கலாத்தியர் 5 : 1 (ECTA)
4.அறிவுரைப் பகுதிகிறிஸ்தவரின் உரிமை வாழ்வு கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
கலாத்தியர் 5 : 2 (ECTA)
பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் பயனே இல்லை.
கலாத்தியர் 5 : 3 (ECTA)
விருத்தசேதனம் செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் திருச்சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமை உண்டு என்பதை நான் மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறேன்.
கலாத்தியர் 5 : 4 (ECTA)
திருச்சட்டம் சார்ந்த செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக முயலும் நீங்கள் கிறிஸ்துவுடன் உறவற்றுப் போய்விட்டீர்கள்; அருளை இழந்து விட்டீர்கள்.
கலாத்தியர் 5 : 5 (ECTA)
ஆனால், நாம் தூய ஆவியின் துணையால் நம்பிக்கையின் வழியாய் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவோம் என்னும் எதிர்நோக்கு நிறைவேறும் என ஆவலோடு காத்திருக்கிறோம்.
கலாத்தியர் 5 : 6 (ECTA)
கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர், விருத்தசேதனம் செய்து கொண்டாலும் செய்து கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு எப்பயனும் இல்லை. அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது.
கலாத்தியர் 5 : 7 (ECTA)
நீங்கள் நன்றாகத்தானே முன்னேறி வந்தீர்கள்! அப்படியிருக்க உண்மைக்குக் கீழ்ப்படியாதபடி இப்போது உங்களைத் தடுத்தவர் யார்?
கலாத்தியர் 5 : 8 (ECTA)
இவ்வாறு செய்யத் தூண்டியவர் உங்களை அழைத்த இறைவன் அல்ல.
கலாத்தியர் 5 : 9 (ECTA)
சிறிதளவு புளிப்புமாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கிறது. [* 1 கொரி 5: 6 ]
கலாத்தியர் 5 : 10 (ECTA)
மாறுபட்ட கொள்கை எதையும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எனக்குத் தந்துள்ளார். ஆனால், உங்கள் உள்ளத்தைக் குழப்புவோர் எவராய் இருந்தாலும் அவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறுவார்கள்.
கலாத்தியர் 5 : 11 (ECTA)
சகோதர சகோதரிகளே, விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என அறிவிப்பதாய் இருந்தால் நான் ஏன் இன்னும் துன்புறுத்தப்பட வேண்டும்? நான் அவ்வாறு அறிவித்தால் சிலுவை ஒரு தடையாக இருக்க இடமில்லையே!
கலாத்தியர் 5 : 12 (ECTA)
உங்கள் உள்ளங்களில் குழப்பம் உண்டாக்குகிறவர்கள் தங்களை அலிகளாகவே ஆக்கிக் கொள்ளட்டும்.
கலாத்தியர் 5 : 13 (ECTA)
அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். [* உரோ 6:15; 1 பேது 2: 16 ]
கலாத்தியர் 5 : 14 (ECTA)
“உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக” என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. [* லேவி 19: 18 ]
கலாத்தியர் 5 : 15 (ECTA)
ஆனால், நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!
கலாத்தியர் 5 : 16 (ECTA)
தூய ஆவியின் கனியும் ஊனியல்பின் செயல்களும் எனவே நான் சொல்கிறேன்; தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்.
கலாத்தியர் 5 : 17 (ECTA)
ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய முடிவதில்லை. [* உரோ 7:15-23; யாக் 4: 1 ]
கலாத்தியர் 5 : 18 (ECTA)
நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.
கலாத்தியர் 5 : 19 (ECTA)
ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி,
கலாத்தியர் 5 : 20 (ECTA)
சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு,
கலாத்தியர் 5 : 21 (ECTA)
அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன்.
கலாத்தியர் 5 : 22 (ECTA)
ஆனால், தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை,
கலாத்தியர் 5 : 23 (ECTA)
கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை.
கலாத்தியர் 5 : 24 (ECTA)
கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். * கொலோ 3:5..
கலாத்தியர் 5 : 25 (ECTA)
தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.
கலாத்தியர் 5 : 26 (ECTA)
வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர்மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26