ஏசாயா 43 : 1 (ECTA)
விடுதலை வரும் என்ற உறுதிமொழி யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயேலே, உன்னை உருவாக்கிய வருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்; உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன். [* மத் 3:17; 12:18; 17:5; மாற் 1:11; லூக் 3:22; 9: 35 ; மத் 12:18- 21. ]
ஏசாயா 43 : 2 (ECTA)
நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றியெரியாது. [* மத் 12:18- 21 ]
ஏசாயா 43 : 3 (ECTA)
ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; இஸ்ரயேலின் தூயவரும் உன்னை விடுவிப்பவரும் நானே; உனக்குப் பணயமாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியா, செபா நாடுகளையும் ஒப்புக்கொடுக்கிறேன். [* மத் 12:18- 21 ; திப 17:24- 25. ]
ஏசாயா 43 : 4 (ECTA)
என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்; மதிப்புமிக்கவன்; நான் உன்மேல் அன்பு கூர்கிறேன், ஆதலால் உனக்குப் பதிலாக மானிடரையும் உன் உயிருக்கு மாற்றாக மக்களினங்களையும் கொடுக்கிறேன். [* மத் 12:18- 21 ]
ஏசாயா 43 : 5 (ECTA)
அஞ்சாதே, ஏனெனனில் நான் உன்னோடு இருக்கின்றேன்; கிழக்கிலிருந்து உன் வழிமரபை அழைத்து வருவேன்; மேற்கிலிருந்து உன்னை ஒன்று திரட்டுவேன்.
ஏசாயா 43 : 6 (ECTA)
வடபுறம் நோக்கி, ‘அவர்களை விட்டுவிடு’ என்பேன். தென்புறத்திடம் ‘தடுத்து நிறுத்தாதே’ என்று சொல்வேன். “தொலைநாட்டிலிருந்து என் புதல்வரையும் உலகின் எல்லையிலிருந்து என் புதல்வியரையும் அழைத்து வா. [* எசா 49:6; லூக் 2:32; திப 13:47; 26:23.. ]
ஏசாயா 43 : 7 (ECTA)
என் மாட்சிக்காக நான் படைத்த, உருவாக்கிய, உண்டாக்கிய என் பெயரால் அழைக்கப்பெற்ற அனைவரையும் கூட்டிக்கொண்டுவா!”.
ஏசாயா 43 : 8 (ECTA)
இஸ்ரயேல் ஆண்டவரின் சாட்சி கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இருக்கும் மக்களைப் புறப்பட்டு வரச்செய்.
ஏசாயா 43 : 9 (ECTA)
வேற்றினத்தார் அனைவரும் ஒருங்கே திரண்டு வரட்டும்; மக்களினங்கள் ஒன்று கூடட்டும்; அவர்களுள் யார் அதை முன்னறிவிக்கக்கூடும்? முன்பு நடந்தவற்றை யாரால் விளக்கக் கூடும்? அவர்கள் கூறுவது சரியெனக் காட்டத் தம் சான்றுகளைக் கொண்டு வரட்டும்; மக்கள் அதைக்கேட்டு ‘உண்மை’ என்று சொல்லட்டும்.
ஏசாயா 43 : 10 (ECTA)
“நீங்கள் என் சாட்சிகள்” என்கிறார் ஆண்டவர்; ‘நான் தேர்ந்தெடுத்த என் ஊழியனும் நீங்களே; என்னை அறிந்து என்மீது நம்பிக்கை வைப்பீர்கள்; ‘நானே அவர்’ என்பதை உணர்ந்து கொள்வீர்கள்; எனக்கு முன் எந்தத் தெய்வமும் உருவாக்கப்படவில்லை; எனக்குப்பின் எதுவும் இருப்பதில்லை.
ஏசாயா 43 : 11 (ECTA)
நான், ஆம், நானே ஆண்டவர்; என்னையன்றி வேறு மீட்பர் இல்லை.
