ஆதியாகமம் 5 : 1 (ECTA)
ஆதாமின் வழிமரபினர்
(1 குறி 1:1-4) ஆதாமின் வழிமரபின் அட்டவணை பின்வருமாறு: கடவுள் மனிதரைப் படைத்தபொழுது அவர்களைத் தம் சாயலில் உருவாக்கினார். [* தொநூ 1:27- 28 ]
ஆதியாகமம் 5 : 2 (ECTA)
ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, ‘மனிதர்’ என்று பெயரிட்டார். [* தொநூ 1:27- 28 ; மத் 19:4; மாற் 10: 6. ]
ஆதியாகமம் 5 : 3 (ECTA)
ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது, அவனுக்கு அவன் சாயலிலும் உருவிலும் மகன் ஒருவன் பிறந்தான்; அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 5 : 4 (ECTA)
சேத்து பிறந்தபின் ஆதாம் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். ஆதாமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 5 (ECTA)
மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் ஆதாம் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 6 (ECTA)
சேத்துக்கு நூற்றைந்து வயதானபோது அவனுக்கு ஏனோசு பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 7 (ECTA)
ஏனோசு பிறந்தபின் சேத்து எண்ணூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். சேத்துக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 8 (ECTA)
மொத்தம் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தபின் சேத்து இறந்தான்.
ஆதியாகமம் 5 : 9 (ECTA)
ஏனோசுக்குத் தொண்ணூறு வயதானபோது அவனுக்குக் கேனான் பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 10 (ECTA)
கேனான் பிறந்தபின் ஏனோசு எண்ணூற்றுப் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 11 (ECTA)
மொத்தம் தொள்ளாயிரத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தபின் ஏனோசு இறந்தான்.
ஆதியாகமம் 5 : 12 (ECTA)
கேனானுக்கு எழுபது வயதான போது, அவனுக்கு மகலலேல் பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 13 (ECTA)
மகலலேல் பிறந்த பின் கேனான் எண்ணூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 14 (ECTA)
மொத்தம் தொள்ளாயிரத்துப் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின் கேனான் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 15 (ECTA)
மகலலேலுக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு எரேது பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 16 (ECTA)
எரேது பிறந்தபின் மகலலேல் எண்ணூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். மகலலேலுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 17 (ECTA)
மொத்தம் எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் மகலலேல் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 18 (ECTA)
எரேதுக்கு நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, அவனுக்கு ஏனோக்கு பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 19 (ECTA)
ஏனோக்கு பிறந்தபின் எரேது எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். எரேதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 20 (ECTA)
மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் எரேது இறந்தான்.
ஆதியாகமம் 5 : 21 (ECTA)
ஏனோக்குக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 22 (ECTA)
மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 23 (ECTA)
ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான்.
ஆதியாகமம் 5 : 24 (ECTA)
ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார். [* எபி 11:5; யூதா 14 ]
ஆதியாகமம் 5 : 25 (ECTA)
மெத்துசேலாவுக்கு நூற்று எண்பத்தேழு வயதானபோது அவனுக்கு இலாமேக்கு பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 26 (ECTA)
இலாமேக்கு பிறந்தபின், மெத்துசேலா எழுநூற்று எண்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான். மெத்துசேலாவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 27 (ECTA)
மெத்துசேலா மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 28 (ECTA)
இலாமேக்கிற்கு நூற்று எண்பத்திரண்டு வயதானபோது, அவனுக்கு மகன் ஒருவன் பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 29 (ECTA)
அவன் “ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறுதல் அளிப்பான்” என்று சொல்லி அவனுக்கு ‘நோவா’* என்று பெயரிட்டான். * எபிரேயத்தில், ‘ஆறுதல்’ என்பது பொருள்..
ஆதியாகமம் 5 : 30 (ECTA)
நோவா பிறந்தபின் இலாமேக்கு ஐந்நூற்றுத்தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். இலாமேக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 31 (ECTA)
இலாமேக்கு மொத்தம் எழுநூற்று எழுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 32 (ECTA)
நோவாவிற்கு ஐந்நூறு வயதானபோது, அவருக்குச் சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32