எபிரேயர் 5 : 1 (ECTA)
துன்புற்ற தலைமைக் குரு தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்.
எபிரேயர் 5 : 2 (ECTA)
அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராயிருக்கிறார்.
எபிரேயர் 5 : 3 (ECTA)
அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். [* லேவி 9: 7 ]
எபிரேயர் 5 : 4 (ECTA)
மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும். [* விப 28: 1 ]
எபிரேயர் 5 : 5 (ECTA)
அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. “நீர் என் மைந்தர்; இன்று நான்
உம்மைப் பெற்றெடுத்தேன்” என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார். [* திபா 2: 7 ]
எபிரேயர் 5 : 6 (ECTA)
இவ்வாறே மற்றோரிடத்தில், “மெல்கிசதேக்கின் முறைப்படி
நீர் என்றென்றும் குருவே” என்றும் கூறப்பட்டுள்ளது. [* திபா 110: 4 ]
எபிரேயர் 5 : 7 (ECTA)
அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். [* மத் 26:36-46; மாற் 14:32-42; லூக் 22:39- 46 ]
எபிரேயர் 5 : 8 (ECTA)
அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
எபிரேயர் 5 : 9 (ECTA)
அவர் நிறைவுள்ளவராகி, தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
எபிரேயர் 5 : 10 (ECTA)
“மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குரு” என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.
எபிரேயர் 5 : 11 (ECTA)
கிறிஸ்தவ வாழ்வில் உறுதி இதைப்பற்றிப் பேசுவதற்கு நிறைய உள்ளது; ஆனால், விளக்கம் கூறுவது அரிது. ஏனெனில், உங்கள் அறிவு மழுங்கிப் போய்விட்டது.
எபிரேயர் 5 : 12 (ECTA)
இவ்வளவு காலத்திற்குள் ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டிய நீங்கள் இன்னும் கடவுளுடைய வாய்மொழிகளின் அரிச்சுவடியையே கற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது பால்தான்; கெட்டியான உணவு அல்ல. * 1 கொரி 3:2..
எபிரேயர் 5 : 13 (ECTA)
பால் குடிக்கும் நிலையில் உள்ளவர் எவரும் குழந்தையே. நீதிநெறிபற்றிய படிப்பினையில் அவர் தேர்ச்சி அற்றவர். * 1 கொரி 3:2..
எபிரேயர் 5 : 14 (ECTA)
முதிர்ச்சி அடைந்தோருக்கு ஏற்றது திட உணவு. அவர்கள் நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14