ஏசாயா 13 : 1 (ECTA)
பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு ஆமோட்சின் மகன் எசாயா பாபிலோனைக் குறித்துக் கண்ட காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு: [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 13 : 2 (ECTA)
வறண்ட மலை ஒன்றில் போர்க்கொடி ஏற்றுங்கள்; போர்வீரர்களை உரக்கக் கூவி அழையுங்கள்; உயர்குடி மக்கள் வாழும் நகர வாயில்களுக்குள் நுழையும்படி, அவர்களுக்குக் கையசைத்துச் சைகை காட்டுங்கள். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 13 : 3 (ECTA)
போருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள என் வீரர்களுக்கு, நானே ஆணை பிறப்பித்துள்ளேன்; நான் சினமடைந்து பிறப்பித்துள்ள என் கட்டளையை நிறைவேற்றிட, தங்கள் வலிமையால் பெருமிதம் கொள்ளும் என் வீரர்களை அழைத்துள்ளேன். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 13 : 4 (ECTA)
மலைகளின் மேல் எழும் பேரிரைச்சலைக் கேளுங்கள்; அது பெருங்கூட்டமாய் வரும் மக்களின் ஆரவாரம்; அரசுகளின் ஆர்ப்பாட்டக் குரலைக் கேளுங்கள், பிற இனத்தார் ஒருங்கே திரண்டு விட்டனர்; [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 13 : 5 (ECTA)
தொலைநாட்டிலிருந்தும் தொடுவானத்து எல்லைகளிலிருந்தும் அவர்கள் வருகின்றார்கள்; ஆண்டவர் தம் கடும்சினத்தின் போர்க் கலன்களோடு உலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 13 : 6 (ECTA)
அழுது புலம்புங்கள், ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; எல்லாம் வல்லவரிடமிருந்து அழிவு வடிவத்தில் அது வருகின்றது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ; யோவே 1: 15. ]
ஏசாயா 13 : 7 (ECTA)
ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்; மானிட நெஞ்சம் அனைத்தும் உருகி நிற்கும். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 13 : 8 (ECTA)
அவர்கள் திகிலடைவார்கள்; துன்ப துயரங்கள் அவர்களைக் கவ்விக்கொள்ளும்; பேறுகாலப் பெண்ணைப்போல வேதனையடைவார்கள்; ஒருவர் மற்றவரைப் பார்த்துத் திகைத்து நிற்பர்; கோபத் தீயால் அவர்கள் முகம் கனன்று கொண்டிருக்கும். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 13 : 9 (ECTA)
இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது, கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும் நிறைந்த நாள் அது; மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும் நாள் அது; அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாள் அது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 13 : 10 (ECTA)
வானத்து விண்மீன்களும் இராசிக் கூட்டங்களும் ஒளி வீசமாட்டா; தோன்றும்போதே கதிரவன் இருண்டு போவான்; வெண்ணிலாவும் தண்ணொளியைத் தந்திடாது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ; எசே 32:7; மத் 24:29; மாற் 13:24-25; லூக் 21:25; திவெ 6:12- 13. ]
ஏசாயா 13 : 11 (ECTA)
உலகை அதன் தீச்செயலுக்காகவும் தீயோரை அவர்தம் கொடுஞ் செயலுக்காகவும் நான் தண்டிப்பேன்; ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்; அச்சுறுத்துவோரின் இறுமாப்பை அடக்குவேன். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 13 : 12 (ECTA)
மானிடரைப் பசும் பொன்னைவிடவும் மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும் அரிதாக்குவேன். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 13 : 13 (ECTA)
ஆதலால், வானத்தை நடுங்கச் செய்வேன்; மண்ணுலகம் தன் இருப்பிடத்திலிருந்து ஆட்டங் கொடுக்கும்; படைகளின் ஆண்டவரது கோபத்தால் அவரது கடும்சினத்தின் நாளில் இது நடக்கும். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 13 : 14 (ECTA)
துரத்தப்பட்ட புள்ளிமான் போலவும், ஒன்று சேர்ப்பாரின்றிச் சிதறுண்டு ஆடுகளைப் போலவும், எல்லாரும் தம் மக்களிடம் திரும்பிச் செல்வர்; எல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத் தப்பியோடுவர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51: 64 ]
ஏசாயா 13 : 15 (ECTA)
அகப்பட்ட ஒவ்வொருவரும் பிடிபட்ட ஒவ்வொருவரும் வாளால் மடிவர்.
ஏசாயா 13 : 16 (ECTA)
அவர்கள் பச்சிளம் குழந்தைகள் அவர்கள் கண்ணெதிரே மோதியடிக்கப்படுவர். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்கள் துணைவியர் மானபங்கப்படுத்தப்படுவர்.
ஏசாயா 13 : 17 (ECTA)
இதோ, அவர்களுக்கு எதிராக நான் மேதியரைக் கிளர்ந்தெழச் செய்கின்றேன், அவர்கள் வெள்ளியைப் பெரிதாக எண்ணாதவர்கள்; பொன்னை அடைவதற்கு ஆவல் கொள்ளாதவர்கள்.
ஏசாயா 13 : 18 (ECTA)
அவர்கள் வில்வீரர் இளைஞரை மோதியடிப்பார்கள், பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள் கருணை காட்டமாட்டார்கள்; சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில் இரக்கம் இராது.
ஏசாயா 13 : 19 (ECTA)
அரசுகளில் சிறப்புமிகு கல்தேயரின் மேன்மையும் பெருமையுமான பாபிலோன் கடவுள் அழித்த சோதோம் கொமோராவைப்போல ஆகிவிடும். [* தொநூ 19: 24 ]
ஏசாயா 13 : 20 (ECTA)
இனி எவரும் அதில் ஒருபோதும் குடியிருக்க மாட்டார்; அதுவும் தலைமுறை தலைமுறையாகக் குடியற்று இருக்கும்; அரேபியர் அங்கே கூடாரம் அமைக்கமாட்டார்; ஆயர்கள் தம் மந்தையை அங்கே இளைப்பாற விடுவதில்லை.
ஏசாயா 13 : 21 (ECTA)
ஆனால், காட்டு விலங்குகள் அங்கே படுத்துக் கிடக்கும்; ஊளையிடும் குள்ளநரிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும்; தீக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்; வெள்ளாட்டுக் கிடாய்கள் அங்கே துள்ளித் திரியும். [* எசா 34:14; செப் 2:14; திவெ 18:2.. ]
ஏசாயா 13 : 22 (ECTA)
அவர்கள் கோட்டைகளில் ஓநாய்கள் அலறும்; அரண்மனைகளில் குள்ளநரிகள் ஊளையிடும்; அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது; அதற்குரிய நாள்கள் அண்மையில் உள்ளன.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22