ஏசாயா 21 : 1 (ECTA)
பாபிலோனின் வீழ்ச்சி பற்றிய காட்சி கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு:தென்னாட்டிலிருந்து சுழல்காற்றுகள் வீசுவதுபோல், அச்சம்தரும் நாடான பாலைநிலத்திலிருந்து அழிவு வருகின்றது. * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 2 (ECTA)
கொடியதொரு காட்சி எனக்குக் காண்பிக்கப்பட்டது: நம்பிக்கைத் துரோகி துரோகம் செய்கின்றான்; நாசக்காரன் நாசம் செய்கின்றான். ‘ஏலாம் நாடே! கிளர்ந்தெழு; மேதியாவே! முற்றுகையிடு’ அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும்
முடிவு வரச் செய்வேன். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 3 (ECTA)
ஆதலால், என் அடிவயிறு வேதனையால் துடிக்கிறது. பெண்ணின் பேறுகால வேதனைக்கு ஒத்த வேதனைகள் என்னைக் கவ்விக்கொண்டன; கலக்கமடைந்து செவிடன் போல் ஆனேன்; திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 4 (ECTA)
என் மனம் பேதலிக்கிறது; திகில் என்னை ஆட்கொண்டது; நான் நாடிய கருக்கல் வேளை என்னை நடுக்கமுறச் செய்கிறது. * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 5 (ECTA)
பந்தி தயார் செய்கிறார்கள்; கம்பளத்தை விரிக்கிறார்கள்; உண்கிறார்கள், குடிக்கிறார்கள்; தலைவர்களே, எழுங்கள்; கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 6 (ECTA)
ஏனெனில் என் தலைவர் எனக்குக் கூறியது இதுவே: “நீ போய்க் காவலன் ஒருவனை நிறுத்திவை; தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 7 (ECTA)
இருவர் இருவராய்க் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து வருவதையும், கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும் வீரர்கள் ஏறி வருவதையும் அவன் காணும்போது மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்.” * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 8 (ECTA)
அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்: “என் தலைவரே, பகல்முழுவதும் நான் காவல் மாடத்தின்மேல் நின்று கொண்டிருக்கின்றேன்; இரவெல்லாம் என் பணியில் நிறுத்தப்பட்டுள்ளேன். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 9 (ECTA)
இதோ, ஒரு சோடிக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், ஏறி ஒருவர் வருகின்றார். அவர் பதிலுரையாக, ‘பாபிலோன் வீழ்ந்தது, வீழ்ச்சியடைந்து விட்டது; அதன் தெய்வங்களின் சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி உடைக்கப்பட்டாயிற்று’ என்று கூறினார்.” * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 10 (ECTA)
போரடிக்கப்பட்டுக் களத்தில் சிதறிக் கிடக்கும் என் மக்களே, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 11 (ECTA)
ஏதோம் பற்றிய செய்தி தூமாவைப் பற்றிய திருவாக்கு: சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு, “சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்? சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்?” என்று ஒருவர் கேட்க, * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 12 (ECTA)
“காலை வருகிறது, அவ்வாறே இரவும்; கேட்பதென்றால் கேளுங்கள், மீண்டும் திரும்பி வாருங்கள்” என்று சாமக்காவலன் கூறினான். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 13 (ECTA)
அரேபியாவைக் குறித்த செய்தி அரேபியாவைக் குறித்த திருவாக்கு: தெதானின் வணிகப் பயணிகளே! அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில் நீங்கள் கூடாரம் அடியுங்கள்; * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 14 (ECTA)
தேமா நாட்டில் குடியிருப்போரே! தாகமுற்றோர்க்குத் தண்ணீர் கொண்டு வாருங்கள்; அகதிகளை உணவுடன் சென்று சந்தியுங்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 15 (ECTA)
ஏனெனில், வாள்களுக்குத் தப்பி அவர்கள் ஓடுகின்றார்கள்; உருவிய வாளுக்கும், நாணேற்றிய வில்லுக்கும் போரின் கடுமைக்கும் அஞ்சி ஓடுகின்றார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 16 (ECTA)
என் தலைவர் எனக்குக் கூறியது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 21 : 17 (ECTA)
கேதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களுள் எஞ்சினோர் மிகச் சிலராகவே இருப்பர். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைக் கூறியுள்ளார். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17