ஆதியாகமம் 25 : 1 (ECTA)
ஆபிரகாம் கெற்றூரா என்ற பெயருடைய வேறொரு பெண்ணை மணந்து கொண்டார்.
ஆதியாகமம் 25 : 2 (ECTA)
அவர் அவருக்குச் சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இசுபாக்கு, சூவாகு என்பவர்களைப் பெற்றெடுத்தார்.
ஆதியாகமம் 25 : 3 (ECTA)
யோக்சான், சோபாவையும் தெதானையும் பெற்றான். தெதானின் புதல்வர் ஆசூரிம், லெத்தூசிம், இலயுமிம் ஆவர்.
ஆதியாகமம் 25 : 4 (ECTA)
மிதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா ஆவர். இவர்கள் அனைவரும் கெற்றூராவின் புதல்வர்.
ஆதியாகமம் 25 : 5 (ECTA)
ஆபிரகாம் தம்மகன் ஈசாக்குக்கு தமக்குரிய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்தார்.
ஆதியாகமம் 25 : 6 (ECTA)
ஆனால் அவருடைய மறுமனைவியின் பிள்ளைகளுக்கு அன்பளிப்புக்களைக் கொடுத்துத் தாம் உயிரோடிருக்கும்போதே தம் மகன் ஈசாக்கிடமிருந்து பிரித்துக் கீழ்திசை நாட்டிற்கு அனுப்பிவிட்டார்.
ஆதியாகமம் 25 : 7 (ECTA)
ஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தார்.
ஆதியாகமம் 25 : 8 (ECTA)
அவர் முதியவராகி நிறைந்த வாழ்நாள்களைக் கடந்து, நல்ல நரைவயதில் இறந்து, தம் மூதாதையரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
ஆதியாகமம் 25 : 9 (ECTA)
அவர் புதல்வர்களாகிய ஈசாக்கும் இஸ்மாயேலும் மம்ரே நகருக்குக் கிழக்கே இத்தியனா சோவாரின் மகன் எப்ரோனுடைய நிலத்தில் இருந்த மகபேலா குகையில் அவரை அடக்கம் செய்தனர்.
ஆதியாகமம் 25 : 10 (ECTA)
அவர் அந்த நிலத்தைத் தான் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார். அதில் அவர் தம் மனைவி சாராவோடு அடக்கம் செய்யப்பட்டார்.
ஆதியாகமம் 25 : 11 (ECTA)
ஆபிரகாம் இறந்தபின் அவர் மகன் ஈசாக்கிற்குக் கடவுள் ஆசி வழங்கினார். பெயேர்கலகாய்ரோகி என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார்.
ஆதியாகமம் 25 : 12 (ECTA)
சாராவின் பணிப்பெண்ணும் எகிப்தியளுமான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனான இஸ்மயேலின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர்;
ஆதியாகமம் 25 : 13 (ECTA)
பிறந்த வரிசையின்படி இஸ்மயேலின் புதல்வரின் பெயர்கள்; இஸ்மயேலின் மூத்த மகன் நெபயோத்து, கேதார், அத்பியேல், மிப்சாம்,
ஆதியாகமம் 25 : 14 (ECTA)
மிசுமா, தூமா, மாசா,
ஆதியாகமம் 25 : 15 (ECTA)
அதாது, தேமா, எற்றூர், நாப்பிசு, கேதமா.
ஆதியாகமம் 25 : 16 (ECTA)
இவர்களே இஸ்மயேலின் புதல்வர்கள் பன்னிரு குலங்களின் தலைவர்களான இவர்கள் தம் குடியிருப்புகளுக்கும் பாளையங்களுக்கும் தம் பெயர்களையே இட்டனர்.
ஆதியாகமம் 25 : 17 (ECTA)
இஸ்மயேல் மொத்தம் நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்; அவர் இறந்து தம் இனத்தாரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
ஆதியாகமம் 25 : 18 (ECTA)
அவர்கள் அவிலாவுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்தனர். இது எகிப்திற்குக் கிழக்கே அசீரியா வரை உள்ளது. இவர்கள் தங்கள் சகோதரர்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து வாழ்ந்தனர்.
ஆதியாகமம் 25 : 19 (ECTA)
ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.
ஆதியாகமம் 25 : 20 (ECTA)
ஈசாக்கிற்கு நாற்பது வயதான போது பதான் அராமைச் சார்ந்த அரமேயன் பெத்துவேலின் மகளும் அரமேயன் லாபானின் சகோதரியுமான ரெபேக்காவை மணந்துகொண்டார்.
ஆதியாகமம் 25 : 21 (ECTA)
ஈசாக்கு மலடியாயிருந்த தம் மனைவிக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர் மன்றாட்டைக் கேட்டருளினார். அவர் மனைவி ரெபேக்கா கருத்தரித்தார்.
ஆதியாகமம் 25 : 22 (ECTA)
ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த புதல்வர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர். அதை உணர்ந்த அவர் "எனக்கு இப்படி நடப்பது ஏன்?" என்று ஆண்டவரிடம் கேட்கச் சென்றார்.
ஆதியாகமம் 25 : 23 (ECTA)
ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கருப்பையில் இரு இனங்கள் உள்ளன; உன் வயிற்றிலிருந்தே ஈரினத்தார் பிரிந்திருப்பர். ஓர் இனம் மற்றதைவிட வலிமை மிக்கதாய் இருக்கும் மூத்தவன் இளயவனுக்குப் பணிந்திருப்பான் என்றார்.
ஆதியாகமம் 25 : 24 (ECTA)
அவருக்குப் பேறுகாலம் நிறைவுற்றபோது, இரட்டைப் பிள்ளைகள் கருப்பையில் இருந்தன.
ஆதியாகமம் 25 : 25 (ECTA)
முதலாவது வெளிவந்த பிள்ளை செந்நிறமாகவும் அவன் உடல் முழுவதும் முடிமயமாகவும் இருந்தது. எனவே அவனுக்கு "ஏசா" என்று பெயர் இட்டனர்.
ஆதியாகமம் 25 : 26 (ECTA)
இரண்டாவது பிள்ளை தன் சகோதரன் ஏசாவின் குதிங்காலைக் கையால் பற்றிக் கொண்டு வெளிவந்தான். எனவே அவனுக்கு "யாக்கோபு" என்று பெயரிடப்பட்டது. அவர்கள் பிறந்தபோது ஈசாக்கிற்கு வயது அறுபது.
ஆதியாகமம் 25 : 27 (ECTA)
இருவரும் வளர்ந்து இளைஞரானபோது, அவர்களுள் ஏசா வேட்டையில் வல்லவனாய், திறந்தவெளி மனிதனாய் வாழ்ந்துவந்தான். ஆனால் யாக்கோபு பண்புடையவனாய், கூடாரத்தில் உறைபவனாய் வாழ்ந்து வந்தான்.
ஆதியாகமம் 25 : 28 (ECTA)
ஏசா வேட்டையாடித் தந்த உணவின் பொருட்டு ஈசாக்கு அவன்மேல் அன்பு கொண்டிருந்தார். ரெபேக்காவோ யாக்கோபின்மீது அன்பு கொண்டிருந்தார்.
ஆதியாகமம் 25 : 29 (ECTA)
ஒரு நாள் யாக்கோபு சுவையான கூழ் சமைத்துக்கொண்டிருந்தபொழுது, ஏசா களைத்துப்போய் திறந்தவெளியிலிருந்து வந்தான்.
ஆதியாகமம் 25 : 30 (ECTA)
அவன் யாக்கோபிடம், "நான் களைப்பாய் இருக்கிறேன். இந்த செந்நிறச் சுவையான கூழில் எனக்குக் கொஞ்சம் கொடு, "என்றான். அவனுக்கு "ஏதோம்" என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம்.
ஆதியாகமம் 25 : 31 (ECTA)
யாக்கோபு அவனை நோக்கி, "உனது தலைமகனுரிமையை இப்போதே எனக்கு விற்றுவிடு" என்றான்.
ஆதியாகமம் 25 : 32 (ECTA)
அவன், "நானோ சாகப்போகிறேன். தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?" என்றான்.
ஆதியாகமம் 25 : 33 (ECTA)
யாக்கோபு, "இப்போதே எனக்கு ஆணையிட்டுக் கொடு" என்றான். எனவே ஏசா ஆணையிட்டுத் தலைமகனுரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.
ஆதியாகமம் 25 : 34 (ECTA)
யாக்கோபு, ஏசாவுக்குக் கொஞ்சம் அப்பமும், சுவையான பயிற்றங்கூழும் கொடுக்க, அவனும் தன் வழியே சென்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34

BG:

Opacity:

Color:


Size:


Font: