ஆதியாகமம் 49 : 1 (ECTA)
யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழவிருப்பதை நான் அறிவிக்கப் போகிறேன்.
ஆதியாகமம் 49 : 2 (ECTA)
கூடிவந்து உற்றுக்கேளுங்கள்; யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.
ஆதியாகமம் 49 : 3 (ECTA)
ரூபன்! நீயே என் தலைமகன்; என் ஆற்றல் நீயே; என் ஆண்மையின் முதற்கனி நீயே; மாண்பிலும் வலிமையிலும் முதன்மை பெற வேண்டியவனும் நீயே!
ஆதியாகமம் 49 : 4 (ECTA)
ஆனால், நீரைப்போல் நிலையற்றவனாய், முதன்மையைப் பெறமாட்டாய் . ஏனெனில் உன் தந்தையின் மஞ்சத்தில் ஏறினாய்; ஆம், என் படுக்கையைத் தீட்டுப்படுத்தினாய்.
ஆதியாகமம் 49 : 5 (ECTA)
சிமியோன், லேவி இருவரும் உண்மையில் உடன் பிறப்புகளே! அவர்களுடைய வாள்கள் வன்முறையின் கருவிகள்!
ஆதியாகமம் 49 : 6 (ECTA)
மனமே, அவர்களது மன்றத்தினுள் நுழையாதிரு! மாண்பே, அவர்களது அவையினுள் அமராதிரு! ஏனெனில் கோப வெறி கொண்டு அவர்கள் மனிதர்களைக் கொன்று குவித்தார்கள். வீம்புக்கென்று அவர்கள் எருதுகளை வெட்டி வதைத்தார்கள்.
ஆதியாகமம் 49 : 7 (ECTA)
அவர்களது கடுமையான சினம் சபிக்கப்படும். அவர்களது கொடுமையான கோபம் சபிக்கப்படும். அவர்களை யாக்கோபினின்று பிரிந்து போகச் செய்வேன். அவர்களை இஸ்ரயேலினின்று சிதறடிப்பேன்.
ஆதியாகமம் 49 : 8 (ECTA)
யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர்.
ஆதியாகமம் 49 : 9 (ECTA)
யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென, அவன் கால் மடக்கிப் படுப்பான்; அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்? [* எண் 24:9; திவெ 5: 5 ]
ஆதியாகமம் 49 : 10 (ECTA)
அரசுரிமை உடையவர் வரும்வரையில் மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபை விட்டுக் கொற்றம் மறையாது.
ஆதியாகமம் 49 : 11 (ECTA)
அவன் திராட்சைக் செடியில் தன் கழுதையையும், செழுமையான திராட்சைக் கொடியில் தன் கழுதைக் குட்டியையும் கட்டுவான். திராட்சை இரசத்தில் தன் உடையையும் திராட்சைச் சாற்றில் தன் மேலாடையையும் தோய்த்திடுவான்.
ஆதியாகமம் 49 : 12 (ECTA)
அவன் கண்கள் திராட்சை இரசத்தினும் ஒளியுள்ளவை; அவன் பற்கள் பாலினும் வெண்மையானவை.
ஆதியாகமம் 49 : 13 (ECTA)
செபுலோன், கடற்கரையில் வாழ்ந்திடுவான்; அவன் கப்பல் துறையில் இருந்திடுவான்; அவனது எல்லை சீதோன் வரை பரவியிருக்கும்.
ஆதியாகமம் 49 : 14 (ECTA)
இசக்கார், இரு பொதியின் நடுவே படுத்திருக்கும் வலிமைமிகு கழுதை போன்றவன்.
ஆதியாகமம் 49 : 15 (ECTA)
அவன் இளைப்பாறும் இடம் நல்லதென்றும் நாடு மிக வசதியானதென்றும் காண்பான்; எனவே சுமை தூக்கத் தோள் சாய்ப்பான். அடிமை வேலைக்கு இணங்கிடுவான்.
ஆதியாகமம் 49 : 16 (ECTA)
தாண், இஸ்ரயேலின் குலங்களில் ஒன்றாக, தன் மக்களுக்கு நீதி வழங்குவான்.
ஆதியாகமம் 49 : 17 (ECTA)
தாண், வழியில் கிடக்கும் பாம்பு ஆவான்; அவன் பாதையில் தென்படும் நாகம் போல, குதிரைமேல் இருப்பவன் மல்லாந்து விழும்படி அதன் குதிங்காலைக் கடித்திடுவான்.
ஆதியாகமம் 49 : 18 (ECTA)
ஆண்டவரே! உமது மீட்பிற்காகக் காத்திருக்கிறேன்.
