ஏசாயா 15 : 1 (ECTA)
ஏதோமுக்கு வரவிருக்கும் அழிவு மோவாபைப் பற்றிய திருவாக்கு: ஒரே இரவில் ஆர் நகரம் அழிக்கப்படுவதால் மோவாபும் அழிக்கப்படும். ஒரே இரவில் கீர் நகரம் அழிக்கப்படுவதால், மோவாபும் அழிக்கப்படும். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 15 : 2 (ECTA)
தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப உயர்ந்த இடங்களுக்கு ஏறிச் செல்கின்றனர்; நெபோ, மேதாபா நகரங்களைக் குறித்து மோவாபு அலறி அழுகின்றது; அவர்கள் அனைவரின் தலைகளும் மழிக்கப்பட்டாயிற்று. தாடிகள் அனைத்தும் சிரைக்கப்பட்டதாயிற்று. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 15 : 3 (ECTA)
அதன் தெருக்களில் நடமாடுவோர் சணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்; வீட்டு மாடிகளிலும் பொது இடங்களிலும் உள்ள யாவரும் ஓலமிட்டு அழுகின்றனர். விழிநீர் ததும்பிவழியத் தேம்பித் தேம்பி அழுகின்றனர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 15 : 4 (ECTA)
எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர் கூக்குரலிடுகின்றனர். யாகசு ஊர்வரை அவர்களின் குரல் கேட்கின்றது; படைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள் கதறுகின்றார்கள், ஒவ்வொருவனும் மனக்கலக்கம் அடைகிறான். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 15 : 5 (ECTA)
மோவாபுக்காக என் நெஞ்சம் குமுறுகின்றது; அதன் அகதிகள் சோவாருக்கும் எக்லத்செலிசியாவுக்கும் ஓடுகின்றனர்; ஏனெனில் அவர்கள் லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில் அழுதுகொண்டு செல்கின்றனர்; ஒரோனயிம் சாலையில் அழிவின் அழுகுரலை எழுப்புகின்றனர்; [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 15 : 6 (ECTA)
நிம்ரிமின் நீர்நிலைகள் தூர்ந்து போயின; புல் உலர்ந்தது; பூண்டுகள் கருகின; பசுமை என்பதே இல்லாமற் போயிற்று. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 15 : 7 (ECTA)
ஆதலால் தாங்கள் மிகுதியாக ஈட்டியவற்றையும் சேமித்து வைத்தவற்றையும் தூக்கிக் கொண்டு அவர்கள் அராவிம் ஆற்றைக் கடக்கின்றனர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 15 : 8 (ECTA)
மோவாபின் எல்லையெங்கும் கதறியழும் குரல் எட்டுகின்றது; அவர்களின் அவலக்குரல் எக்லயிம் நகர்வரை கேட்கின்றது; அவர்களின் புலம்பல் பெயேர் ஏலிம் நகரை எட்டுகின்றது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 15 : 9 (ECTA)
தீபோன் நீர்நிலைகள் இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன; ஆயினும் தீபோன் மேல் இன்னும் மிகுதியான
துன்பத்தைக் கொண்டு வருவேன்;
மோவாபியருள் தப்பிப் பிழைத்தோர்மேலும் நாட்டில் எஞ்சியிருப்போர்மேலும் சிங்கத்தை ஏவிவிடுவேன். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]

1 2 3 4 5 6 7 8 9