ஏசாயா 51 : 1 (ECTA)
எருசலேமுக்கு ஆண்டவரின் ஆறுதல் மொழி விடுதலையை நாடுவோரே, ஆண்டவரைத் தேடுவோரே, எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் எந்தப் பாறையினின்று செதுக்கப்பட்டீர்களோ, எந்தக் குழியினின்று தோண்டப் பட்டீர்களோ, அதை நோக்குங்கள்.
ஏசாயா 51 : 2 (ECTA)
உங்கள் தந்தை ஆபிரகாமையும் உங்களைப் பெற்றெடுத்த சாராவையும் நினைத்துப் பாருங்கள்; தனியனாய் இருந்த அவனை அழைத்தேன்; அவனுக்கு ஆசி வழங்கிப் பெரும் திரளாக்கினேன்.
ஏசாயா 51 : 3 (ECTA)
ஆண்டவர் சீயோனைத் தேற்றுவார்; பாழடைந்த அதன் பகுதிகள் அனைத்திற்கும் ஆறுதல் அளிப்பார்; அதன் பாலைநிலத்தை ஏதேன்போல் அமைப்பார்; அதன் பாழ் இடங்களை ஆண்டவரின் தோட்டம்போல் ஆக்குவார். மகிழ்ச்சியும் அக்களிப்பும் அதில் காணப்படும்; நன்றிப்பாடலும் புகழ்ச்சிப் பண்ணும் அங்கே ஒலிக்கும்.
ஏசாயா 51 : 4 (ECTA)
என் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்; என் இனமே, எனக்குச் செவிகொடு; ஏனெனில் திருச்சட்டம் என்னிடமிருந்து புறப்பட்டுச் செல்லும்; என் நீதி மக்களினங்களுக்கு ஒளியாகத் திகழும்.
ஏசாயா 51 : 5 (ECTA)
நான் அளிக்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் வழங்கும் மீட்பு வெளிப்பட்டு விட்டது; என் புயங்கள் மக்களினங்கள்மேல் ஆட்சி செலுத்தும்; என் கைவன்மைமீது அவை நம்பிக்கை கொள்ளும்.
ஏசாயா 51 : 6 (ECTA)
வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்துங்கள்; கீழே மண்ணுலகை உற்றுநோக்குங்கள்; ஏனெனில், வானம் புகையென மறைந்துபோம்; மண்ணுலகம் உடையென நைந்துபோம்; அதில் வாழ்வோர் விட்டிலென மடிவர்; என் மீட்போ என்றென்றும் நிலைக்கும்; என் விடுதலைக்கு முடிவே இராது.
ஏசாயா 51 : 7 (ECTA)
நேர்மைதனை அறிந்தோரே, என் சட்டத்தை இதயத்தே தாங்கும் மக்களினத்தாரே, எனக்குச் செவி கொடுங்கள்; மானிடரின் நிந்தைக்கு அஞ்சாதீர்கள்; அவர்தம் இழிசொல் கேட்டுக் கலங்காதீர்கள்.
ஏசாயா 51 : 8 (ECTA)
ஏனெனில், பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையெனத் தின்றழிக்கும்; அரிப்புழு அவர்களை ஆட்டு மயிரென அரித்தொழிக்கும்; நான் அளிக்கும் விடுதலையோ என்றென்றும் நிலைக்கும்; நான் வழங்கும் மீட்போ தலைமுறைதோறும் நீடிக்கும்.
ஏசாயா 51 : 9 (ECTA)
விழித்தெழு, விழித்தெழு, ஆண்டவரின் புயமே, ஆற்றலை அணிந்து கொள்; பண்டைய நாள்களிலும் முந்தைய தலைமுறைகளிலும் செய்ததுபோல் விழித்தெழு; இராகாபைத் துண்டு துண்டாக வெட்டியதும் பறவை நாகத்தை ஊடுறவக் குத்தியதும் நீ அன்றோ?
ஏசாயா 51 : 10 (ECTA)
பேராழ நீர்த்திரளாம் கடலை வற்றச்செய்து, ஆழ்பகுதிகளில் பாதை அமைத்து, மீட்கப்பட்டோரை கடக்கச் செய்ததும் நீயே அன்றோ?
ஏசாயா 51 : 11 (ECTA)
ஆண்டவரால் மீட்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; முடிவில்லா மகிழ்ச்சி அவர்கள் தலைமேல் தங்கும்; அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவர்; துயரமும் பெருமூச்சும் ஒழிந்துபோம்.
