ஏசாயா 26 : 1 (ECTA)
அந்நாளில் யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்; நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்;
ஏசாயா 26 : 2 (ECTA)
வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.
ஏசாயா 26 : 3 (ECTA)
அவர்கள் மனஉறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.
ஏசாயா 26 : 4 (ECTA)
ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர் என்றுமுள கற்பாறை!
ஏசாயா 26 : 5 (ECTA)
உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார்.
ஏசாயா 26 : 6 (ECTA)
காலடிகள்-எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும்-அதை மிதிக்கும்.
ஏசாயா 26 : 7 (ECTA)
நீதிமான்களின் நெறிகள் நேரியவை; நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர்.
ஏசாயா 26 : 8 (ECTA)
ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காகக் காத்திருக்கிறோம், உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன.
ஏசாயா 26 : 9 (ECTA)
என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது; எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது; உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில் வாழ்வோர் நேர்மையைக் கற்றுக் கொள்வர்.
ஏசாயா 26 : 10 (ECTA)
கொடியவர்களுக்கு நீர் இரக்கம் காட்டினாலும் அவர்கள் நேரியன செய்யக் கற்றுக் கொள்வதில்லை; நேர்மை நிறைந்த நாட்டில் அவர்கள் அநீதி செய்கின்றனர்; ஆண்டவரின் மாட்சியை அவர்கள் காண்பதில்லை.
ஏசாயா 26 : 11 (ECTA)
ஆண்டவரே, ஓங்கிய உம் கையை அவர்கள் காண்பதில்லை; உம் மக்கள்மீது நீர் கொண்ட பேரார்வத்தை அவர்கள் கண்டு நாணட்டும்! உம் பகைவர்களுக்காக மூட்டிய தீ அவர்களை விழுங்கட்டும்!
ஏசாயா 26 : 12 (ECTA)
ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.
ஏசாயா 26 : 13 (ECTA)
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம்மைத்தவிர வேறு தலைவர்கள் எங்கள்மேல் ஆட்சி செலுத்தினார்கள்; ஆனால், உமது பெயரைமட்டுமே நாங்கள் போற்றுகின்றோம்.
ஏசாயா 26 : 14 (ECTA)
அவர்கள் செத்து மடிந்தார்கள், இனி உயிர்வாழ மாட்டார்கள். அவர்களின் உயிர்பெற்றெழ மாட்டா; ஏனெனில் நீர் அவர்களைத் தண்டித்து, அழித்துவிட்டீர்; அவர்களைப் பற்றிய நினைவுகள் யாவற்றையும் இல்லாததொழித்தீர்.
ஏசாயா 26 : 15 (ECTA)
இந்த இனம் வளரச் செய்தீர்; ஆண்டவரே, இந்த இனம் வளரச் செய்தீர்; நீர் மாட்சியுடன் விளங்குகின்றீர்; நாட்டின் எல்லைகள் அனைத்தையும் விரிவுபடுத்தினீர்.
ஏசாயா 26 : 16 (ECTA)
ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்; நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம்.
ஏசாயா 26 : 17 (ECTA)
பேறுகாலம் நெருங்குகையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்!
ஏசாயா 26 : 18 (ECTA)
நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்; ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்; நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை; உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் .
ஏசாயா 26 : 19 (ECTA)
இறந்த உம்மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்; புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி; இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச்செய்கின்றீர்.
ஏசாயா 26 : 20 (ECTA)
என் மக்களே! நீங்கள் போய் உங்கள் அறைக்குள் நுழைந்து, உள்ளிருந்து கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள்; கடும் சினம் தணியும்வரை சற்று ஒளிந்து கொள்ளுங்கள்.
ஏசாயா 26 : 21 (ECTA)
மண்ணுலகில் வாழ்வோர் தமக்கு எதிராகச் செய்த தீச் செயலுக்குத் தண்டனை வழங்க, ஆண்டவர் தம் திருத்தலத்திலிருந்து புறப்படுகின்றார்; மண்ணுலகம் தன் இரத்தப்பழியை வெளிக் கொணரும்; அதில் கொலை செய்யப்பட்டவர்களை இனியும் இது மூடிமறைக்காது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

BG:

Opacity:

Color:


Size:


Font: