ஏசாயா 19 : 1 (ECTA)
எகிப்தின் மேல் வரவிருக்கும் தண்டனைத் தீர்ப்பு எகிப்தைக் குறித்த திருவாக்கு: விரைவாய்ச் செல்லும் மேகத்தின்மேல் ஏறி ஆண்டவர் எகிப்துக்கு வருகிறார்; எகிப்தின் சிலைகள் அவர் திருமுன் அஞ்சி நடுங்கும்; எகிப்தியரின் உள்மனமோ உருக்குலையும். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 2 (ECTA)
எகிப்தியருக்கு எதிராக எகிப்தியரையே நான் கிளர்ந்தெழச் செய்வேன். அப்போது, உடன்பிறப்புக்கு எதிராக உடன்பிறப்பும் நண்பனுக்கு எதிராக நண்பனும் ஒரு நகரத்தாருக்கு எதிராக மற்றொரு நகரத்தாரும் ஓர் அரசுக்கு எதிராக மற்றோர் அரசும் மோதிக்கொள்வர். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 3 (ECTA)
ஆதலால், எகிப்தியர் தங்கள் உள்ளத்தில் ஊக்கம் இழப்பர்; அவர்கள் திட்டங்களைக் குழப்பி விடுவேன்; அப்போது சிலைகள், மாய வித்தைக்காரர், மைவித்தைக்காரர், குறிசொல்வோர் ஆகியோரிடம் அவர்கள் குறி கேட்பார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 4 (ECTA)
கடினமனம் கொண்ட அதிகாரிகளின் கைகளில் எகிப்தியரை நான் ஒப்புவிப்பேன். கொடுங்கோல் மன்னன் ஒருவன் அவர்களை ஆள்வான், என்கிறார் தலைவராகிய படைகளின் ஆண்டவர். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 5 (ECTA)
கடல் நீர் வற்றிப்போகும்; பேராறு காய்ந்து வறண்டு போகும்; * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 6 (ECTA)
அதன் கால்வாய்க்குள் நாற்றமெடுக்கும்; எகிப்திலுள்ள பேராற்றின் கிளைகளில் நீர் குறைந்து, வறண்டு போகும்; கோரைகளும் நாணல்களும் மக்கிப் போகும். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 7 (ECTA)
ஆற்றின் கரைப்பகுதியும் முகத்துவாரமும் உலர்ந்த தரையாகும்; நைல் நதியின் அருகில் விதைத்த யாவும் தீய்ந்து, பறந்து இல்லாது போகும். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 8 (ECTA)
மீனவர்கள் புலம்புவர்; பேராற்றில் தூண்டில் போடுவோர் அனைவரும் அழுவர்; நீரின்மேல் வலைவீசுவோர் சோர்வடைவர். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 9 (ECTA)
மெல்லிய சணலாடை செய்வோரும் வெண்பருத்தி நூலினால் நெய்வோரும் வெட்கி நாணுவர். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 10 (ECTA)
நாட்டின் தூண்களாய் இருப்போர் நசுக்கப்படுவர்; வேலைக்கு அமர்த்தப்படுவோர் உள்ளம் பதறுவர். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 11 (ECTA)
சோவானின் தலைவர்கள் மூடர்களே! பார்வோனின் ஞானமிகு அறிவுரையாளர் அறிவற்ற ஆலோசனை தருகின்றனர்; ‘நான் ஞானிகளின் மகன், பண்டைக்கால அரசர்களின் வழி வந்தவன்’ என்று நீங்கள் ஒவ்வொருவரும் பார்வோனிடம் எப்படிச் சொல்லலாம்? * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 12 (ECTA)
அப்படியானால் உன் ஞானிகள் எங்கே? படைகளின் ஆண்டவர் எகிப்துக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை அவர்கள் அறிந்து உனக்கு அறிவிக்கட்டும். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 13 (ECTA)
சோவான் தலைவர்கள் அறிவிலிகள் ஆனார்கள்; நோபு நகரின் தலைவர்கள் ஏமாந்து போனார்கள்; எகிப்தின் குல முதல்வர்கள் அதை நெறிபிறழச் செய்தார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 14 (ECTA)