ஏசாயா 51 : 12 (ECTA)
உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர் நானேதான்! மடிந்து போகும் மனிதருக்கும் புல்லென மாயும் மானிடருக்கும் நீ அஞ்சுவது ஏன்?
ஏசாயா 51 : 13 (ECTA)
உன்னை உருவாக்கிய ஆண்டவரை நீ ஏன் மறந்துவிட்டாய்? வானங்களை விரித்துப் பரப்பியவரும், மண்ணுலகிற்கு அடித்தளமிட்டவரும் அவர் அன்றோ? உன்னை ஒடுக்கி அழித்துவிட முயன்றவன் சீற்றத்தை முன்னிட்டு நீ ஏன் எந்நாளும் ஓய்வின்றி நடுங்குகிறாய்? உன்னை ஒடுக்கியவனின் சினம் எங்கே?
ஏசாயா 51 : 14 (ECTA)
கூனிக் குறுகியவன் விரைவில் விடுதலை பெறுவான்; அவன் குழியில் செத்து வீழ்வதில்லை; அவனுக்கு உணவு இல்லாமல் போகாது.
ஏசாயா 51 : 15 (ECTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! கடலைக் கலக்கி அலைகளைக் கொந்தளிக்கச் செய்பவர் நானே! ‘படைகளின் ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம்!
ஏசாயா 51 : 16 (ECTA)
நான் வானங்களை விரித்துப் பரப்பினேன்; மண்ணுலகிற்கு அடித்தளம் அமைத்தேன்; சீயோனை நோக்கி, “நீ என் மக்கள்” என்றேன்; என் சொற்களை உன் நாவில் அருளினேன்; என் கை நிழலில் உன்னை மறைத்துக்கொண்டேன்.
ஏசாயா 51 : 17 (ECTA)
எருசலேமின் துன்பம் தீர்தல் விழித்தெழு, விழித்தெழு, ஆண்டவர் கையினின்று, சினக் கிண்ணத்தைக் குடித்தவளே, மதியை மயக்கும் அக்கிண்ணத்தை அடிமண்டிவரை குடித்தவளே, எருசலேமே, எழுந்து நில். [* திவெ 14:10; 16:19.. ]
ஏசாயா 51 : 18 (ECTA)
அவள் பெற்றெடுத்த புதல்வருள் அவளுக்கு வழிகாட்டுவார் எவருமில்லை; அவள் வளர்த்துவிட்ட ஆண் மக்களுள் அவளுக்குக் கைகொடுப்பார் யாருமில்லை!
ஏசாயா 51 : 19 (ECTA)
இருவகைத் தீங்குகள் உனக்கு நேரிட்டன, உனக்காகப் புலம்பியழுபவன் எவன்? வீழ்ச்சி — அழிவு, பஞ்சம் — வாள் இவை உன்னை வாட்டின; யார் உன்னைத் தேற்றுவார்?
ஏசாயா 51 : 20 (ECTA)
உன் பிள்ளைகள் மயக்கமுற்றனர்; வலையில் சிக்கிய கலைமான் போல் அவர்கள் ஒவ்வொரு தெருமுனையிலும் வீழ்ந்துகிடக்கின்றனர்; ஆண்டவரின் சினத்திற்கும் உன் கடவுளின் கண்டிப்புக்கும் உள்ளாயினர்.
ஏசாயா 51 : 21 (ECTA)
ஆதலால், சிறுமையுற்றவளே, திராட்சை இரசம் இன்றியே குடிவெறி கொண்டவளே, இதைக் கேள்.
ஏசாயா 51 : 22 (ECTA)
தம் மக்கள் சார்பாக வழக்காடும் உன் கடவுளாகிய ஆண்டவர், உன் தலைவர் கூறுவது இதுவே: “இதோ, உன்னை மதிமயக்கும் கிண்ணத்தை உன் கையினின்றும் அகற்றிவிட்டேன்; என் சினக் கிண்ணத்தினின்று நீ இனிக் குடிக்கவேமாட்டாய்.”
ஏசாயா 51 : 23 (ECTA)
அக்கிண்ணத்தை உன்னை ஒடுக்கினோர் கையில் திணிப்பேன்; “நாங்கள் கடந்து செல்வதற்கு நீ முகங்குப்புற விழுந்துகிட” என்று அவர்கள் உன்னிடம் சொன்னார்களே! உன் முதுகை அவர்கள் தரையாகவும், கடந்து செல்வோருக்குக்குத் தெருவாகவும் மாற்றினார்களே!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23