ஆதியாகமம் 35 : 1 (ECTA)
பெத்தேலில் கடவுள் யாக்கோபுக்கு ஆசி வழங்குதல் அப்பொழுது கடவுள் யாக்கோபை நோக்கி, “நீ எழுந்து பெத்தேலுக்குப் போய் அங்கே குடியிரு. உன் சகோதரன் ஏசாவிடமிருந்து தப்பியோடியபோது உனக்குத் தோன்றின இறைவனுக்கு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தை எழுப்பு” என்றார். [* தொநூ 28:11- 17 ]
ஆதியாகமம் 35 : 2 (ECTA)
யாக்கோபு தம் வீட்டாரையும் அவரோடிருந்த அனைவரையும் நோக்கி, “உங்களிடம் உள்ள வேற்றுத் தெய்வங்களின் சிலைகளை அகற்றிவிட்டு உங்களைத் தூய்மைப்படுத்தி, உங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.
ஆதியாகமம் 35 : 3 (ECTA)
எழுந்து வாருங்கள்; பெத்தேலுக்குச் செல்வோம். அங்கே, என் துன்ப நாளில் என் மன்றாட்டைக் கேட்டருளி நான் சென்றவிடமெல்லாம் எனக்கு வழித் துணையாய் இருந்த இறைவனுக்கு ஒரு பலிபீடத்தை எழுப்புவேன்” என்றார்.
ஆதியாகமம் 35 : 4 (ECTA)
அப்படியே அவர்கள் தங்களிடமிருந்த எல்லா வேற்றுத் தெய்வங்களின் சிலைகளையும் தங்கள் காதணிகளையும் யாக்கோபின் கையில் கொடுக்க, அவர் அவற்றைச் செக்கேம் அருகிலிருந்த ஒரு கருவாலி மரத்தின் அருகே புதைத்தார்.
ஆதியாகமம் 35 : 5 (ECTA)
அவர்கள் புறப்பட்டுச் சென்றபொழுது, அவர்களைச் சூழ்ந்திருந்த எல்லா நகரத்தினருக்கும் கடவுள் திகிலூட்டினார். எனவே, அவர்கள் யாக்கோபின் புதல்வரைத் துரத்திச் செல்லவில்லை.
ஆதியாகமம் 35 : 6 (ECTA)
இவ்வாறு, யாக்கோபும் அவரோடிருந்த எல்லா மக்களும் கானான் நாட்டிலுள்ள லூசு என்ற பெத்தேலுக்கு வந்து சேர்ந்தனர்.
ஆதியாகமம் 35 : 7 (ECTA)
யாக்கோபு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பித் தம் சகோதரனிடமிருந்து தப்பி ஓடினபொழுது, கடவுள் தம்மை அங்கே அவருக்கு வெளிப்படுத்தியதால், அந்த இடத்திற்கு ‘ஏல்-பெத்தேல்’ என்று பெயரிட்டார்.
ஆதியாகமம் 35 : 8 (ECTA)
அப்பொழுது ரெபேக்காவின் பணிப்பெண்ணாகிய தெபோரா இறந்தாள். பெத்தேலின் அடிவாரத்திலிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவள் அடக்கம் செய்யப்பட்டாள். எனவே. அவ்விடத்திற்கு ‘அல்லோன்-பாகூத்து’* என்னும் பெயர் வழங்கலாயிற்று. * எபிரேயத்தில், ‘அழுகையின் கருவாலி மரம்’ என்பது பொருள்.
ஆதியாகமம் 35 : 9 (ECTA)
யாக்கோபு பதான்-அராமிலிருந்து திரும்பி வந்தபின் கடவுள் மீண்டும் அவருக்குத் தோன்றி, ஆசி வழங்கினார்.
ஆதியாகமம் 35 : 10 (ECTA)
கடவுள் அவரை நோக்கி, “உன் பெயர் யாக்கோபு. இனிமேல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படமாட்டாய்; உன் பெயர் ‘இஸ்ரயேல்’ எனப்படும்” என்றுரைத்து ‘இஸ்ரயேல்’ என்று அவருக்குப் பெயரிட்டார். [* தொநூ 32: 28 ]
ஆதியாகமம் 35 : 11 (ECTA)
மேலும், கடவுள் அவரை நோக்கி, “நானே எல்லாம் வல்ல இறைவன். நீ பலுகிப் பெருகக்கடவாய். ஓரினமும் மக்களினங்களின் கூட்டமும் உன்னிடமிருந்து தோன்றும். அரசர்களும் உன் வழிமரபில் உதிப்பார்கள். [* தொநூ 17:4- 8 ]
ஆதியாகமம் 35 : 12 (ECTA)
ஆபிரகாம், ஈசாக்குக்கு நான் அளித்த நாட்டை உனக்கும் உனக்குப்பின் உன்வழி மரபினருக்கும் கொடுப்பேன்” என்றார். [* தொநூ 17:4- 8 ]
ஆதியாகமம் 35 : 13 (ECTA)
பின்னர், கடவுள் அவரோடு பேசிய இடத்தினின்று மேலெழும்பிச் சென்றார்.
