கலாத்தியர் 4 : 1 (ECTA)
[PS] நான் சொல்வது இதுவே; தந்தையின் சொத்து அனைத்துக்கும் உரிமையுடையோர் சிறுவராய் இருக்கும்வரை அவர்களுக்கும் அடிமைகளுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை;
கலாத்தியர் 4 : 2 (ECTA)
தந்தை குறித்த நாள் வரும்வரை அவர்கள் மேற்பார்வையாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.
கலாத்தியர் 4 : 3 (ECTA)
அவ்வாறே, நாமும் சிறுவர்களாய் இருந்தபோது உலகின் பஞ்சபூதங்களுக்கு அடிமைப்பட்டிருந்தோம்.
கலாத்தியர் 4 : 4 (ECTA)
ஆனால், காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு
கலாத்தியர் 4 : 5 (ECTA)
கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.[PE]
கலாத்தியர் 4 : 6 (ECTA)
[PS] நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள்* உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே’ எனக் கூப்பிடுகிறது. [* உரோ 8:15-17 ]
கலாத்தியர் 4 : 7 (ECTA)
ஆகையால், இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே. [* உரோ 8:15-17 ] [PE]
கலாத்தியர் 4 : 8 (ECTA)
{கலாத்தியரைப் பற்றிய கவலை} [PS] ஒரு காலத்தில் நீங்கள் கடவுளை அறியாதிருந்தீர்கள்; அப்போது கடவுள் அல்லாதவற்றுக்கு அடிமைகளாய் இருந்தீர்கள். [* உரோ 8:15-17 ]
கலாத்தியர் 4 : 9 (ECTA)
ஆனால், இப்பொழுது நீங்கள் கடவுளை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்; உண்மையில், கடவுளே உங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அப்படியிருக்க வலுவற்றவையும் வறியவையுமான பஞ்சபூதங்களிடம் திரும்பிப் போய் அவற்றுக்கு மீண்டும் அடிமைகள் ஆவதற்கு நீங்கள் விரும்புவது ஏன்?
கலாத்தியர் 4 : 10 (ECTA)
நாள், மாதம், காலம், ஆண்டு என்று பார்க்கிறீர்கள்!
கலாத்தியர் 4 : 11 (ECTA)
உங்களுக்காக நான் பாடுபட்டு உழைத்தது வீண்தானா என அஞ்சவேண்டியிருக்கிறது.[PE]
கலாத்தியர் 4 : 12 (ECTA)
{பழைய நினைவுகள்} [PS] சகோதர சகோதரிகளே, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்; நீங்கள் என்னைப்போல ஆகுங்கள்; நான் உங்களைப்போல ஆனேன் அல்லவா? நீங்கள் எனக்கு அநீதி ஒன்றும் இழைக்கவில்லை.
கலாத்தியர் 4 : 13 (ECTA)
என் உடல்நலக் குறைவு தான் உங்களுக்கு முதன் முதல் நற்செய்தி அறிவிக்க எனக்கு வாய்ப்பு அளித்தது. இது உங்களுக்குத் தெரியுமே.
கலாத்தியர் 4 : 14 (ECTA)
என் உடல்நிலையை முன்னிட்டு என்னைப் புறக்கணித்து வெறுத்து ஒதுக்கும் சோதனை உங்களுக்கு வரவில்லை. அதற்கு மாறாக, கடவுளின் தூதரை ஏற்றுக்கொள்வதுபோல் ஏன், கிறிஸ்து இயேசுவையே ஏற்றுக் கொள்வது போல், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்.
கலாத்தியர் 4 : 15 (ECTA)
என்னை ஏற்றுக் கொள்வது ஒரு பெரும் பேறு என்றும் கருதினீர்கள். அந்த மனநிலை இப்பொழுது எங்கே? முடிந்திருந்தால் உங்கள் கண்களையும் எனக்காகப் பிடுங்கிக் கொடுத்திருப்பீர்கள்! உங்களைப்பற்றி நான் இதை உறுதியாகச் சொல்லமுடியும்.
