ஏசாயா 16 : 1 (ECTA)
மோவாபின் நம்பிக்கையற்ற நிலை சீயோன் மகளின் மலையில் நாட்டை ஆள்பவனுக்குச் சேலா நகரிலிருந்து பாலைநிலம் வழியாகச் செம்மறியாடு அனுப்புங்கள். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 16 : 2 (ECTA)
சிறகடித்து அலையும் பறவை போலும் கூடு இழந்த குஞ்சுபோலும் மோவாபிய மகளிர் அர்னோன் துறைகளில் காணப்படுவர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 16 : 3 (ECTA)
வாருங்கள்; அறிவுரை கூறுங்கள்; நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள்; நண்பகலில் உங்கள் நிழலை இரவு போலாக்கி, விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு மறைத்து வையுங்கள்; தப்பி ஓடுகிறவர்களைக் காட்டிக் கொடுக்காதீர்கள். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 16 : 4 (ECTA)
மோவாபிலிருந்து துரத்தப்பட்டவர்கள் உங்களிடமே தங்கியிருக்கட்டும்; அழிக்க வருபவனின் பார்வையிலிருந்து தப்ப அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்; ஒடுக்குபவன் ஒழிந்து போவான்; அழிவு ஓய்ந்து போகும்; மிதிக்கிறவர்கள் நாட்டில் இல்லாது போவர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 16 : 5 (ECTA)
அப்பொழுது, ஆண்டவர் தம் பேரன்பால் ஓர் அரியணையை அமைப்பார்; அதன்மேல் தாவீதின் கூடாரத்தைச் சார்ந்த ஒருவர் வீற்றிருப்பார்; அவர் உண்மையுடன் ஆள்பவர்; நீதியை நிலைநாட்டுபவர்; நேர்மையானதைச் செய்ய விரைபவர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 16 : 6 (ECTA)
மோவாபின் இறுமாப்பைப்பற்றி நாங்கள் கேள்வியுற்றோம்; அவன் ஆணவம் பெரிதே; அவன் இறுமாப்பையும் ஆணவத்தையும் செருக்கையும் குறித்துக் கேள்விப்பட்டோம். அவன் தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்யுரையே. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 16 : 7 (ECTA)
ஆதலால் மோவாபு அழுது புலம்பட்டும்; மோவாபுக்காக யாவரும் கதறியழட்டும்; கீர் அரசேத்தின் திராட்சை அடைகளை நினைந்து, நெஞ்சம் தளர்ந்து விம்மியழுங்கள். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 16 : 8 (ECTA)
எஸ்போனின் வயல்வெளி நிலங்கள் வாடுகின்றன, மக்களினங்களின் தலைவர்களை விழத் தள்ளிய சிபிமானின் திராட்சைத் தோட்டத்துக் கிளைகள் அழிந்துவிட்டன. அவை ஒருபுறம் யாசேரைத் தொட்டன; பாலை நிலம்வரை படர்ந்திருந்தன; அவற்றின் தளிர்கள் செழிப்புடன் வளர்ந்து கடல்கடந்து படர்ந்து சென்றன. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 16 : 9 (ECTA)
ஆதலால் யாசேருக்காக அழுததுபோல் நான் சிபிமாவின் திராட்சைத் தோட்டத்திற்காகக் கண்ணீர் விடுகின்றேன்; எஸ்போன்! எலயாரே! உங்களை என் கண்ணீரால் நனைக்கின்றேன்; ஏனெனில் உங்கள் கோடைக் கனிக்காகவும் அறுவடைக்காகவும் எழும் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கி விட்டது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 16 : 10 (ECTA)
வளமான வயல் நிலங்களிலிருந்து அக்களிப்பும் மகிழ்ச்சியும் அகற்றப்பட்டன. திராட்சைத் தோட்டங்களில் பாடல்கள் பாடுவார் யாருமில்லை; ஆரவாரம் எழுப்புவார் எவருமில்லை. இரசம் எடுப்பதற்கு ஆலையில் திராட்சைக்கனி பிழிவாருமில்லை; பழம் பிழிவாரின் பூரிப்பும் இல்லாதொழிந்தது; [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 16 : 11 (ECTA)
ஆதலால், மோவாபுக்காக என் நெஞ்சமும், கீர்கேரசிற்காக என் இதயமும் வீணையின் நரம்புபோல் துடிக்கின்றது; [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 16 : 12 (ECTA)
மோவாபியர் உயரமான தொழுகை மேடுகளில் வழிபாடு செய்து களைத்தும், திருத்தலங்களுக்குச் சென்று மன்றாடியும் அவர்களுக்கு ஒன்றும் இயலாமற் போயிற்று. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ; திவெ 8:10; 9: 1. ]
ஏசாயா 16 : 13 (ECTA)
இதுவே கடந்த காலத்தில் மோவாபைக் குறித்து ஆண்டவர் கூறிய திருவாக்கு. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ; மத் 11:23; லூக் 10: 15. ]
ஏசாயா 16 : 14 (ECTA)
ஆனால், இப்பொழுது ஆண்டவர் கூறுவது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒப்ப, மூன்று ஆண்டுகளில், மோவாபு நாட்டில் திரளான மக்கள் கூட்டம் இருப்பினும், அதன் மேன்மை அழிவுறும்; ஒருசிலரே நாட்டில் எஞ்சியிருப்பர்; அவர்களும் வலிமை இழந்திருப்பர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ; மத் 11:23; லூக் 10: 15. ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14