ஆகாய் 2 : 1 (ECTA)
புதிய கோவிலின் மாண்பு ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளன்று, ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக அருளப்பட்டது:
ஆகாய் 2 : 2 (ECTA)
“யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலிடமும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவிடமும் மக்களுள் எஞ்சியிருப்போர் அனைவரிடமும் இப்பொழுது நீ போய் இவ்வாறு சொல்:
ஆகாய் 2 : 3 (ECTA)
‛இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும் உங்களிடையே இன்னும் இருக்கின்றனரா? இப்போது இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது? இது உங்கள் பார்வையில் ஒன்றும் இல்லாததுபோல் தோன்றுகிறது அல்லவா? [* எஸ்ரா 3: 12 ]
ஆகாய் 2 : 4 (ECTA)
ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடிரு,’ என்கிறார் ஆண்டவர். ‛தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடிரு; நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்; பணியைத் தொடருங்கள்; ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.”
ஆகாய் 2 : 5 (ECTA)
“நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்தபோது உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கின்றது; அஞ்சாதீர்கள். [* விப 29:45- 46 ]
ஆகாய் 2 : 6 (ECTA)
ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ‛இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலைநிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன். [* எபி 12: 26 ]
ஆகாய் 2 : 7 (ECTA)
வேற்றினத்தார் அனைவரையும் நிலைக்குலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்; இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.
ஆகாய் 2 : 8 (ECTA)
‛வெள்ளி எனக்கு உரியது, பொன்னும் எனக்கு உரியது’, என்கிறார் படைகளின் ஆண்டவர்.
ஆகாய் 2 : 9 (ECTA)
‛இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்’, என்கிறார் படைகளின் ஆண்டவர். ‛இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்’, என்கிறார் படைகளின் ஆண்டவர்.”
ஆகாய் 2 : 10 (ECTA)
இறைவாக்கினர் குருக்களிடம் ஆலோசனை கேட்டல் தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஒன்பதாம் மாதம், இருபத்து நான்காம் நாள், இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
ஆகாய் 2 : 11 (ECTA)
“படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: குருக்களிடம் சென்று இவற்றிற்குத் திருச்சட்டத் தீர்ப்பைக் கேள்:
ஆகாய் 2 : 12 (ECTA)
“ஒருவன் தனது மேலாடையின் மடிப்பில் அர்ப்பணிக்கப்பட்ட இறைச்சியை எடுத்துக்கொண்டு போகும் பொழுது, அத்துணியின் மடிப்பு அப்பத்தையோ இறைச்சியையோ திராட்சை இரசத்தையோ எண்ணெயையோ வேறெந்த உணவுப்பொருளையோ தொட்டால், அவையும் அர்ப்பணிக்கப்பட்டவை ஆகுமா?” அதற்குக் குருக்கள், “இல்லை” என்று விடை கூறினர்.
ஆகாய் 2 : 13 (ECTA)
மீண்டும் ஆகாய், “பிணத்தைத் தொட்டதால் தீட்டுப்பட்ட ஒருவன் இவற்றுள் ஒன்றைத் தொட்டால் அதுவும் தீட்டப்பட்டது ஆகுமா?” என்று கேட்டார். அதற்குக் குருக்கள், “ஆம், தீட்டுப்பட்டது ஆகும்” என்றனர். * எண் 19:11-22..
ஆகாய் 2 : 14 (ECTA)
தொடர்ந்து ஆகாய் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “அதேபோலத்தான் எனது திருமுன் இந்த மக்களும் இந்த இனத்தாரும்,” என்கிறார் ஆண்டவர். அவ்வாறே அவர்களது உழைப்பின் பயன் ஒவ்வொன்றும் இருக்கிறது. அவர்கள் அங்கே கொண்டு வந்து படைக்கும் பொருளும் தீட்டுப்பட்டதே.
ஆகாய் 2 : 15 (ECTA)
ஆண்டவர் ஆசி வழங்குவதாக வாக்களித்தல் இன்றுவரை நிகழ்ந்ததை இப்பொழுது நினைத்துப் பாருங்கள். ஆண்டவரது கோவிலில் கல்லின்மேல் கல் வைக்கப்படுமுன் நீங்கள் இருந்த நிலை என்ன?
ஆகாய் 2 : 16 (ECTA)
தானியக் குவியலில் இருபது மரக்கால் இருக்கும் என எண்ணி நீங்கள் வந்து பார்க்கையில் பத்துதான் இருந்தது; ஐம்பது குடம் இரசம் எடுக்க ஆலைக்கு வந்தபோது இருபதுதான் இருந்தது.
ஆகாய் 2 : 17 (ECTA)
‛உங்களையும் உங்கள் உழைப்பின் பயனையும் வெப்பு நோயாலும் நச்சுப் பனியாலும் கல்மழையாலும் வதைத்தேன்; ஆயினும் நீங்கள் என்னிடம் திரும்பி வரவில்லை’, என்கிறார் ஆண்டவர்.
ஆகாய் 2 : 18 (ECTA)
ஒன்பதாம் மாதத்தின் இருபத்து நான்காம் நாளாகிய இன்று ஆண்டவரின் கோவிலுக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது. இனிமேல் நிகழப்போவது என்ன என்பதைக் கவனமாய்ப் பாருங்கள்.
ஆகாய் 2 : 19 (ECTA)
விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்துவிடுமோ? திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ? இன்று முதல் உங்களுக்கு நான் ஆசி வழங்குவேன்.
ஆகாய் 2 : 20 (ECTA)
செருபாபேலுக்கு வாக்குறுதி மாதத்தின் இருபத்து நான்காம் நாள் ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறையாக ஆகாய்க்கு அருளப்பட்டது:
ஆகாய் 2 : 21 (ECTA)
“யூதாவின் ஆளுநனாகிய செருபாபேலிடம் இவ்வாறு சொல்: ‛நான் விண்ணுலகையும் மண்ணுலகையும் ஒருங்கே அசைக்கப் போகிறேன்;
ஆகாய் 2 : 22 (ECTA)
அரசுகளின் அரியணையைக் கவிழ்க்கப்போகிறேன்; வேற்றினத்து அரசுகளின் வலிமையை ஒழிப்பேன்; தேர்களையும் அவற்றில் இருப்போரையும் வீழ்த்துவேன்; குதிரைகளும் குதிரை வீரர்களும் ஒருவர் மற்றவரது வாளுக்கு இரையாவர்.’
ஆகாய் 2 : 23 (ECTA)
படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: ‘அந்நாளில் செயல்தியேலின் மகனும் என் ஊழியனுமான செருபாபேலே! உன்னைத் தேர்ந்தெடுப்பேன்,’ என்கிறார் ஆண்டவர். ‘உன்னை என் அரச இலச்சினையாய் அணிந்துகொள்வேன். ஏனெனில் உன்னையே நான் தெரிந்து கொண்டேன்,’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.”

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23