ஆதியாகமம் 13 : 1 (ECTA)
ஆபிராம், லோத்து பிரிதல் ஆகவே, ஆபிராம் தம் மனைவியுடனும் தமக்குரிய எல்லாவற்றுடனும் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார்.
ஆதியாகமம் 13 : 2 (ECTA)
அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார்.
ஆதியாகமம் 13 : 3 (ECTA)
நெகேபிலிருந்து பெத்தேல் வரை படிப்படியாகப் பயணம் செய்து பெத்தெலுக்கும் ஆயிக்கும் இடையே முதலில் தம் கூடாரம் இருந்த அதே இடத்தை அடைந்தார்.
ஆதியாகமம் 13 : 4 (ECTA)
தாம் முதலில் பலிபீடம் அமைத்திருந்த இடத்தை அடைந்து அங்கே அவர் ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.
ஆதியாகமம் 13 : 5 (ECTA)
ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன.
ஆதியாகமம் 13 : 6 (ECTA)
அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.
ஆதியாகமம் 13 : 7 (ECTA)
ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது கானானியரும் பெரிசியரும் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.
ஆதியாகமம் 13 : 8 (ECTA)
ஆபிராம் லோத்தை நோக்கி, “எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்படவேண்டாம். ஏனெனில், நாம் உறவினர்.
ஆதியாகமம் 13 : 9 (ECTA)
நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன்; நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்” என்றார்.
ஆதியாகமம் 13 : 10 (ECTA)
லோத்து கண்களை உயர்த்தி எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலும் எகிப்து நாட்டைப் போலும் இருந்தது. சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறிருந்தது. [* தொநூ 2: 10 ]
ஆதியாகமம் 13 : 11 (ECTA)
லோத்து யோர்தான் சுற்றுப்பகுதி முழுவதையும் தேர்ந்துகொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார். இவ்வாறு ஒருவர் ஒருவரிடம் பிரிந்தனர்.
ஆதியாகமம் 13 : 12 (ECTA)
ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்த நகரங்களில் வாழ்ந்துவந்தார். இறுதியில் சோதோமுக்கு அருகில் கூடாரம் அமைத்துக்கொண்டார்.
ஆதியாகமம் 13 : 13 (ECTA)
ஆனால், சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக்கொடிய பாவிகளாக இருந்தனர்.
ஆதியாகமம் 13 : 14 (ECTA)
ஆபிராம் எபிரோனில் குடியேறல் லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின், ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார்.
ஆதியாகமம் 13 : 15 (ECTA)
ஏனெனில், நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும் கொடுக்கப்போகிறேன். * திப 7:5..
ஆதியாகமம் 13 : 16 (ECTA)
உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே, பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழிமரபினரையும் எண்ணலாம்.
ஆதியாகமம் 13 : 17 (ECTA)
நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில், இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்” என்றார்.
ஆதியாகமம் 13 : 18 (ECTA)
ஆகவே, ஆபிராம் தம் கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு எபிரோனிலிருந்த மம்ரே என்ற கருவாலி மரத்தோப்பருகில் வந்து வாழ்ந்தார். அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18