமியா 13 : 11 (ECTA)
கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல, இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை,” என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 13 : 12 (ECTA)
திராட்சை இரசச் சாடியின் அடையாளம் நீ அவர்களுக்கு இந்த வாக்கைச் சொல்: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும்,” அவர்களோ ‘சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாதா?’ என்று உன்னிடம் கூறுவார்கள்.
எரேமியா 13 : 13 (ECTA)
அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது; “ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேம் வாழ் மக்கள் ஆகிய இந்நாட்டுக் குடிமக்கள் யாவரையும் போதையில் ஆழ்த்துவேன்.
எரேமியா 13 : 14 (ECTA)
அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்வேன். தந்தையரும் புதல்வரும் தங்களுக்குள் மோதிக்கொள்வர். அவர்களின் அழிவை முன்னிட்டு நான் அவர்களுக்கு இரக்கம் காட்டவோ அவர்களைக் காப்பாற்றவோ அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டேன், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 13 : 15 (ECTA)
அச்சுறுத்தலும் எச்சரிக்கையும் செவிகொடுத்துக் கேளுங்கள்! செருக்குறாதீர்கள்; ஏனெனில், ஆண்டவர் பேசிவிட்டார்.
எரேமியா 13 : 16 (ECTA)
உங்கள் கடவுளாகிய ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இருள்படரச் செய்யுமுன்பும், உங்கள் பாதங்கள் இருளடைந்த மலைகளில் இடறுமுன்பும் அவரை மாட்சிமைப் படுத்துங்கள். நீங்கள் ஒளியை எதிர்பார்த்து நிற்கும் போதே இருளின் நிழல்கள் சூழச்செய்வார்; இருண்ட மேகங்கள் எழச்செய்வார்.
எரேமியா 13 : 17 (ECTA)
ஆனால் நீங்கள் இதற்குச் செவி கொடுக்காவிட்டால், உங்கள் செருக்கை முன்னிட்டு என் உள்ளம் மறைவில் அழும்; அழுகை மிகுதியால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும்; எனெனில், ஆண்டவரின் மந்தை கைப்பற்றப்பட்டுள்ளது.
எரேமியா 13 : 18 (ECTA)
அரசனுக்கும் அரசனின் அன்னைக்கும் சொல்லுங்கள்; கீழே அமருங்கள். ஏனெனில் உங்கள் மேன்மையின் மணிமுடி உங்கள் தலைகளிலிருந்து வீழ்ந்துவிட்டது.
எரேமியா 13 : 19 (ECTA)
நெகேபைச் சார்ந்த நகர்கள் எல்லாம் அடைபட்டுவிட்டன; அவற்றைத் திறப்பார் யாருமில்லை; யூதா முழுவதும் நாடுகடத்தப்பட்டுள்ளது. அது முற்றிலுமாய் நாடு கடத்தப்பட்டுள்ளது.
எரேமியா 13 : 20 (ECTA)
ஐயகோ எருசலேமே! உன் கண்களை உயர்த்தி வடக்கிலிருந்து வருபவர்களைப் பார்; உனக்குத் தரப்பட்ட மந்தை — உன் பெருமைக்குரிய மந்தை — எங்கே?
எரேமியா 13 : 21 (ECTA)
உன் நண்பர்களாக நீ வளர்த்து விட்டவர்களே உன் தலைவர்களாக ஏற்படுத்தப்படும்போது நீ என்ன சொல்வாய்? பேறுகாலப் பெண்ணின் வேதனை உன்னைப் பற்றிக் கொள்ளாமல் போகுமா?
எரேமியா 13 : 22 (ECTA)
இவையெல்லாம் எனக்கு ஏன் நிகழ வேண்டும் என நீ உன் உள்ளத்தில் சிந்திக்கலாம்; உன் குற்றம் பெரிது! அதனால்தான் உன் ஆடை அகற்றப்பட்டுள்ளது! உன் கால்கள் புண்படுத்தப்பட்டன.
எரேமியா 13 : 23 (ECTA)
எத்தியோப்பியர் தம் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியுமா? சிறுத்தைகள் தம் புள்ளிகளை அகற்றிக்கொள்ள முடியுமா? அப்படி முடியுமானால், தீமையே செய்து பழகிவிட்ட நீங்களும் நன்மை செய்ய முடியும்.
எரேமியா 13 : 24 (ECTA)
பாலைநிலக் காற்றில் பறந்து போகும் பதர்போல் நான் உங்களைச்* சிதறடிப்பேன். [* ‘அவர்களை’ என்பது எபிரேய பாடம்.. ]
எரேமியா 13 : 25 (ECTA)
இதுவே உன் கதி! நான் அளந்து கொடுக்கும் உன் பங்கு! ஏனெனில், நீ என்னை மறந்து பொய்யை நம்பினாய், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 13 : 26 (ECTA)
உன் ஆடைகளை உன் முகத்துக்கு மேல் தூக்கிக் கழற்றிவிடுவேன்; உன் அவமானம் காணப்படும்.
எரேமியா 13 : 27 (ECTA)
உன் அருவருக்கத்தக்க செயல்களாகிய விபசாரங்களையும் காமக் கனைப்புகளையும் பரந்த வெளியில் குன்றுகளின்மேல் நீ செய்த கீழ்த்தரமான வேசித்தனத்தையும் நான் கண்டேன்; ஐயகோ! எருசலேமே! நீ தூய்மை பெறுவது எந்நாளோ?
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27