கலாத்தியர் 4 : 16 (ECTA)
இப்போது உங்களுக்கு உண்மையைச் சொன்னதால் உங்கள் பகைவன் ஆனேனா?[PE]
கலாத்தியர் 4 : 17 (ECTA)
[PS] முன்பு நான் குறிப்பிட்டவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், அந்த ஆர்வம் நேர்மையானது அல்ல; நீங்களும் அதே ஆர்வம் காட்ட வேண்டுமென்று அவர்கள் உங்களை என்னிடமிருந்து பிரிக்க விரும்புகிறார்கள்.
கலாத்தியர் 4 : 18 (ECTA)
உங்கள் நடுவில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மற்றவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுவது எப்பொழுதும் நல்லதே; ஆனால், அந்த ஆர்வம் நேர்மையானதாய் இருத்தல் வேண்டும்.
கலாத்தியர் 4 : 19 (ECTA)
என் பிள்ளைகளே, உங்களில் கிறிஸ்து உருவாகும்வரை உங்களுக்காக மீண்டும் பேறுகால வேதனையுறுகிறேன்.
கலாத்தியர் 4 : 20 (ECTA)
உங்களைப் பொறுத்த மட்டில் எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கிறது. இப்பொழுது உங்களோடு இருந்து வேறுவகையாய்ப் பேசிப் பார்த்ததால் நலமாயிருக்கும்![PE]
கலாத்தியர் 4 : 21 (ECTA)
{ஆகாரும் சாராவும்} [PS] திருச்சட்டத்திற்கு உட்பட்டிருக்க விரும்புகிறீர்களே, அச்சட்டம் சொல்வதை நீங்கள் கேட்டதில்லையா?
கலாத்தியர் 4 : 22 (ECTA)
ஆபிரகாமுக்கு மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்; மற்றவன் உரிமைப்பெண்ணிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது.
கலாத்தியர் 4 : 23 (ECTA)
அடிமைப் பெண்ணின் மகன் இயல்பான முறைப்படி பிறந்தவன்; உரிமைப் பெண்ணின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன். [* தொநூ 16:15; 21:2 ]
கலாத்தியர் 4 : 24 (ECTA)
இது ஒரு தொடர் உருவகம். இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர். ஒன்று ஆகார் குறிக்கும் சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை. அது அடிமை நிலையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறது. [* தொநூ 17:16 ]
கலாத்தியர் 4 : 25 (ECTA)
அரேபியாவிலுள்ள சீனாய் மலை இப்பொழுதிருக்கும் எருசலேமுக்கு அடையாளம். ஏனெனில், இந்த எருசலேம் தன் மக்களுடன் அடிமையாய் இருக்கிறது.
கலாத்தியர் 4 : 26 (ECTA)
மேலே உள்ள எருசலேமோ உரிமைப்பெண்; நமக்கு அன்னை.
கலாத்தியர் 4 : 27 (ECTA)
ஏனெனில், [QS][SS]“பிள்ளைபெறாத மலடியே,[SE][SS] மகிழ்ந்து பாடு![SE][SS] பேறுகால வேதனை அறியாதவளே,[SE][SS] அக்களித்துப் பாடி முழங்கு![SE][SS] ஏனெனில், கைவிடப்பட்டவளின்[SE][SS] பிள்ளைகள்[SE][SS] கணவனோடு வாழ்பவளின்[SE][SS] பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள்”[SE][SS] என்று மறைநூலில் எழுதியுள்ளது.[SE][QE]
கலாத்தியர் 4 : 28 (ECTA)
ஆகவே, சகோதர சகோதரிகளே, நீங்களும் ஈசாக்கைப்போல வாக்குறுதியின் படி பிறந்த பிள்ளைகள். [* எசா 54:1 ]
கலாத்தியர் 4 : 29 (ECTA)
ஆனால், இயல்பான முறைப்படி பிறந்தவன் தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தவனை அன்று துன்புறுத்தியவாறே இன்றும் நடக்கிறது.
கலாத்தியர் 4 : 30 (ECTA)
எனினும் மறைநூல் கூறுவதென்ன? “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் துரத்தி விடும்; ஏனெனில், அடிமைப் பெண்ணின் மகன் உரிமைப் பெண்ணின் பங்காளியாக இருக்கக்கூடாது.” [* தொநூ 21:9 ]
கலாத்தியர் 4 : 31 (ECTA)
ஆகவே, சகோதர சகோதரிகளே, நாம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; உரிமைப் பெண்ணின் மக்கள். [* தொநூ 21:10 ] [PE]
❮
❯