ஆண்டவர் அதனுள் குழப்பம் உண்டாக்கும் ஆவி புகுந்துவிடச் செய்தார்; போதையேறியவன் வாந்தியெடுத்துத் தள்ளாடுவதுபோல, அவர்கள் எகிப்தை அவன் செயல்கள் அனைத்திலும் தள்ளாடச் செய்தார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 15 (ECTA)
எகிப்து நாட்டின் தலையோ, வாலோ, ஈந்தோ நாணலோ யாரும் எதுவுமே செய்தற்கு இராது. * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 16 (ECTA)
எகிப்து ஆண்டவரை வழிபடுதல் அந்நாளில், படைகளின் ஆண்டவர் எகிப்தியருக்கு எதிராகத் தம் கையை ஓங்குவார். ஓங்கிய அவர் கைமுன் அவர்கள் பெண்டிரைப்போல் அஞ்சி நடுங்குவார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 17 (ECTA)
யூதா எகிப்தைத் திகிலடையச் செய்யும் நாடாகும். அதன் பெயரைக் கேட்கும் யாவரும் படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை முன்னிட்டு நடுநடுங்குவர். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 18 (ECTA)
அந்நாளில் கானானிய மொழி பேசும் ஐந்து நகர்கள் எகிப்தில் இருக்கும்; அவை படைகளின் ஆண்டவரது பெயரால் ஆணையிடும். அவற்றுள் ஒன்று ‘கதிரவன் நகரம்’ என்று அழைக்கப்படும். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 19 (ECTA)
அந்நாளில் எகிப்திய மண்ணில் ஆண்டவருக்குப் பலிபீடம் ஒன்று இருக்கும்; அதன் எல்லைப் புறத்தில் ஆண்டவருக்கெனத் தூண் ஒள்று எழுப்பப்படும். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 20 (ECTA)
எகிப்து நாட்டில் அது படைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சான்றாகவும் இருக்கும். ஒடுக்குவோரை முன்னிட்டு ஆண்டவரிடம் அவர்கள் முறையிடுவார்கள். அவர்களுக்காக வழக்காடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தம் மீட்பர் ஒருவரை அவர் அனுப்புவார். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 21 (ECTA)
அப்பொழுது, ஆண்டவர் எகிப்தியருக்குத் தம்மை வெளிப்படுத்துவார்; எகிப்தியரும் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வார்கள்; பலிகளாலும் எரிபலிகளாலும் ஆண்டவரை வழிபடுவார்கள்; ஆண்டவருக்குப் பொருத்தனைகள் செய்து அவற்றை நிறைவேற்றுவார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 22 (ECTA)
ஆண்டவர் எகிப்தியரை வதைப்பார்; வதைத்துக் குணமாக்குவார்; அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்; அவரும் அவர்கள் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்து அவர்களைக் குணமாக்குவார். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 23 (ECTA)
அந்நாளில் எகிப்திலிருந்து அசீரியாவிற்குச் செல்ல ஒரு நெடுஞ்சாலை உருவாகும். அசீரியர் எகிப்திற்கும் எகிப்தியர் அசீரியாவிற்கும் போய் வருவர்; எகிப்தியர் அசீரியரோடு சேர்ந்து வழிபாடு செலுத்துவார்கள். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 24 (ECTA)
அந்நாளில் இஸ்ரயேல் எகிப்திற்கும் அசீரியாவிற்கும் இணையான மூன்றாம் அரசாகத் திகழ்ந்து மண்ணுலகின் நடுவில் ஆசியாக விளங்கும். * எரே 46:2-26; எசே 29:1-32:32..
ஏசாயா 19 : 25 (ECTA)
படைகளின் ஆண்டவர் அவற்றிற்கு வழங்கும் ஆசி மொழி: ‘என் மக்களினமாகிய எகிப்தும், என் கைவேலைப்பாடாகிய அசீரியாவும், என் உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலும் ஆசிபெறுக!’ * எரே 46:2-26; எசே 29:1-32:32..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25