ஆதியாகமம் 33 : 1 (ECTA)
யாக்கோபு-ஏசா சந்திப்பு யாக்கோபு தம் கண்களை உயர்த்திப் பார்க்க, ஏசா நானூறு ஆள்களோடு வருவதைக் கண்டார். உடனே அவர் லேயாவிடமும் ராகேலிடமும் இரு வேலைக்காரிகளிடமும் பிள்ளைகளைப் பிரித்து ஒப்படைத்தார்.
ஆதியாகமம் 33 : 2 (ECTA)
முதல் வரிசையில் வேலைக்காரிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும், இரண்டாம் வரிசையில் லேயாவையும், அவருடைய பிள்ளைகளையும், இறுதியில் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினார்.
ஆதியாகமம் 33 : 3 (ECTA)
அவர் அவர்களுக்கு முன் சென்று தம் சகோதரரை நெருங்கிச் செல்கையில் ஏழு முறை தரையில் வீழ்ந்து அவரை வணங்கினார்.
ஆதியாகமம் 33 : 4 (ECTA)
ஏசாவோ அவருக்கு எதிர் கொண்டு ஓடி அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார். இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர்.
ஆதியாகமம் 33 : 5 (ECTA)
பின் கண்களை உயர்த்தி, பெண்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு, “உன்னோடு இருக்கும் இவர்கள் யார்?” என்று கேட்டார். அவரும் “உம் அடியானாகிய எனக்குக் கடவுள் கருணையுடன் அருளிய பிள்ளைகளே இவர்கள்” என்று பதில் சொன்னார்.
ஆதியாகமம் 33 : 6 (ECTA)
அப்பொழுது வேலைக்காரிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் அணுகி அவரை வணங்கினர்.
ஆதியாகமம் 33 : 7 (ECTA)
அவ்வாறே லேயாவும் அவருடைய பிள்ளைகளும் வணங்கினர். இறுதியாக யோசேப்பும் ராகேலும் நெருங்கி வந்து வணங்கினர்.
ஆதியாகமம் 33 : 8 (ECTA)
அப்போது ஏசா யாக்கோபை நோக்கி, “எனக்கு எதிர்கொண்டு வந்த பரிவாரம் எதற்காக?” என்று கேட்டார். யாக்கோபு, “என் தலைவராகிய உம் பார்வையில் எனக்குத் தயை கிடைப்பதற்காக” என்று பதில் சொன்னார்.
ஆதியாகமம் 33 : 9 (ECTA)
ஏசா, “என் சகோதரனே, ஏற்கெனவே என்னிடம் மிகுதியாக உள்ளது. உன்னுடையதை நீயே வைத்துக்கொள்” என்றார்.
ஆதியாகமம் 33 : 10 (ECTA)
யாக்கோபு, “இல்லை. உமது பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருப்பது உண்மையானால் நான் தரும் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும். உமது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பதுபோல் இருக்கிறது. ஏனெனில், நீர் எனக்குக் கனிவு காட்டியுள்ளீர்.
ஆதியாகமம் 33 : 11 (ECTA)
எனவே, உமக்கு அடியேன் கொண்டு வந்துள்ள அன்பளிப்பைத் தயவு செய்து ஏற்றுக் கொள்ளும். ஏனெனில், கடவுளின் கருணையினால் எனக்கு வேண்டிய மட்டும் உள்ளது” என்று சொல்லி வற்புறுத்த, அவரும் அவற்றைப் பெற்றுக்கொண்டார்.
ஆதியாகமம் 33 : 12 (ECTA)
பிறகு, அவர் “நாம் சேர்ந்து பயணம் செய்வோம். உனக்குமுன் நான் செல்வேன்” என்றார்.
ஆதியாகமம் 33 : 13 (ECTA)
அதற்கு யாக்கோபு, “பச்சிளங்குழந்தைகளும் பால் கொடுக்கும் ஆடு, மாடுகளும் என்னிடம் உள்ளன என்று என் தலைவராகிய உமக்குத் தெரியும். அவற்றை ஒரே நாளில் வருத்தி ஓட்டிக் கொண்டு வந்தால், என் மந்தையெல்லாம் செத்துப் போகும்.
ஆதியாகமம் 33 : 14 (ECTA)
தலைவராகிய நீர் எனக்குமுன்னே செல்வீராக! நானோ மந்தைகள், பிள்ளைகளின் நடைக்கு ஏற்ப மெதுவாக வந்து சேயிரில் உம்மைச் சந்திப்பேன்” என்றார்.
ஆதியாகமம் 33 : 15 (ECTA)
அதற்கு ஏசா, “அப்படியானால் என்னுடைய ஆள்களில் சிலரை உன்னிடம் விட்டுச் செல்கிறேன்” என்று சொல்ல, அவர் “வேண்டாம்; என் தலைவராகிய உமது பார்வையில் எனக்குத் தயை கிடைத்ததே போதும்” என்றார்.
ஆதியாகமம் 33 : 16 (ECTA)
ஆகையால், ஏசா அன்றே புறப்பட்டு, தாம் வந்த வழியே சேயிருக்குத் திரும்பினார்.
ஆதியாகமம் 33 : 17 (ECTA)
யாக்கோபு சுக்கோத்தை வந்தடைந்தவுடன், அங்கே தமக்கென்று ஒரு வீடு கட்டினார். தம் மந்தைகளுக்குக் குடில்களை அமைத்தார். இதனால் அந்த இடத்திற்குச் ‘சுக்கோத்து’* என்று பெயரிட்டார். * எபிரேயத்தில், ‘குடில்’ என்பது பொருள்.
ஆதியாகமம் 33 : 18 (ECTA)
இவ்வாறு யாக்கோபு பதான் அராமிலிருந்து திரும்பி வந்தபின் கானான் நாட்டைச் சார்ந்த செக்கேம் நகருக்கு நலமுடன் வந்து சேர்ந்தார். அந்நகருக்கு எதிரே பாளையம் இறங்கினார்.
ஆதியாகமம் 33 : 19 (ECTA)
கூடாரமடித்துத் தங்கிய அந்நிலப்பகுதியை செக்கேமின் தந்தை ஆமோரின் புதல்வரிடமிருந்து நூறு வெள்ளிக்காசுக்கு அவர் விலைக்கு வாங்கினார். [* யோசு 24:32; யோவா 4: 5 ]
ஆதியாகமம் 33 : 20 (ECTA)
பின்பு, அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி அதற்கு ‘ஏல்-எலோகே-இஸ்ரயேல்’* என்று பெயரிட்டார். * எபிரேயத்தில், ‘இஸ்ரயேலின் கடவுளாகிய இறைவன்’ என்பது பொருள்..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20