ஆதியாகமம் 35 : 14 (ECTA)
யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்தில் ஒரு கல்தூணை நினைவுத் தூணாக நாட்டி, அதன் மேல் நீர்மப் பலியையும் எண்ணெயையும் வார்த்தார். [* தொநூ 28:18- 19 ]
ஆதியாகமம் 35 : 15 (ECTA)
யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்திற்குப் ‘பெத்தேல்’* என்று பெயரிட்டார். [* தொநூ 28:18- 19 ; எபிரேயத்தில், ‘இறைவனது இல்லம்’ என்பது பொருள். ]
ஆதியாகமம் 35 : 16 (ECTA)
ராகேலின் இறப்பு பின்பு, அவர்கள் பெத்தேலைவிட்டுப் புறப்பட்டனர். எப்ராத்திற்குச் சற்றுத் தொலைவில் அவர்கள் இருந்தபொழுது, அங்கே ராகேலுக்குப் பேறுகாலம் வந்தது. அப்பொழுது அவர் மிகவும் வேதனைப்பட்டார்.
ஆதியாகமம் 35 : 17 (ECTA)
பேறுகால வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருக்கையில், மருத்துவப் பெண் அவரை நோக்கி, “அஞ்சாதே! உனக்கு இன்னொரு மகன் பிறந்துள்ளான்!” என்றாள்.
ஆதியாகமம் 35 : 18 (ECTA)
அவர் சாகக்கிடந்து உயிர்பிரியும் வேளையில் அவனுக்குப் ‘பென்-ஓனி’* என்று பெயரிட்டார். அவன் தந்தையோ அவனைப் ‘பென்யமின்’* என்று அழைத்தார். [ எபிரேயத்தில், ‘என் வேதனையின் மகன்’ என்பது பொருள். ; (12) எபிரேயத்தில், ‘என் வலக்கையின் மகன்’ என்பது பொருள்.. ]
ஆதியாகமம் 35 : 19 (ECTA)
இவ்வாறு ராகேல் இறந்துபோக, பெத்லகேம் என்ற எப்ராத்திற்குச் செல்லும் வழியில் அடக்கம் செய்யப்பட்டார்.
ஆதியாகமம் 35 : 20 (ECTA)
யாக்கோபு அவருடைய கல்லறையின் மேல் ஒரு நினைவுத்தூணை நாட்டிவைத்தார். இன்றுவரை அது ராகேலின் கல்லறைக்கு நினைவுத்தூணாக இருக்கின்றது.
ஆதியாகமம் 35 : 21 (ECTA)
மீண்டும், இஸ்ரயேல் அங்கிருந்து புறப்பட்டு மிக்தால் ஏதேருக்கு அப்பால் கூடாரம் அடித்தார்.
ஆதியாகமம் 35 : 22 (ECTA)
இஸ்ரயேல் அந்நிலப்பகுதியில் குடியிருந்தபொழுது, ரூபன் தன் தந்தையின் மறுமனைவியாகிய பிலகாவுடன் உடலுறவு கொண்டான். இஸ்ரயேல் அதைக் கேள்விப்பட்டார். யாக்கோபின் புதல்வர்கள் பன்னிருவரின் பெயர்களாவன: [* தொநூ 49: 4 ]
ஆதியாகமம் 35 : 23 (ECTA)
லேயாவின் புதல்வர்கள்; யாக்கோபின் தலைமகன் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்.
ஆதியாகமம் 35 : 24 (ECTA)
ராகேலின் புதல்வர்கள்; யோசேப்பு, பென்யமின்.
ஆதியாகமம் 35 : 25 (ECTA)
ராகேலின் பணிப்பெண் பிலகாவின் புதல்வர்கள்; தாண், நப்தலி.
ஆதியாகமம் 35 : 26 (ECTA)
லேயாவின் பணிப்பெண் சில்பாவின் புதல்வர்கள்; காத்து, ஆசேர். இவர்கள் யாக்கோபுக்கு பதான் அராமில் பிறந்தவர்கள்.
ஆதியாகமம் 35 : 27 (ECTA)
ஈசாக்கின் இறப்பு ஆபிரகாமும், ஈசாக்கும் வாழ்ந்த இடம் கிரியத்து அர்பா என்ற எபிரோன் ஆகும்.யாக்கோபு தம் தந்தை ஈசாக்கிடம் மம்ரே என்னும் கிரியத்து அர்பாவுக்கு வந்தார். அதுவே ஆபிரகாமும் ஈசாக்கும் குடியிருந்த எபிரோன் ஆகும். [* தொநூ 13: 18 ]
ஆதியாகமம் 35 : 28 (ECTA)
ஈசாக்கு நூற்றெண்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.
ஆதியாகமம் 35 : 29 (ECTA)
அவர் வயது முதிர்ந்தவராய் இறந்து, தம் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் புதல்வர்கள் ஏசாவும் யாக்கோபும் அவரை அடக்கம் செய்தனர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29