ஆதியாகமம் 36 : 1 (ECTA)
ஏசாவின் வழிமரபினர்
(1 குறி 1:34-37)
ஏதோம் என்ற ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே.
ஆதியாகமம் 36 : 2 (ECTA)
ஏசா கானான் நாட்டுப் பெண்களில் இத்தியன் ஏலோனின் மகள் ஆதாவையும் இவ்வியன் சிபெயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமாவையும், [* தொநூ 26: 34 ]
ஆதியாகமம் 36 : 3 (ECTA)
இஸ்மயேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பாசமத்தையும் மணந்து கொண்டார். * தொநூ 28:9..
ஆதியாகமம் 36 : 4 (ECTA)
ஏசாவுக்கு ஆதா எலிப்பாசைப் பெற்றெடுத்தாள். பாசமத்து இரகுவேலைப் பெற்றெடுத்தாள்.
ஆதியாகமம் 36 : 5 (ECTA)
ஒகோலி பாமா எயூசு, யாலாம், கோராகு ஆகியோரைப் பெற்றெடுத்தாள். இவர்கள் ஏசாவுக்குக் கானான் நாட்டில் பிறந்த புதல்வர்கள்.
ஆதியாகமம் 36 : 6 (ECTA)
பின்னர், ஏசா தம் மனைவியர், புதல்வர், புதல்வியர், தம் வீட்டைச் சேர்ந்தவர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு, தம் மந்தைகள், கால்நடைகள், கானான் நாட்டில் சேர்த்திருந்த உடைமைகள் யாவற்றோடும் தம் சகோதரன் யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனார்.
ஆதியாகமம் 36 : 7 (ECTA)
ஏனெனில், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாத அளவு அவர்களுடைய உடைமைகள் பெருகிவிட்டன. அவர்கள் தங்கியிருந்த நிலம் அவர்களுடைய மந்தைகளுக்குப் போதாதிருந்தது.
ஆதியாகமம் 36 : 8 (ECTA)
ஆகையால், ஏசா என்ற ஏதோம் சேயிர் என்ற மலைநாட்டிற்குச் சென்று குடியேறினார்.
ஆதியாகமம் 36 : 9 (ECTA)
சேயிர் மலைநாட்டில் வாழும் ஏதோமியரின் மூதாதையாகிய ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே.
ஆதியாகமம் 36 : 10 (ECTA)
ஏசாவின் புதல்வர்கள் பெயர்களாவன; ஏசாவின் மனைவி ஆதாவின் மகன் எலிப்பாசு, அவருடைய இரண்டாம் மனைவியான பாசமத்தின் மகன் இரகுவேல்.
ஆதியாகமம் 36 : 11 (ECTA)
எலிப்பாசின் புதல்வர்கள்; தேமான், ஓமார், செப்போ, காத்தாம், கெனாசு.
ஆதியாகமம் 36 : 12 (ECTA)
ஏசாவின் மகன் எலிப்பாசின் மறுமனைவி திம்னா எலிப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள். இவர்களே ஏசாவின் மனைவி ஆதாவின் பேரப் பிள்ளைகள்.
ஆதியாகமம் 36 : 13 (ECTA)
இரகுவேலின் புதல்வர்கள்; நகத்து, செராகு, சம்மா, மிசா. இவர்களே ஏசாவின் மனைவி பாசமத்தின் பேரப்பிள்ளைகள்.
ஆதியாகமம் 36 : 14 (ECTA)
சிபயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமா ஏசாவுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள்; எயுசு, யாலாம், கோராகு.
ஆதியாகமம் 36 : 15 (ECTA)
ஏசாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்; ஏசாவின் தலைமகன் எலிப்பாசின் புதல்வர்களான தேமான், ஒமார், செப்போ, கெனாசு.
ஆதியாகமம் 36 : 16 (ECTA)
கோராகு, காத்தாம், அமலேக்கு ஆகிய இவர்கள் அனைவரும் எலிப்பாசுக்குப் பிறந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள். இவர்களே ஆதாவின் பேரப்பிள்ளைகள்.
ஆதியாகமம் 36 : 17 (ECTA)
ஏசாவின் மகன் இரகுவேலின் புதல்வர்களுள் தலைவர்களாயிருந்தவர்கள்; நகத்து, செராகு, சம்மா, மிசா. இவர்களே இரகுவேலின் புதல்வர்கள், ஏசாவின் மனைவி பாசுமத்தின் பேரப்பிள்ளைகள். இவர்கள் இரகுவேலின் வழிவந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள்.
ஆதியாகமம் 36 : 18 (ECTA)
ஏசாவின் மனைவி ஒகோலிபாமாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்; எயுசு, யாலாம், கோராகு. இவர்கள் அனாவின் மகளும் ஏசாவின் மனைவியுமான ஒகோலிபாமா வழிவந்த தலைவர்கள்.
ஆதியாகமம் 36 : 19 (ECTA)
இவர்களே ஏதோம் எனப்பட்ட ஏசாவின் புதல்வர்களும், அந்த இனத்தின் தலைவர்களும் ஆவர்.
