ஏசாயா 10 : 1 (ECTA)
அநீதியான சட்டங்களை இயற்றுவோர்க்கு ஐயோ, கேடு! மக்களை ஒடுக்குகின்ற சட்டங்களை எழுதிவருவோருக்கு ஐயோ, கேடு!
ஏசாயா 10 : 2 (ECTA)
அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல், அவர்கள் உரிமையை மறுக்கின்றார்கள்; எம் மக்களுள் எளியோரின் உரிமையை அவர்கள் திருடுகின்றார்கள்; கைம்பெண்களைக் கொள்ளைப் பொருளாய் எண்ணிச் சூறையாடுகிறார்கள். திக்கற்றோரை இரையாக்கிக் கொள்கின்றார்கள்.
ஏசாயா 10 : 3 (ECTA)
தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்? தொலைநாட்டிலிருந்து அழிவாகிய சூறைக்காற்று வரும்போது என்ன ஆவீர்கள்? உதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்? உங்கள் செல்வங்களை எங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்?
ஏசாயா 10 : 4 (ECTA)
கட்டுண்ட கைதிகளிடையே தலை கவிழ்ந்து வருவீர்கள்; இல்லையேல் வெட்டுண்டு மடிந்தோரிடையே வீழ்வீர்கள். இதிலெல்லாம் ஆண்டவரின் சீற்றம் தணியவில்லை. ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.
ஏசாயா 10 : 5 (ECTA)
ஆண்டவரின் கருவி அசீரியா அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது; தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது. [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 6 (ECTA)
இறைப்பற்றில்லா நாட்டினர்க்கு அந்நாட்டை நான் அனுப்புகிறேன்; எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க அதற்கு ஆணை கொடுக்கிறேன்; அம்மக்களைக் கொள்ளையிடவும் அவர்கள் பொருள்களைச் சூறையாடவும், தெருவில் கிடக்கும் சேற்றைப்போல அவர்களை மிதித்துப் போடவும், அதற்குக் கட்டளை தருகிறேன். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 7 (ECTA)
அசீரிய அரசன் நினைப்பதோ வேறு, அவனது உள்ளத்தில் எழும் திட்டங்கள் வேறு; மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத் தன் இதயத்தில் எண்ணுகிறான்; பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த அவன் விரும்புகிறான். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 8 (ECTA)
அவன் இறுமாப்புடன் சொல்வதாவது: “என் படைத்தலைவர்கள் ஒவ்வொருவரும் ஓர் அரசர் அல்லவா? [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 9 (ECTA)
கல்னேர் நகர் கர்கமிசு நகர் போன்ற தல்லவா? ஆமாத்து நகர் அர்ப்பாது நகருக்கு இணையல்லவா? சமாரியா நகர் தமஸ்கு நகரை ஒத்ததல்லவா? [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 10 (ECTA)
சிறப்பு வாய்ந்த, சிலைவணங்கும் அரசுகள் வரை என் கை எட்டியிருக்கின்றது; அந்நாட்டுச் சிலைகள் எருசலேம், சமாரியா நகர்ச் சிலைகளைவிட எண்ணிக்கையில் மிகுதி. [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 11 (ECTA)
சமாரியாவையும் அதிலுள்ள சிலைகளையும் அழித்துப் பாழ்படுத்தியவன் நான்; இப்படியிருக்க, எருசலேமுக்கும் அதன் மக்கள் வழிபடும் சிலைகளுக்கும் அவ்வாறே செய்யமாட்டேனோ?” [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 12 (ECTA)
எனவே சீயோன் மலைமேலும் எருசலேமிலும் என் வேலைகள் அனைத்தையும் முடித்தபின், ஆணவம் நிறைந்த அசீரிய அரசனின் சிந்தனையை முன்னிட்டும், இறுமாப்புடன் அவன் பேசிய பேச்சுகளை முன்னிட்டும் “அவனை நான் தண்டிப்பேன்” என்கிறார் என் தலைவர். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 13 (ECTA)
ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்: “என் கைவலிமையாலே நான் அதைச் செய்து முடித்தேன்; என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மையாலும் அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்; மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள எல்லைகளை அகற்றினேன்; அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்; அரியணையில் வீற்றிருந்தோரை ஒரு காளை மிதிப்பதுபோல் மிதித்துப்போட்டேன். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 14 (ECTA)
குருவிக் கூட்டைக் கண்டுபிடிப்பது போல் என் கை மக்களினங்களின் செல்வங்களைக் கண்டு எடுத்துக்கொண்டது; புறக்கணித்த முட்டைகளை ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல் நாடுகள் யாவற்றையும் ஒருங்கே சேர்த்துக்கொண்டேன். எனக்கெதிராக ஒருவரும் இறக்கை அடிக்கவில்லை. வாய் திறக்கவில்லை, கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை.” [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 15 (ECTA)
வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ? அறுப்பவனைவிடத் தன்னைச் சிறப்புமிக்கதாக வாள் கருத இயலுமோ? தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக் கைத்தடியால் கூடுமோ? மரம் அல்லாத மனிதனைத் தூக்க மரத்தால் ஆன கோலால் இயலுமோ? [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 16 (ECTA)
ஆதலால் தலைவராகிய படைகளின் ஆண்டவர் பாழாக்கும் கொள்ளை நோயை அவனுடைய கொழுத்த வீரர்கள் இடையே அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ் தீ ஒன்றை வைப்பார்; அவர் நெருப்பு மூட்டுவார்; அது கொழுந்துவிட்டு எரியும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 17 (ECTA)
