ஓசியா 6 : 1 (ECTA)
இஸ்ரயேலரின் போலி மனமாற்றம் “வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார்.
ஓசியா 6 : 2 (ECTA)
இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பி விடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்.
ஓசியா 6 : 3 (ECTA)
நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழைபோலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரிபோலவும் அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.
ஓசியா 6 : 4 (ECTA)
எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே!
ஓசியா 6 : 5 (ECTA)
அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளில் அவர்களைக் கொன்று விட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது.
ஓசியா 6 : 6 (ECTA)
உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன். [* மத் 9:13; 12: 7 ]
ஓசியா 6 : 7 (ECTA)
அவர்களோ ஆதாம்* என்ற இடத்தில் உடன்படிக்கையை மீறினார்கள்; அங்கே எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள். [* "ஆதாமைப்போல்" என்பது எபிரேய பாடம்.. ]
ஓசியா 6 : 8 (ECTA)
கிலயாது கொடியோர் நிறைந்த நகர்; அதில் இரத்தக்கறை படிந்துள்ளது.
ஓசியா 6 : 9 (ECTA)
கொள்ளையர் கூட்டம் வழிப்போக்கருக்காகக் காத்திருப்பது போல் குருக்களின் கூட்டம் செக்கேமுக்குப் போகிற வழியில் காத்திருந்து கொலை செய்கின்றது; கொடுமையன்றோ அவர்கள் செய்வது!
ஓசியா 6 : 10 (ECTA)
இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் மிகக் கொடிய செயலொன்றை நான் கண்டேன்; அங்கே எப்ராயிமின் வேசித்தனம் இருந்தது, இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருந்தது.
ஓசியா 6 : 11 (ECTA)
யூதாவே! உனக்கும் அறுவடைக்காலம் ஒன்று குறிக்கப்பட்டிருக்கின்றது. நான் என் மக்களை நன்னிலைக்குத் திரும்பக் கொணரும் போது,

1 2 3 4 5 6 7 8 9 10 11