ஏசாயா 14 : 1 (ECTA)
அடிமைத்தனத்தினின்று திரும்புதல் ஆண்டவர் யாக்கோபின் மீது இரக்கம் காட்டி இஸ்ரயேலை மீண்டும் தேர்ந்து கொள்வார்; அவர்களை அவர்களுடைய நாட்டில் அமைதியுடன் வாழச் செய்வார். வேற்று நாட்ட வரும் அவர்களை நாடி வந்து யாக்கோபின் குடும்பத்தாரோடு சேர்ந்து கொள்வார்கள். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 14 : 2 (ECTA)
மக்களினங்களை அவர்களை அழைத்து வந்து, அவர்களது சொந்த இடத்திற்கு அவர்களை இட்டுச் செல்வார்கள். அவ் வேற்றுநாட்டாரை ஆண்டவரின் நாட்டில் இஸ்ரயேல் குடும்பத்தார் அடிமைகளாகவும், அடிமைப் பெண்களாகவும் உரிமையாக்கிக் கொள்வர்; தங்களை அடிமைப் படுத்தியவர்களை அடிமையாக்குவார்கள்; அவர்களை ஒடுக்கியவர்கள் மேல் ஆட்சி செலுத்துவார்கள். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 14 : 3 (ECTA)
பாபிலோனிய அரசன்மீது வசைப்பாடல் ஆண்டவர் உன்மேல் சுமத்திய துயரையும் இடரையும் கடுமையான அடிமை வாழ்வையும் அகற்றி, அமைதி வாழ்வை உனக்குத் தரும் நாளில், [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 14 : 4 (ECTA)
பாபிலோன் மன்னனுக்கு எதிராக இந்த ஏளனப் பாடலை எடுத்துக் கூறு: “ஒடுக்கியவன் ஒழிந்தானே! அவன் ஆணவமும் ஓய்ந்ததே! [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 14 : 5 (ECTA)
தீயோரின் கோலையும் ஆட்சியாளரின் செங்கோலையும் ஆண்டவர் முறித்துப் போட்டார். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 14 : 6 (ECTA)
அவர்கள் கோபத்தால் வெகுண்டு அடிமேல் அடியாக மக்களினங்களை அடித்து நொறுக்கினார்கள்; பிற நாட்டினரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கடுமையாய் ஆண்டார்கள். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 14 : 7 (ECTA)
மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி அமைதியில் மூழ்கியிருக்கின்றது; மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்கின்றது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 14 : 8 (ECTA)
தேவதாரு மரங்களும் லெபனோனின் கேதுரு மரங்களும் உன் வீழ்ச்சியால் களிப்படைகின்றன; ‘நீ வீழ்ந்து கிடக்கும் இந்நேரமுதல் எமை வெட்டி வீழ்த்த எமக்கெதிராய் எழுபவர் எவருமில்லை’ எனப் பாடுகின்றன. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 14 : 9 (ECTA)
நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக் கீழுள்ள பாதாளம் மகிழ்ச்சியால் பரபரக்கின்றது; உலகின் இறந்த தலைவர்கள் அனைவரும் உன்னை வரவேற்குமாறு அவர்களை எழுப்புகிறது. வேற்றினத்தாரின் அரசர்கள் அனைவரையும் அவர்தம் அரியணையை விட்டு எழச் செய்கிறது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 14 : 10 (ECTA)
அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி, “நீயும் எங்களைப்போல் வலுவிழந்து போனாயே! எங்களின் கதியை நீயும் அடைந்தாயே! [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 14 : 11 (ECTA)
உன் இறுமாப்பும் உன் வீணைகளின் இசையொலியும் பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன; புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்! பூச்சிகள் உன் போர்வையாகும்! [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 14 : 12 (ECTA)
வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே! மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே, வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே! [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ; திவெ 8:10; 9: 1. ]
ஏசாயா 14 : 13 (ECTA)
‘நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்; இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்; வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ; மத் 11:23; லூக் 10: 15. ]
ஏசாயா 14 : 14 (ECTA)
மேகத்திரள்மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்’ என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே! [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ; மத் 11:23; லூக் 10: 15. ]
ஏசாயா 14 : 15 (ECTA)
ஆனால் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்; படுகுழியின் அடிமட்டத்திற்குள் தள்ளப்பட்டாயே! [* மத் 11:23; லூக் 10: 15 ]
ஏசாயா 14 : 16 (ECTA)
உன்னைக் காண்போர், உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து, ‘மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும், அரசுகளை நிலைகுலையச் செய்தவனும்,
ஏசாயா 14 : 17 (ECTA)
பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி, அதன் நகரங்களை அழித்தவனும், தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப விடுதலை அளிக்காதிருப்பவனும் இவன் தானோ?’ என்பர்.