ஆதியாகமம் 36 : 20 (ECTA)
சேயிரின் வழிமரபினர்
(1 குறி 1:38-42)
அந்த நாட்டில் குடியிருந்த ஓரியனான சேயிரின் புதல்வர்கள்; லோத்தான், சோபால், சிபயோன், அனா,
ஆதியாகமம் 36 : 21 (ECTA)
தீசோன், ஏட்சேர், தீசான். இவர்களே ஏதோம் நாட்டிலிருந்த சேயிரின் மக்களாகிய ஓரியரின் தலைவர்கள்.
ஆதியாகமம் 36 : 22 (ECTA)
லோத்தானின் புதல்வர்கள் இவர்களே; ஓரி, ஏமாம். லோத்தானின் சகோதரி திம்னா.
ஆதியாகமம் 36 : 23 (ECTA)
சோபாலின் புதல்வர்கள் இவர்களே; அல்வான், மானகத்து, ஏபால், செப்போ, ஓனாம்.
ஆதியாகமம் 36 : 24 (ECTA)
சிபயோனின் புதல்வர்கள் இவர்களே; அய்யா, அனா. இந்த அனா தன் தந்தை சிபயோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பாலை நிலத்தில் வெப்ப நீரூற்றுகளைக் கண்டுபிடித்தான்.
ஆதியாகமம் 36 : 25 (ECTA)
அனாவின் மகன் தீசோன்; அனாவின் மகள் ஒகோலிபாமா.
ஆதியாகமம் 36 : 26 (ECTA)
தீசானின் புதல்வர்கள் இவர்களே; எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.
ஆதியாகமம் 36 : 27 (ECTA)
ஏட்சேரின் புதல்வர்கள் இவர்களே; பில்கான், சகவான், ஆக்கான்.
ஆதியாகமம் 36 : 28 (ECTA)
தீசோனின் புதல்வர்கள் இவர்களே; ஊசு, ஆரான்.
ஆதியாகமம் 36 : 29 (ECTA)
ஓரியனின் தலைவர்கள் இவர்களே; லோத்தான், சோபால், சிபயோன், அனா,
ஆதியாகமம் 36 : 30 (ECTA)
தீசோன், ஏட்சேர், தீசான். இவர்கள் சேயிர் நாட்டின் குலப்பிரிவுகளுக்கு ஏற்ப ஓரியரின் தலைவர்களாய் இருந்தவர்கள்.
ஆதியாகமம் 36 : 31 (ECTA)
ஏதோமின் வழிமரபினர்
(1 குறி 1:43-54)
இஸ்ரயேலரிடையே முடியாட்சி தொடங்குமுன்னரே ஏதோமில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் இவர்களே.
ஆதியாகமம் 36 : 32 (ECTA)
பெகோரின் மகன் பேலா ஏதோமில் ஆட்சி புரிந்தான். அவனது நகரின் பெயர் தின்காபா.
ஆதியாகமம் 36 : 33 (ECTA)
பேலா இறந்தபின் போஸ்ராவைச் சார்ந்த செராகின் மகன் யோபாபு ஆட்சிக்கு வந்தான்.
ஆதியாகமம் 36 : 34 (ECTA)
யோபாபு இறந்தபின் தேமானியரின் நாட்டைச் சேர்ந்த ஊசாம் ஆட்சிக்கு வந்தான்.
ஆதியாகமம் 36 : 35 (ECTA)
ஊசாம் இறந்தபின் பெதாதின் மகன் அதாது ஆட்சிக்கு வந்தான். இவன் மோவாபு நாட்டில் மிதியானியரைத் தோற்கடித்தவன். அவனது நகரின் பெயர் அவீத்து.
ஆதியாகமம் 36 : 36 (ECTA)
அதாது இறந்தபின், மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா ஆட்சிக்கு வந்தான்.
ஆதியாகமம் 36 : 37 (ECTA)
சம்லா இறந்தபின் யூப்பிரத்தீசு நதிக்கருகில் இருந்த இரகபோத்தைச் சார்ந்த சாவூல் ஆட்சிக்கு வந்தான்.
ஆதியாகமம் 36 : 38 (ECTA)
சாவூல் இறந்தபின், அக்போரின் மகன் பாகால் அனான் ஆட்சிக்கு வந்தான்.
ஆதியாகமம் 36 : 39 (ECTA)
பாகால் அனான் இறந்தபின், அதார் ஆட்சிக்கு வந்தான். அவனது நகரின் பெயர் பாகூ. அவன் மனைவியின் பெயர் மெகேற்றபேல். அவள் மேசகாபின் மகளான மத்ரேத்தின் மகள்.
ஆதியாகமம் 36 : 40 (ECTA)
தங்கள் குலப்பிரிவின்படியும், நிலப்பகுதிகளின்படியும் ஏசாவின் வழிவந்த தலைவர்களின் பெயர்கள் இவைகளே; திம்னா, ஆல்வா, எத்தேத்து.
ஆதியாகமம் 36 : 41 (ECTA)
ஒகோலிபாமா, ஏலா, பினோன்,
ஆதியாகமம் 36 : 42 (ECTA)
கெனாசு, தேமான், மிபுசார்,
ஆதியாகமம் 36 : 43 (ECTA)
மக்தியேல், ஈராம். ஏதோமியர் உரிமையாகக் கொண்டு குடியேறி வாழ்ந்த நிலப்பகுதிகளின்படி தலைவர்களாய் இருந்தவர்கள் இவர்களே. இந்த ஏதோமியரின் மூதாதைதான் ஏசா.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43