ஏசாயா 43 : 12 (ECTA)
அறிவித்தது, விடுதலை அளித்தது, பறைசாற்றியது அனைத்தும் நானே; உங்களிடையே உள்ள வேறு தெய்வமன்று; நீங்களே என் சாட்சிகள், என்கிறார் ஆண்டவர்!
ஏசாயா 43 : 13 (ECTA)
நானே இறைவன்; எந்நாளும் இருப்பவரும் நானே; என் கையிலிருப்பதைப் பறிப்பவர் எவருமில்லை; நான் செய்ததை மாற்றியமைப்பவர் எவர்?
ஏசாயா 43 : 14 (ECTA)
பாபிலோனிலிருந்து விடுவிக்கப்படல் இஸ்ரயேலின் தூயவரும் உங்கள் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் பொருட்டுப் பாபிலோனுக்கு ஆள்களை அனுப்பி, அதன் தாழ்ப்பாள்கள் அனைத்தையும் தகர்த்துவிடுவேன்; கல்தேயரின் மகிழ்ச்சிப் பாடல் புலம்பலாக மாறும்.
ஏசாயா 43 : 15 (ECTA)
நானே உங்கள் தூயவரான ஆண்டவர்; இஸ்ரயேலைப் படைத்தவர்; உங்கள் அரசர்.
ஏசாயா 43 : 16 (ECTA)
கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர்நடுவே பாதை அமைத்தவரும்,
ஏசாயா 43 : 17 (ECTA)
தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே.
ஏசாயா 43 : 18 (ECTA)
முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள்; முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்;
ஏசாயா 43 : 19 (ECTA)
இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன்.
ஏசாயா 43 : 20 (ECTA)
காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்; குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்; ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன்.
ஏசாயா 43 : 21 (ECTA)
எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.
ஏசாயா 43 : 22 (ECTA)
இஸ்ரயேலின் பாவம் ஆனால் யாக்கோபே, நீ என்னை நோக்கி மன்றாடவில்லை; இஸ்ரயேலே, என்னைப் பற்றிச் சலிப்புற்றாயே!
ஏசாயா 43 : 23 (ECTA)
ஆடுகளை எரிபலிக்கென நீ என்னிடம் கொண்டு வரவில்லை; உன் பலிகளால் நீ என்னைப் பெருமைப்படுத்தவில்லை; உணவுப்படையல் படைக்குமாறு நான் உங்களிடம் கேட்கவில்லை; தூபம் காட்டுமாறு உன்னை வற்புறுத்தவில்லை.
ஏசாயா 43 : 24 (ECTA)
பணம் கொடுத்து நீ எனக்கென்று நறுமணப்படையல் வாங்கவில்லை; உன் பலிகளின் கொழுப்பால் என்னை நிறைவு செய்யவில்லை; மாறாக, உன் பாவங்களால் என்னைத் தொல்லைப்படுத்தினாய்; உன் தீச்செயல்களால் என்னைச் சலிப்புறச் செய்தாய்.
ஏசாயா 43 : 25 (ECTA)
நான், ஆம், நானே, உன் குற்றங்களை என்பொருட்டுத் துடைத்தழிக்கின்றேன்; உன் பாவங்களை நினைவிற் கொள்ள மாட்டேன்.
ஏசாயா 43 : 26 (ECTA)
கடந்ததை எனக்குச் சொல்லிக் காட்டுங்கள். ஒருமிக்க நாம் வழக்காடுவோம்; நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்கானவற்றை எடுத்துரையுங்கள்.
ஏசாயா 43 : 27 (ECTA)
உன் முதல் தந்தை பாவம் செய்தான்; உனக்காகப் பேசுவோரும் எனக்கெதிராய்க் குற்றம் புரிந்துள்ளனர்.
ஏசாயா 43 : 28 (ECTA)
உன் தலைவர்கள் என் திருத்தூயகத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்; ஆதலால் யாக்கோபை அழிவுக்கும் இஸ்ரயேலைப் பழிப்புரைக்கும் உள்ளாக்கினேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28