ஏசாயா 14 : 18 (ECTA)
மக்களின மன்னர்கள் அனைவரும் அவரவர் உறைவிடங்களில் மாட்சியுடன் படுத்திருக்கின்றனர்.
ஏசாயா 14 : 19 (ECTA)
நீயோ, அருவருப்பான அழுகிய இலைபோல, உன் கல்லறையிலிருந்து வெளியே வீசப்பட்டிருக்கிறாய்; வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு, நாற்றமெடுத்த பிணம்போலக் கிடக்கின்றாய்.
ஏசாயா 14 : 20 (ECTA)
கல்லறையில் அவர்களோடு நீ இடம் பெறமாட்டாய்; ஏனெனில், உன் நாட்டை நீ அழித்து விட்டாய்; உன் மக்களைக் கொன்று போட்டாய்; தீங்கிழைப்போரின் வழிமரபு என்றுமே பெயரற்றுப் போகும்.
ஏசாயா 14 : 21 (ECTA)
மூதாதையரின் தீச்செயல்களை முன்னிட்டு அவர்கள் புதல்வர்களுக்குக் கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்; நாட்டை உரிமையாக்க இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது; பூவுலகின் பரப்பை அவர்கள் நகரங்களால் நிரப்பக்கூடாது.”
ஏசாயா 14 : 22 (ECTA)
பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு “அவர்களுக்கு எதிராக நான் கிளர்ந்தெழுவேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர், “பாபிலோனின் பெயரையும் அங்கே எஞ்சியிருப்போரையும், வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும் இல்லாதொழிப்பேன்,” என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 14 : 23 (ECTA)
“அந்நாட்டை முள்ளம்பன்றிகளின் இடமாக்குவேன்; சேறும் சகதியும் நிறைந்த நீர்நிலையாக்குவேன்; அழிவு என்னும் துடைப்பத்தால் முற்றிலும் துடைத்துவிடுவேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
ஏசாயா 14 : 24 (ECTA)
படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகின்றார்: “நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்; நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும். [* எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 14 : 25 (ECTA)
என் நாட்டில் அசீரியனை முறியடிப்பேன்; என் மலைகளின் மேல் அவனை மிதித்துப் போடுவேன்; அப்பொழுது அவனது நுகத்தடி அவர்களைவிட்டு அகலும்; அவன் வைத்த சுமை அவர்கள் தோளிலிருந்து இறங்கும். [* எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 14 : 26 (ECTA)
மண்ணுலகம் முழுவதையும்பற்றி நான் தீட்டிய திட்டம் இதுவே; பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராக நான் ஓங்கியுள்ள கையும் இதுவே. [* எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 14 : 27 (ECTA)
படைகளின் ஆண்டவர் தீட்டிய திட்டத்தைச் சீர்குலைக்க வல்லவன் எவன்? அவர் தம் கையை ஓங்கியிருக்க அதை மடக்கக்கூடியவன் எவன்?” [* எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 14 : 28 (ECTA)
பெலிஸ்தியருக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு ஆகாசு அரசன் இறந்த ஆண்டில் இந்தத் திருவாக்கு அருளப்பட்டது. [* 2 அர 16:20; 2 குறி 28: 27 ]
ஏசாயா 14 : 29 (ECTA)
பெலிஸ்திய நாட்டின் அனைத்து மக்களே, உங்களை அடித்த கோல் முறிந்து விட்டதற்காக அக்களிக்காதீர்; ஏனெனில் பாம்பின் வேரினின்று கட்டுவிரியன் புறப்பட்டு வரும்; அதன் கனியாகப் பறவைநாகம் வெளிப்படும். [* எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.. ]
ஏசாயா 14 : 30 (ECTA)
ஏழைகளின் தலைப்பிள்ளைகள் உணவு பெறுவார்கள்; வறியவர்கள் அச்சமின்றி இளைப்பாறுவார்கள்; உன் வழிமரபைப் பஞ்சத்தால் நான் மடியச் செய்வேன், உன்னில் எஞ்சியிருப்போரை நான் கொன்றொழிப்பேன். [* எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.. ]
ஏசாயா 14 : 31 (ECTA)
வாயிலே, வீறிட்டு அழு; நகரே, கதறியழு; எல்லாப் பெலிஸ்திய மக்களே; மனம் பதறுங்கள், ஏனெனில் வடபுறத்திலிருந்து புகையெனப் படை வருகின்றது. அதன் போர்வீரருள் கோழை எவனும் இல்லை. [* எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.. ]
ஏசாயா 14 : 32 (ECTA)
அந்த நாட்டுத் தூதருக்கு என்ன மறுமொழி கூறப்படும்? “சீயோனுக்கு அடித்தளமிட்டவர் ஆண்டவர்; அவர்தம் மக்களுள் துயருறுவோர் அங்கேயே புகலிடம் பெறுவர் என்பதே.”

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32