ஆதியாகமம் 10 : 1 (ECTA)
நோவா புதல்வரின் வழிமரபினர்
(1 குறி 1:5-23) நோவாவின் புதல்வர் சேம், காம், எப்பேத்து ஆகியோரின் வழிமரபினர் இவர்களே. வெள்ளப் பெருக்குக்குப்பின் அவர்களுக்குப் புதல்வர் பிறந்தனர். [* தொநூ 1: 28 ]
ஆதியாகமம் 10 : 2 (ECTA)
எப்பேத்தின் புதல்வர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மெசேக்கு, தீராசு.
ஆதியாகமம் 10 : 3 (ECTA)
கோமேரின் புதல்வர்: அஸ்கனாசு, இரிபாத்து, தோகர்மா.
ஆதியாகமம் 10 : 4 (ECTA)
யாவானின் புதல்வர்: எலிசா, தர்சீசு, கித்திம், தோதானிம். [* லேவி 7:26-27; லேவி 17:10-14; 19:26; இச 12:16,23; 15: 23 ]
ஆதியாகமம் 10 : 5 (ECTA)
இவர்கள் வழிவந்த கடற்கரை நாட்டினர் மொழி, குடும்ப, இனவாரியாகப் பிரிந்து தம் நாடுகளில் பரவினர்.
ஆதியாகமம் 10 : 6 (ECTA)
காமின் புதல்வர்; கூசு, எகிப்து, பூற்று, கானான். [* தொநூ 1:26; விப 20: 13 ]
ஆதியாகமம் 10 : 7 (ECTA)
கூசின் புதல்வர்; செபா, அவிலா, சப்தா, இராமா, சப்தக்கா. இராமாவின் புதல்வர்; சேபா, தெதான். * தொநூ 1:28..
ஆதியாகமம் 10 : 8 (ECTA)
மேலும் கூசுக்கு நிம்ரோது பிறந்தான். இவன்தான் முதன்முதலாக உலகத்தில் பேராற்றல் கொண்டவனாக விளங்கியவன்.
ஆதியாகமம் 10 : 9 (ECTA)
ஆண்டவர் திருமுன் இவன் ஆற்றல்மிக்க வேடனாக இருந்தான். இதனால் “ஆண்டவர் திருமுன் நிம்ரோதைப் போன்ற ஆற்றல்மிக்க வேடன்” என்ற வழக்கு ஏற்படலாயிற்று.
ஆதியாகமம் 10 : 10 (ECTA)
முதன்முதலில் சினயார் நாட்டிலிருந்த பாபேல், எரேக்கு, அக்காது, கல்னே ஆகியவை அவன் ஆட்சிக்குள் வந்தன.
ஆதியாகமம் 10 : 11 (ECTA)
அந்நாட்டிலிருந்து அசீரியா நாட்டுக்குச் சென்று, அங்கே நினிவே, இரகபோத்து, ஈர், காலாகு ஆகிய நகரங்களை அமைத்தான்.
ஆதியாகமம் 10 : 12 (ECTA)
நினிவேக்கும் காலாகிற்கும் இடையே மிகப்பெரிய நகரமாகிய இரசேனை அவன் நிறுவினான்.
ஆதியாகமம் 10 : 13 (ECTA)
எகிப்தின் புதல்வர்; லூதிம், அனாமிம், இலகாபிம், நப்துகிம்,
ஆதியாகமம் 10 : 14 (ECTA)
பத்ருசிம், பெலிஸ்தியரின் மூதாதையரான கஸ்லுகிம், கப்தோரிம்.
ஆதியாகமம் 10 : 15 (ECTA)
கானானின் தலைமகன் சீதோன், ஏனைய புதல்வர்; ஏத்து,
ஆதியாகமம் 10 : 18 (ECTA)
அர்வாது, செமாரி, அமாத்தி. இந்தக் கானானின் குடும்பங்கள் பின்னர் பிரிந்து பரவலாயின.
ஆதியாகமம் 10 : 19 (ECTA)
கானானியர் நாட்டு எல்லை சீதோனிலிருந்து தெற்கே கெரார் செல்லும் திசையில் காஸாவரையும் கிழக்கில் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் செல்லும் திசையில் இலாசா வரையும் பரவியிருந்தது.
ஆதியாகமம் 10 : 20 (ECTA)
இவை காம் புதல்வரின் குடும்ப, மொழி, நாடு, இனவாரியான பிரிவுகள்.
ஆதியாகமம் 10 : 21 (ECTA)
எப்பேத்தின் மூத்த சகோதரன் சேமுக்குப் புதல்வர் பிறந்தனர். சேம் ஏபேரியரின் முதுபெருந்தந்தை.
ஆதியாகமம் 10 : 22 (ECTA)
சேமின் ஏனைய புதல்வர்: ஏலாம், அசீரியா, அர்பகசாது, லூது, ஆராம்.
ஆதியாகமம் 10 : 23 (ECTA)
ஆராமின் புதல்வர்: ஊசு, ஊல், கெத்தெர், மாசு.
ஆதியாகமம் 10 : 24 (ECTA)
அர்பகசாதுக்குச் செலாகு பிறந்தான். செலாகிற்கு ஏபேர் பிறந்தான்.
ஆதியாகமம் 10 : 25 (ECTA)
ஏபேருக்கு புதல்வர் இருவர் பிறந்தனர்; ஒருவனின் பெயர் பெலேக்கு. ஏனெனில், அவன் காலத்தில்தான் உலக மக்கள் பிரிந்தனர். அவன் சகோதரனின் பெயர் யோக்தான்.
ஆதியாகமம் 10 : 26 (ECTA)
யோக்தானின் புதல்வர்; அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,
ஆதியாகமம் 10 : 30 (ECTA)
அவர்கள் வாழ்ந்த நாடு மேசாவிலிருந்து கிழக்கே செப்பார் செல்லும் திசையில் இருந்த மலைநாடுவரை பரவியிருந்தது.
ஆதியாகமம் 10 : 31 (ECTA)
இவை சேம் புதல்வரின் குடும்ப, மொழி, நாட்டு, இனவாரியான பிரிவுகள்.
ஆதியாகமம் 10 : 32 (ECTA)
இவை நோவா புதல்வரின் வழிவந்த குடும்பங்களின் இனவாரியான தலைமுறைகள்.இவர்கள் வழிவந்த மக்களினங்களே வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகின் எல்லா நாடுகளிலும் பரவின.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32