ஏசாயா 11 : 1 (ECTA)
நீதியுள்ள அரசரின் வருகை ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். [* திவெ 5:5; 22: 16 ]
ஏசாயா 11 : 2 (ECTA)
ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு — இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
ஏசாயா 11 : 3 (ECTA)
அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்;
ஏசாயா 11 : 4 (ECTA)
நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். [* 1 தெச 2: 8 ]
ஏசாயா 11 : 5 (ECTA)
நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை. [* எபே 6:14; 11:6-9; எசா 65: 25 ]
ஏசாயா 11 : 6 (ECTA)
அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக் கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும்.
ஏசாயா 11 : 7 (ECTA)
பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்;
ஏசாயா 11 : 8 (ECTA)
பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும்.
ஏசாயா 11 : 9 (ECTA)
என் திருமுலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். [* அப 2:14; 11:10; உரோ 15: 12 ]
ஏசாயா 11 : 10 (ECTA)
நாடு கடத்தப்பட்டோர் திரும்பிவரல் அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிறஇனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.
ஏசாயா 11 : 11 (ECTA)
அந்நாளில், என் தலைவர் மீண்டும் தம் கையை நீட்டி, அசீரியா, எகிப்து, பத்ரோசு, பாரசீகம், எத்தியோப்பியா, ஏலாம், சினார், ஆமாத்து முதலிய நாடுகளிலும், கடல் தீவுகளிலும் வாழும் தம் மக்களுள் எஞ்சியிருப்போரைத் தம் நாட்டிற்குத் திரும்பக் கொணர்வார்.
ஏசாயா 11 : 12 (ECTA)
பிற இனத்தாருக்கென ஒரு கொடியை ஏற்றி வைப்பார்; இஸ்ரயேலில் நாடு கடத்தப்பட்டோரை ஒன்று திரட்டுவார்; யூதாவில் சிதறுண்டு போனவர்களை உலகின் நாற்புறத்திலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார்.
ஏசாயா 11 : 13 (ECTA)
எப்ராயிமரின் பொறாமை அவர்களை விட்டு நீங்கும், யூதாவைப் பகைத்தோர் வெட்டி வீழ்த்தப்படுவர். எப்ராயிமர் யூதாமேல் பொறாமை கொள்வதில்லை; யூதாவும் எப்ராயிமரைப் பகைப்பதில்லை.
ஏசாயா 11 : 14 (ECTA)
அவர்கள் இருவரும் சேர்ந்து மேற்கிலுள்ள பெலிஸ்தியரின் தோள்மேல் பாய்வார்கள்; கீழ்த்திசை நாட்டினரைக் கொள்ளையடிப்பார்கள்; ஏதோமையும் மோவாபையும் கைப்பற்றிக் கொள்வார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்கு அடிபணிவார்கள்.
ஏசாயா 11 : 15 (ECTA)
எகிப்தின் கடல் முகத்தை ஆண்டவர் முற்றிலும் வற்றச்செய்வார்; பேராற்றின்மேல் கையசைத்து அனல்காற்று வீசச்செய்வார்; கால் நனையாமல் மக்கள் கடந்து வரும்படி அந்த ஆற்றை ஏழு கால்வாய்களாகப் பிரிப்பார். [* திவெ 16:12.. ]
ஏசாயா 11 : 16 (ECTA)
இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வந்த நாளில் பெருவழி தோன்றியது போல, ஆண்டவரின் மக்களுள் எஞ்சியோர் வருவதற்கு அசீரியாவிலிருந்து பெருவழி ஒன்று தோன்றும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16