ஆதியாகமம் 49 : 19 (ECTA)
காத்து, கொள்ளைக் கூட்டத்தின் தாக்குதலுக்கு உள்ளாவான். அவனும் அவர்களைத் துரத்தித் தாக்கிடுவான்.
ஆதியாகமம் 49 : 20 (ECTA)
ஆசேரின் நிலம் ஊட்ட மிக்க உணவளிக்கும். மன்னனும் விரும்பும் உணவை அவன் அளித்திடுவான்.
ஆதியாகமம் 49 : 21 (ECTA)
நப்தலி, அழகிய மான்குட்டிகளை ஈனும் கட்டவிழ்ந்த பெண்மான் ஆவான்.
ஆதியாகமம் 49 : 22 (ECTA)
யோசேப்பு, கனிதரும் கொடி ஆவான்; நீரூற்றருகில் மதில்மேல் படரும் கொடிபோல் கனி தருவான்.
ஆதியாகமம் 49 : 23 (ECTA)
அவனுக்கு வில்லில் வல்லார் தொல்லை கொடுத்தார்; அவன்மீது அம்பெய்தார்; அவனிடம் பகை வளர்த்தார்.
ஆதியாகமம் 49 : 24 (ECTA)
ஆனால், அவனது வில் உறுதியாய் நின்றது; அவனுடைய புயங்கள் துடிப்புடன் இயங்கின; ஏனெனில், யாக்கோபின் வலியவர் கைகொடுத்தார். இஸ்ரயேலின் பாறையே ஆயராய் இருந்தார்.
ஆதியாகமம் 49 : 25 (ECTA)
உன் தந்தையின் இறைவனே உனக்குத் துணையிருப்பார்; எல்லாம் வல்லவரே உனக்கு ஆசி வழங்குவார்; மேலே வானத்தினின்று வரும் ஆசியாலும் கீழே ஆழத்தினின்று வரும் ஆசியாலும் கொங்கைகளுக்கும் கருப்பைகளுக்கும் உரிய ஆசியாலும் அவர் உனக்கு ஆசி வழங்குவார்.
ஆதியாகமம் 49 : 26 (ECTA)
உன் தந்தையின் ஆசிகள், பழம் பெரும் மலைகளின் ஆசியிலும், என்றுமுள குன்றுகளின் வள்ளன்மையிலும், வலியவை; இவை அனைத்தும் யோசேப்பின் மீது இறங்கிடுக! தன் சகோதரரின் இளவரசனாய்த் திகழ்வோனின் நெற்றியில் அவை துலங்கிடுக!
ஆதியாகமம் 49 : 27 (ECTA)
பென்யமின், பீறிக்கிழிக்கும் ஓநாய்க்கு ஒப்பானவன்; காலையில் வேட்டையாடிய இரையை அவன் விழுங்குவான்; மாலையில், கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வான்”.
ஆதியாகமம் 49 : 28 (ECTA)
இவர்கள் அனைவரும் இஸ்ரயேலின் பன்னிரு குலத்தார் ஆவர். இவற்றை மொழிந்து இவர்களின் தந்தை இவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய ஆசியை அளித்து வாழ்த்துரை வழங்கினார்.
ஆதியாகமம் 49 : 29 (ECTA)
யாக்கோபின் இறப்பு மேலும், அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “இதோ நான் என் இனத்தவரோடு சேர்க்கப்படவிருக்கிறேன். என்னை என் தந்தையருடன் இத்தியனான எப்ரோனின் நிலத்திலுள்ள குகையில் அடக்கம் செய்யுங்கள்.
ஆதியாகமம் 49 : 30 (ECTA)
அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு அருகேயுள்ள மக்பேலாவின் நிலத்தில் அமைந்துள்ளது. ஆபிரகாம் இத்தியனான எப்ரோனிடமிருந்து அந்த நிலத்தைக் கல்லறை நிலத்திற்கென விலைக்கு வாங்கினார். [* தொநூ 23:3- 20 ]
ஆதியாகமம் 49 : 31 (ECTA)
அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம் செய்தனர்; அங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம் செய்தனர். அங்கே தான் நானும் லேயாவை அடக்கம் செய்துள்ளேன். [* தொநூ 25:9-10; 35: 29 ]
ஆதியாகமம் 49 : 32 (ECTA)
அந்நிலமும் அக்கல்லறையும் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றவை.”
ஆதியாகமம் 49 : 33 (ECTA)
யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளைகளை வழங்கி முடித்தபின், தம் கால்களைப் படுக்கையினுள் மடக்கிக்கொண்டு உயிர் நீத்து, தம் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார். * திப 7:15..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33