இஸ்ரயேலின் ஒளியானவர் நெருப்பாக மாறுவார்; அதன் தூயவர் தீக்கொழுந்தாய் உருவெடுப்பார்; அது அவனுடைய முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும், ஒரே நாளில் சுட்டெரித்துச் சாம்பலாக்கி விடும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 18 (ECTA)
வனப்புமிக்க அவனுடைய காடுகள், செழிப்புமிக்க அவனுடைய தோட்டங்கள் யாவும் உள்ளும் புறமும் அழிக்கப்படும்; அது நோயாளி ஒருவன் உருக்குலைவதை ஒத்திருக்கும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 19 (ECTA)
அவனது காட்டில் மிகச் சில மரங்களே எஞ்சியிருக்கும்; ஒரு சிறுவன்கூட அவற்றை எண்ணி எழுதிவிடலாம். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 20 (ECTA)
எஞ்சியோரின் மீட்பு அந்நாளில் இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போரும், யாக்கோபின் மக்களில் தப்பிப் பிழைத்தோரும், தங்களை அடித்து நொறுக்கிய நாட்டை இனிச் சார்ந்திருக்க மாட்டார்கள்; மாறாக, இஸ்ரயேலின் தூயவருக்கு உண்மையுள்ளவர்களாய், அவரையே சார்ந்திருப்பார்கள். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 21 (ECTA)
யாக்கோபின் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போர் சிலர் வலிமை மிக்க இறைவனிடம் திரும்பி வருவர். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 22 (ECTA)
இஸ்ரயேலே, இப்பொழுது உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும், அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பி வருவர்; அழிவு நெருங்கி வந்தாயிற்று; அழிவு வருவது தீர்ப்பாயிற்று. பொங்கிவரும் இறைநீதி இதனால் வெளிப்படும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ; உரோ 9:27.. ]
ஏசாயா 10 : 23 (ECTA)
ஏனெனில், என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் தாம் ஆணையிட்டபடியே நாடு முழுவதிலும் அழிவைக் கொண்டு வருவார். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ; உரோ 9:27.. ]
ஏசாயா 10 : 24 (ECTA)
அசீரியாவுக்கு ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பு என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “சீயோனில் வாழ்கின்ற என் மக்களே, எகிப்தியர் முன்பு செய்தது போல் அசீரியன் தடியால் உங்களை அடிக்கும் போதும் கோலை உங்களுக்கு எதிராய் ஓங்கும்போதும் நீங்கள் அஞ்சாதீர்கள்; [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 25 (ECTA)
ஏனெனில் இன்னும் கொஞ்ச காலத்திற்குள் உங்கள் மேல் கொண்ட என் கடும் சினம் தணிந்துவிடும்; அப்பொழுது அசீரியர்களை அழிக்குமாறு அது திசை திரும்பும்”. [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 26 (ECTA)
ஒரே பாறையருகில் முன்பு மிதியானியரை அடித்து வீழ்த்தியது போல், படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார். எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீதுதமது கோலை ஓங்கினதுபோல அவர்களுக்கெதிராய்த் தம் கோலை ஓங்குவார். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 27 (ECTA)
அந்நாளில் நீங்கள் கொழுமையடைவீர்கள்; உங்கள் தோள் மேல் அவன் வைத்த சுமை அகற்றப்படும். உங்கள் கழுத்திலுள்ள அவனது நுகத்தடி உடைத்தெறியப்படும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 28 (ECTA)
பகைவனின் படையெடுப்பு பகைவன் அய்யாத்துக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளான்; அவன் மிக்ரோனைக் கடந்து வந்துவிட்டான்; மிக்மாசிலே தன் மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறான். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 29 (ECTA)
கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள்; கேபாவில் தங்கி இரவைக் கழிக்கின்றார்கள்; இராமா நகரின் மக்கள் அஞ்சி நடுங்குகின்றார்கள்; சவுலின் நகரான கிபயாவிலுள்ள மக்கள் ஓட்டமெடுக்கின்றார்கள். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 30 (ECTA)
பெத்தல்லிம் மக்களே, கூக்குரலிடுங்கள்; இலாயிசா மக்களே, உற்றுக் கேளுங்கள்; அனத்தோத்தின் மக்களே, மறுமொழி கூறுங்கள். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 31 (ECTA)
மத்மேனா மக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்; கேபிமினில் வாழ்வோர் புகலிடம் தேடி ஓடுகிறார்கள். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 32 (ECTA)
இன்றே அப்பகைவன் நோபு நகரில் தங்குவான்; அங்கிருந்து மகள் சீயோனின் மலைக்கும் எருசலேமின் குன்றிற்கும் எதிராகக் கையை ஓங்கி அசைப்பான். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 33 (ECTA)
நம் தலைவராகிய படைகளின் ஆண்டவர் அச்சுறுத்தும் ஆற்றலால், கிளைகளை வெட்டி வீழ்த்துவார்; உயர்ந்தவற்றின் கிளைகள் துண்டிக்கப்படும்; செருக்குற்றவை தாழ்த்தப்படும்; நிமிர்ந்து நிற்பவை தரைமட்டமாக்கப்படும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]
ஏசாயா 10 : 34 (ECTA)
அடர்ந்த காட்டை அவர் கோடரியால் வெட்டி வீழ்த்துவார்; லெபனோன் தன் உயர்ந்த மரங்களுடன் தரையிலே சாயும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13- 15 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34