ஆதியாகமம் 46 : 1 (ECTA)
யாக்கோபு தம் குடும்பத்துடன் எகிப்து செல்லல் பின்பு, இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார்.
ஆதியாகமம் 46 : 2 (ECTA)
அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, “யாக்கோபு! யாக்கோபு!” என்று அழைத்தார். அவர், “இதோ அடியேன்” என்றார்.
ஆதியாகமம் 46 : 3 (ECTA)
கடவுள், “உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே, எகிப்திற்குச் செல்ல நீ அஞ்ச வேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன்.
ஆதியாகமம் 46 : 4 (ECTA)
நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன். உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்” என்றார்.
ஆதியாகமம் 46 : 5 (ECTA)
யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார். இஸ்ரயேலின் புதல்வர்கள் தம் தந்தையாகிய யாக்கோபையும் தங்கள் பிள்ளைகளையும் மனைவியரையும் அவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக் கொண்டனர்.
ஆதியாகமம் 46 : 6 (ECTA)
கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும் சேகரித்துக் கொண்டனர். இவ்வாறு, யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார். [* திப 7: 15 ]
ஆதியாகமம் 46 : 7 (ECTA)
தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்.
ஆதியாகமம் 46 : 8 (ECTA)
எகிப்திற்கு வந்துசேர்ந்த யாக்கோபும் அவர் புதல்வர்களுமாகிய இஸ்ரயேலரின் பெயர்கள் பின்வருமாறு; யாக்கோபின் தலைமகன் ரூபன்.
ஆதியாகமம் 46 : 9 (ECTA)
ரூபனின் புதல்வர்கள்; அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.
ஆதியாகமம் 46 : 10 (ECTA)
சிமியோனின் புதல்வர்; எமுவேல், யாமின், ஒகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல்.
ஆதியாகமம் 46 : 11 (ECTA)
லேவியின் புதல்வர்; கெர்சோன், கோகாத்து, மெராரி.
ஆதியாகமம் 46 : 12 (ECTA)
யூதாவின் புதல்வர்; ஏரு , ஓனான், சேலா, பெரேட்சு, செராகு. இவர்களுள் ஏரும் ஓனானும் கானான் நாட்டில் இறந்து போயினர். எட்சரோன், ஆமூல் என்பவர்கள் பெரேட்சுக்குப் பிறந்த புதல்வர்கள்.
ஆதியாகமம் 46 : 13 (ECTA)
இசக்காரின் புதல்வர்; தோலா, பூவா, யாசூபு, சிம்ரோன்.
ஆதியாகமம் 46 : 14 (ECTA)
செபுலோனின் புதல்வர்; செரேது, ஏலோன், யாகுலவேல்.
ஆதியாகமம் 46 : 15 (ECTA)
இவர்கள் லேயாவின் பிள்ளைகள். இவர் இவர்களையும் தீனா என்ற மகளையும் பதான் அராமில் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தார். லேயா வழிவந்த அவர் புதல்வர், புதல்வியர் மொத்தம் முப்பத்துமூன்றுபேர்.
ஆதியாகமம் 46 : 16 (ECTA)
காத்தின் புதல்வர். சிபியோன், அக்கி, சூனி, எட்சபோன், ஏரீ, அரோதி, அரேலி.
ஆதியாகமம் 46 : 17 (ECTA)
ஆசேரின் புதல்வர்; இம்னா, இசுவா, இசுவி, பெரியா. இவர்களுடைய சகோதரி செராகு. பெரியாவின் புதல்வர்; எபேர், மல்கியேல்.
ஆதியாகமம் 46 : 18 (ECTA)
இவர்கள் லாபான் தன் மகள் லேயாவுக்குக் கொடுத்த சில்பாவின் பிள்ளைகள். இவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் இந்தப் பதினாறுபேர்.
ஆதியாகமம் 46 : 19 (ECTA)
யோசேப்பு, பென்யமின் என்பவர் யாக்கோபின் மனைவி ராகேலின் புதல்வர்.
ஆதியாகமம் 46 : 20 (ECTA)
யோசேப்பிற்கு எகிப்து நாட்டில் புதல்வர் பிறந்தனர். ஓன் நகர் அர்ச்சகர் போற்றி பெராவின் மகளான அசினத்து அவர்களை அவருக்குப் பெற்றெடுத்தாள். அவர்கள் மனாசே, எப்ராயீம் ஆவர்.
ஆதியாகமம் 46 : 21 (ECTA)
பென்யமினின் புதல்வர்; பேலா, பெக்கேர், அசுபேல், கேரா, நாகமான், ஏகி, ரோசு, முப்பிம், குப்பிம், அருது.
ஆதியாகமம் 46 : 22 (ECTA)
ராகேல் வழிவந்த யாக்கோபின் புதல்வர் மொத்தம் பதினான்கு பேர்.
ஆதியாகமம் 46 : 23 (ECTA)
தாணின் மகன், ஆசும்.
ஆதியாகமம் 46 : 24 (ECTA)
நப்தலியின் புதல்வர்; யாகுட்சேல், கூனி, ஏட்சேர், சில்லேம்.
ஆதியாகமம் 46 : 25 (ECTA)
இவர்கள் லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த பில்காவின் பிள்ளைகள். இவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் மொத்தம் ஏழுபேர்.
ஆதியாகமம் 46 : 26 (ECTA)
யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர அவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர். [* தொநூ 41:50- 52 ]
ஆதியாகமம் 46 : 27 (ECTA)
எகிப்து நாட்டில் யோசேப்பிற்குப் பிறந்த புதல்வர்களோ இருவர். ஆகவே, எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர். * தொநூ 7:14..
ஆதியாகமம் 46 : 28 (ECTA)
எகிப்தில் யாக்கோபின் குடும்பம் கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள்.
ஆதியாகமம் 46 : 29 (ECTA)
யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு தம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச் சென்றார். யோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன் அவரை அரவணைத்து அவர் தோளில் சாய்ந்து கொண்டு வெகுநேரம் அழுதார்.
ஆதியாகமம் 46 : 30 (ECTA)
அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம், “இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடு தான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!” என்றார்.
ஆதியாகமம் 46 : 31 (ECTA)
பின்னர், யோசேப்பு தம் சகோதரரையும் தம் தந்தையின் குடும்பத்தாரையும் நோக்கி, “நான் பார்வோனிடம் போய், ‘கானான் நாட்டிலிருந்து என் சகோதரரும், என் தந்தையின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள்.
ஆதியாகமம் 46 : 32 (ECTA)
அவர்கள் மந்தை மேய்ப்பவர்கள். மந்தைகளை வைத்துப் பேணுவது அவர்கள் தொழில். அவர்கள் தங்கள் ஆடு மாடுகளையும் தங்களுக்குச் சொந்தமான யாவற்றையும் தங்களுடன் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று அவருக்குத் தெரிவிப்பேன்.
ஆதியாகமம் 46 : 33 (ECTA)
பார்வோன் உங்களை வரவழைத்து, “உங்கள் தொழில் என்ன?” என்று கேட்கும்பொழுது,
ஆதியாகமம் 46 : 34 (ECTA)
நீங்கள் மறுமொழியாக, “எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரை உம் பணியாளர்களாகிய நாங்கள் எங்கள் மூதாதையரைப்போல் மேய்ப்பவர்களாய் இருக்கிறோம்” என்று சொல்லுங்கள். நீங்கள் கோசேன் பகுதியில் குடியிருக்கும்படி அனுமதிக்கப்படுவீர்கள். ஏனெனில், ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் எகிப்தியருக்கு அருவருப்பானவர்கள்” என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34