ஏசாயா 32 : 1 (ECTA)
நீதியுள்ள அரசர் இதோ, ஓர் அரசர் நேர்மையுடன் அரசாள்வார்; தலைவர்களும் நீதியோடு ஆட்சி செய்வர்; [* “அரியேல்” என்பது எபிரேயத்தில், ‘இறைவனின் பெண் சிங்கம்’ எனவும் ‘இறைவனின் பீடம்’ எனவும் பொருள்படும்.. ]
ஏசாயா 32 : 2 (ECTA)
ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுங்கிடமாகவும் புயலுக்குப் புகலிடமாகவும் வறண்ட நிலத்தில் நீருள்ள கால்வாய் போலும் காய்ந்த மண்ணில் பெரும் குன்றின் நிழல் போலும் இருப்பர்.
ஏசாயா 32 : 3 (ECTA)
அப்பொழுது பார்வை உடையவரின் கண்கள் மறைக்கபட்டிரா. கேள்வியுடையவரின் செவிகள் அடைக்கப்பட்டிரா.
ஏசாயா 32 : 4 (ECTA)
பதறும் நெஞ்சங்கள் அறிவை உணர்ந்துகொள்ளும்; திக்குவாயரின் வாய் தயக்கமின்றித் தெளிவுடன் பேசும்.
ஏசாயா 32 : 5 (ECTA)
மூடர் இனிச் சான்றோர் என அழைக்கப்படார்; கயவர் இனிப் பெரியோர் எனக்கருதப்படார்;
ஏசாயா 32 : 6 (ECTA)
ஏனெனில், மூடர் மடமையாய்ப் பேசுகின்றனர்; அவர்களின் மனம் தீமை செய்யத் திட்டமிடும்; அவர்களின் சிந்தை இறைப்பற்றின்றித் தீச்செயல் செய்வதையே நாடும்; அவர்கள் ஆண்டவரைப்பற்றித் தவறாகவே பேசுவர்; பசித்தோரின் பசி போக்கமாட்டார்; தாகமுற்றோர்க்கு நீர் தர மறுப்பார்.
ஏசாயா 32 : 7 (ECTA)
கயவரின் நயவஞ்சகச் செயல்கள் தீமையானவை; வறியோர் வழக்கில் நீதி இருப்பினும், வஞ்சக வார்த்தைகளால் ஏழைகளை அழிக்கும் தீங்கானவற்றை அவர்கள் திட்டமிடுகின்றனர்.
ஏசாயா 32 : 8 (ECTA)
சான்றோர் உயர்வானவற்றைச் சிந்திக்கின்றனர்; அவர்கள் சான்றாண்மையில் நிலைத்து நிற்பர்.
ஏசாயா 32 : 9 (ECTA)
தண்டனைத் தீர்ப்பும் மீட்பும் பகட்டாக வாழும் பெண்களே, எழுந்து என் குரலுக்குச் செவிகொடுங்கள்; கவலையற்ற புதல்வியரே, என் வார்த்தையைக் கேளுங்கள்.
ஏசாயா 32 : 10 (ECTA)
கவலையற்ற பெண்களே, ஓராண்டும் சில நாள்களும் சென்றபின் நீங்கள் நடுநடுங்குவீர்கள். ஏனெனில் திராட்சை அறுவடை அற்றுப்போகும்; கனிகொய்யுங் காலம் இனி வராது. [* உரோ 11: 8 ]
ஏசாயா 32 : 11 (ECTA)
பகட்டாக வாழும் மங்கையரே, அஞ்சி நடுங்குங்கள்; கவலையற்ற மகளிரே, நடுநடுங்குங்கள்; உடைகளை உரிந்து, களைந்து இடையில் சாக்கு உடையைக் கட்டிக் கொள்ளுங்கள்.
ஏசாயா 32 : 12 (ECTA)
செழுமையான வயல்களைக் குறித்தும் வளமான திராட்சைத் தோட்டத்தை முன்னிட்டும் மாரடித்து ஓலமிட்டு அழுங்கள்.
ஏசாயா 32 : 13 (ECTA)
முட்களும் முட்புதர்களும் ஓங்கி வளர்ந்துள்ள என் மக்களின் நிலத்திற்காகவும் களிப்புமிகு நகரில் உள்ள மகிழ்ச்சி நிறை இல்லங்கள் அனைத்திற்காகவும் அழுங்கள். [* மத் 15:8-9; மாற் 7:6- 7 ]
ஏசாயா 32 : 14 (ECTA)
அரண்மனை பாழடையுமாறு விடப்படும்; ஆரவாரமிக்க நகர் வெறுமையாகும்; குன்றும் காவல் மாடமும் என்றுமுள குகைகளாகும்; அங்குக் காட்டுக் கழுதைகள் களிப்படையும்; மந்தைகள் மேயும். [* 1 கொரி 1: 19 ]
ஏசாயா 32 : 15 (ECTA)
மீண்டும் உன்னதத்திலிருந்து ஆவி நம்மேல் பொழியப்படும்; பாலைநிலம் செழுமையான தோட்டமாகும்; செழுமையான தோட்டம் அடர்ந்த காடாகத் தோன்றும்.
ஏசாயா 32 : 16 (ECTA)
நீதி பாலைநிலத்தில் குடிகொண்டிருக்கும்; நேர்மை வளமான வயல்களில் வாழும். [* எசா 45: 9 ]
ஏசாயா 32 : 17 (ECTA)
நேர்மையால் வரும் பயன் நல்வாழ்வு; நீதியால் விளைவன என்றுமுள அமைதியும் நம்பிக்கையும்.
ஏசாயா 32 : 18 (ECTA)
என் மக்கள் அமைதி சூழ் வீடுகளிலும் பாதுகாப்பான கூடாரங்களிலும் தொல்லையற்ற தங்குமிடங்களிலும் குடியிருப்பர்.
ஏசாயா 32 : 19 (ECTA)
ஆனால், காடு அழியக் கல்மழை பொழியும்; நகரம் தாழ்நிலை அடைவது உறுதி.
ஏசாயா 32 : 20 (ECTA)
நீர்வளமிக்க இடங்களில் எல்லாம் பயிர்செய்து தாராளமாக மேயுமாறு, மாட்டையும் கழுதையையும் அவிழ்த்துவிடும் நீங்கள் நற்பேறு பெற்றவர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20