அபகூக் 1 : 1 (ECTA)
இறைவாக்கினர் அபக்கூக்கு கண்ட காட்சியில் அருளப்பட்ட இறைவாக்கு:
அபகூக் 1 : 2 (ECTA)
அநீதி குறித்து அபக்கூக்கின் முறையீடு ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?
அபகூக் 1 : 3 (ECTA)
நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும் வாதும் எழும்புகின்றன.
அபகூக் 1 : 4 (ECTA)
ஆதலால் திருச்சட்டம் வலுவற்று பயனற்றுப் போகின்றது. நீதி ஒருபோதும் வெளிப்படுவதில்லை. கொடியோர் நேர்மையுள்ளோரை வளைத்துக் கொள்கின்றனர். ஆகவே நீதி தடம்புரண்டு காணப்படுகின்றது.
அபகூக் 1 : 5 (ECTA)
ஆண்டவரின் பதிலுரை நீங்கள் உங்களைச் சூழ்ந்துள்ள வேற்றினத்தாரைக் கூர்ந்து கவனியுங்கள்; கவனித்து வியப்பும் திகைப்பும் அடையுங்கள்; ஏனெனில் உங்கள் வாழ்நாளில் நான் செயல் ஒன்றைச் செய்திடுவேன்; விளக்கிச் சொன்னாலும் அதை நீங்கள் நம்பமாட்டீர்கள். [* திப 13: 41 ]
அபகூக் 1 : 6 (ECTA)
நான் கல்தேயர் இனத்தை எழுப்பவிருக்கிறேன்; அது பரபரப்பும் கொடுமையும் உடைய இனம்; தங்களுக்குச் சொந்தமில்லாத இருப்பிடங்களைக் கவர, உலகின் ஒரு முனை முதல் மறுமுனைவரை சுற்றித் திரியும் இனம். [* 2 அர 24: 2 ]
அபகூக் 1 : 7 (ECTA)
அவர்கள் அச்சமும் திகிலும் உண்டாக்குகின்றவர்கள்; தங்களுடைய நீதியையும் பெருமையையும் தாங்களே உருவாக்குகின்றவர்கள்.
அபகூக் 1 : 8 (ECTA)
வேங்கையைவிட அவர்களின் குதிரைகள் விரைவாய் ஓடுகின்றன; அவை மாலை வேளையில் திரியும் ஓநாய்களைவிடக் கொடியவை; அவர்களுடைய குதிரை வீரர்கள் பாய்ந்து வருகின்றார்கள்; இரைமேல் பாயும் கழுகைப்போல் பறந்து வருகின்றார்கள்.
அபகூக் 1 : 9 (ECTA)
அவர்கள் யாவரும் வன்முறை செய்யவே முன்னேறி வருகின்றார்கள்; அவர்கள் முன்னேறும்போது எல்லாரும் கலங்கித் திகைக்கின்றார்கள். மணல்போல எண்ணற்ற மக்களைச் சிறைப்படுத்துகின்றார்கள்.
அபகூக் 1 : 10 (ECTA)
அரசர்களை அவர்கள் ஏளனம் செய்கின்றார்கள்; அதிகாரிகளை எள்ளி நகையாடுகின்றார்கள்; அரண்களை எல்லாம் பார்த்து நகைக்கின்றார்கள்; மண்மேடுகளை எழுப்பி அவற்றைப் பிடிக்கின்றார்கள்.
அபகூக் 1 : 11 (ECTA)
அவர்கள் காற்றைப்போல் விரைவாகக் கடந்து போகின்றார்கள்; மறைந்து விடுகின்றார்கள். தங்கள் வலிமையைக் கடவுளாகக் கருதியதே அவர்கள் செய்த குற்றம்.
அபகூக் 1 : 12 (ECTA)
அபக்கூக்கு மீண்டும் முறையிடுகிறார் ஆண்டவரே, என் கடவுளே, என் தூயவரே தொன்று தொட்டே இருப்பவர் நீர் அல்லவா? நீர்* சாவைக் காண்பதில்லை; ஆண்டவரே, அவர்களை எங்கள் தண்டனைத் தீர்ப்பாய் ஏற்படுத்தியவர் நீரே; புகலிடமே, எங்களைச் சாடும் சாட்டையாய் அவர்களை ஆக்கியவரும் நீரே [ ‘நாங்கள்’ என்பது எபிரேய பாடம்.. ]
அபகூக் 1 : 13 (ECTA)
தீமையைக் காண நாணும் தூய கண்களை உடையவரே, கொடுமையைப் பார்க்கத் தாங்காதவரே, கயவர்களை நீர் ஏன் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்? பொல்லாதவர் தம்மைவிட நேர்மையாளரை விழுங்கும்போது நீர் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்?
அபகூக் 1 : 14 (ECTA)
நீர் மானிடரைக் கடல் மீன்கள் போலும் தலைமை இல்லா ஊர்வனபோலும் நடத்துகின்றீர்.
அபகூக் 1 : 15 (ECTA)
கல்தேய இனத்தார் மற்றெல்லாரையும் தூண்டிலால் பிடிக்கின்றார்கள்; வலையால் வாரி இழுக்கின்றார்கள்; தங்கள் பறியிலே சேர்த்துக்கொண்டு அகமகிழ்ந்து களிப்புறுகின்றார்கள்.
அபகூக் 1 : 16 (ECTA)
ஆதலால், தங்கள் வலைக்குப் பலி செலுத்துகின்றார்கள்; பறிக்குத் தூபம் காட்டுகின்றார்கள்; ஏனெனில் அவற்றாலேயே இன்பமான வாழ்வை அடைகின்றார்கள்; அறுசுவை உணவைப் பெறுகின்றார்கள்.
அபகூக் 1 : 17 (ECTA)
அப்படியானால், அவர்கள் தங்கள் வலையில் இருப்பவற்றை ஓயாமல் வெளியே கொட்டி மக்களினங்களை இரக்கமின்றி இடைவிடாமல் கொன்று குவிக்கவும் வேண்டுமோ?
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17