ஏசாயா 38 : 1 (ECTA)
எசேக்கியாவின் நோய் குணமாதல்
(2 அர 20:1-11; 2 குறி 32:24-26) அந்நாள்களில், எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாகப்போகிறீர்; பிழைக்க மாட்டீர்” என்றார்.
ஏசாயா 38 : 2 (ECTA)
எசேக்கியா சுவர்ப்புறம் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி,
ஏசாயா 38 : 3 (ECTA)
“ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மைவழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும் நினைத்தருளும்” என்று கூறிக் கண்ணீர் சிந்தித் தேம்பித் தேம்பி அழுதார்.
ஏசாயா 38 : 4 (ECTA)
அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது:
ஏசாயா 38 : 5 (ECTA)
“நீ எசேக்கியாவிடம் சென்று கூறவேண்டியது; உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன்.
ஏசாயா 38 : 6 (ECTA)
உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்; இந்த நகரைப் பாதுகாப்பேன்.
ஏசாயா 38 : 7 (ECTA)
தாம் கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பதற்கு அவர் உமக்களிக்கும் அடையாளம்:
ஏசாயா 38 : 8 (ECTA)
இதோ, சாயும் கதிரவனின் நிழல் ஆகாசின் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்வேன்.” அவ்வாறே சாயும் கதிரவனின் நிழல் அக் கடிகையில் பத்துப்பாத அளவு பின்னிட்டது.
ஏசாயா 38 : 9 (ECTA)
யூதா அரசர் எசேக்கியா நோயுற்று, நோயினின்று குணமடைந்தபின் தீட்டிய எழுத்தோவியம்:
ஏசாயா 38 : 10 (ECTA)
‘என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே! நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப் பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே!’ என்றேன்.
ஏசாயா 38 : 11 (ECTA)
‘வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே! மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும் என்னால் பார்க்க முடியாதே!’ என்றேன்.
ஏசாயா 38 : 12 (ECTA)
என் உறைவிடம் மேய்ப்பவனின் கூடாரத்தைப்போல பெயர்க்கப்பட்டு என்னைவிட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல் என் வாழ்வை முடிக்கிறேன். தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்; காலை தொடங்கி இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்,
ஏசாயா 38 : 13 (ECTA)
துணை வேண்டிக் காலைவரை கதறினேன்; சிங்கம்போல் அவர் என் எலும்புகள் அனைத்தையும் நொறுக்குகிறார்; காலை தொடங்கி இரவுக்குள் நீர் எனக்கு முடிவுகட்டுவீர்.
ஏசாயா 38 : 14 (ECTA)
சிட்டுக்குருவி போலும் நாரை போலும் கூக்குரலிடுகிறேன்; மாடப்புறாப்போல் விம்முகிறேன்; மேல்நோக்கிப் பார்த்து என் கண்கள் சோர்வடைந்தன; என் தலைவரே, நான் ஒடுக்கப்படுகிறேன்; எனக்குத் துணையாய் இரும்.
ஏசாயா 38 : 15 (ECTA)
நான் அவரிடம் என்ன சொல்வேன்? என்ன கூறுவேன்? ஏனெனில் அவரே இதைச் செய்தார்; மனக்கசப்பால் உறக்கமே எனக்கு இல்லாமற் போயிற்று.
ஏசாயா 38 : 16 (ECTA)
என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்; என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது; எனக்கு உடல்நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச் செய்வீர். * விப 25:22..
ஏசாயா 38 : 17 (ECTA)
இதோ, என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்; மனங்கனிந்து அழிவின் குழியிலிருந்து என் உயிரைக் காத்தீர்; என் பாவங்கள் அனைத்தையும் உன் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீர்.
ஏசாயா 38 : 18 (ECTA)
பாதாளம் உம்மைப் போற்றிப் பாடாது; சாவு உம்மைப் புகழ்ந்து ஏத்தாது; பாதாளக் குழிக்குள் இறங்குவோர், நம்பிக்கைக்குரிய உம்மை நம்பியிருப்பதில்லை!
ஏசாயா 38 : 19 (ECTA)
நான் இன்று உம்மைப் புகழ்வது போல் வாழ்வோரே, வாழ்வோர் மட்டுமே உம்மைப் போற்றிப் பாடுவர். தந்தையர் தம் பிள்ளைகளுக்கு உமது வாக்குப் பிறழாமை குறித்துப் போதிப்பர்.
ஏசாயா 38 : 20 (ECTA)
ஆண்டவர் எனக்கு நலமளிக்க மனம்கொண்டார்; ஆண்டவரின் இல்லத்தில் எம் புகழ்ப்பாக்களை வாழ்நாளெல்லாம் இசைக்கருவி மீட்டிப் பாடுவோம்.
ஏசாயா 38 : 21 (ECTA)
“எசேக்கியா நலமுடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்” என்று எசாயா பதில் கூறியிருந்தார்.
ஏசாயா 38 : 22 (ECTA)
ஏனெனில், “ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு அடையாளம் யாது?” என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22