ஆதியாகமம் 22 : 1 (ECTA)
ஈசாக்கைப் பலியிட ஆபிரகாமுக்குக் கட்டளை இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் “இதோ! அடியேன்” என்றார்.
ஆதியாகமம் 22 : 2 (ECTA)
அவர், “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்” என்றார். [* 2 குறி 3: 1 ]
ஆதியாகமம் 22 : 3 (ECTA)
அவ்வாறே, ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டிய பின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
ஆதியாகமம் 22 : 4 (ECTA)
மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார்.
ஆதியாகமம் 22 : 5 (ECTA)
உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, “நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்” என்றார்.
ஆதியாகமம் 22 : 6 (ECTA)
பின் ஆபிரகாம் எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக் கொண்டார். இவ்வாறு, இருவரும் சேர்ந்து சென்றனர்.
ஆதியாகமம் 22 : 7 (ECTA)
அப்பொழுது, ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி “அப்பா!” என, அவர், “என்ன? மகனே!” என்று கேட்டார். அதற்கு அவன், “இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று வினவினான்.
ஆதியாகமம் 22 : 8 (ECTA)
அதற்கு ஆபிரகாம், “எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்த மட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே” என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர்.
ஆதியாகமம் 22 : 9 (ECTA)
ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். [* யாக் 2: 21 ]
ஆதியாகமம் 22 : 10 (ECTA)
ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார்.
ஆதியாகமம் 22 : 11 (ECTA)
அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று “ஆபிரகாம்! ஆபிரகாம்” என்று கூப்பிட, அவர் “இதோ! அடியேன்” என்றார்.
ஆதியாகமம் 22 : 12 (ECTA)
அவர், “பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்” என்றார்.
ஆதியாகமம் 22 : 13 (ECTA)
அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார்.
ஆதியாகமம் 22 : 14 (ECTA)
எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு ‘யாவேயிரே’ என்று பெயரிட்டார். ஆதலால்தான் ‘மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்’ என்று இன்றுவரை வழங்கி வருகிறது.
ஆதியாகமம் 22 : 15 (ECTA)
ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து,
ஆதியாகமம் 22 : 16 (ECTA)
“ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். * எபி 6:13-14..
ஆதியாகமம் 22 : 17 (ECTA)
ஆதலால், நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். * எபி 6:13-14..
ஆதியாகமம் 22 : 18 (ECTA)
மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்றார்.
ஆதியாகமம் 22 : 19 (ECTA)
பின் ஆபிரகாம் தம் வேலைக்காரரிடம் திரும்பி வந்தார். அவர்கள் ஒன்று சேர்ந்து பெயேர்செபாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கேயே ஆபிரகாம் வாழ்ந்து வந்தார்.
ஆதியாகமம் 22 : 20 (ECTA)
நாகோரின் வழிமரபினர் இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், “உன் சகோதரன் நாகோருக்கு மில்க்கா புதல்வரைப் பெற்றெடுத்திருக்கிறாள்” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது.
ஆதியாகமம் 22 : 21 (ECTA)
மூத்த மகன் ஊசு, அவன் தம்பி பூசு, ஆராமின் தந்தையான கெமுவேல்,
ஆதியாகமம் 22 : 22 (ECTA)
கெசேது, அசோ, பில்தாசு, இதிலாபு, பெத்துவேல்.
ஆதியாகமம் 22 : 23 (ECTA)
பெத்துவேல் ரெபேக்காவின் தந்தை. இந்த எட்டுப் புதல்வர்களையும் மில்க்கா ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்குப் பெற்றெடுத்தாள்.
ஆதியாகமம் 22 : 24 (ECTA)
மேலும், அவனுக்கு மறுமனைவியாகிய இரயுமா, தெபாகு, ககாம், தகாசு, மாக்கா என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24